பப்ஜியால் பக்கவாதத்தில் பாதிக்கப்பட்ட 19 வயது இளைஞர்.!

0
408
Pubg-Mobile

உலகம் தற்போது வேகமாக வளர்ந்து நவீன காலமாக மாறிக் கொண்டு வருகிறது. என்னதான் டிஜிட்டல் முறைய, மாடர்ன் டெக்னாலஜியில் வளர்ந்து வரும் நாடாக இருந்தாலும் இப்படி உயிரைக் கொல்லும் அளவிற்கு டெக்னாலஜியில் வளர்வது அவசியமற்றது.முன்னரெல்லாம் சாப்பிடும் பொருளின் மூலமோ, சுவாசிக்கும் காற்றின் வழியாகவோ அல்லது தொற்றும் கிருமிகளான வைரஸ்,பாக்டீரிய மூலம் தான் மனிதர்களுக்கு பல பல வியாதிகளும் ,பாதிப்புகளும் ஏற்பட்டது.ஆனால் தற்போது வளர்ந்து வரும் டெக்னாலஜி தொழில் நுட்பங்களின் மூலமாக மட்டும் தான் மனிதர்கள் வியாதியும் , இறப்பும் நேரிடுகிறது என்ற ஆய்வின் மூலம் தெரியப்படுகிறது. சமூக வலைத்தளங்களில் தற்போது புதியதாக வந்த கேம்(விளையாட்டு ) ஒன்று தான் “பப்ஜி”.இன்றய காலகட்டத்தில் கொடூரமான விளையாட்டு பட்டியல்களில் இதுவும் ஒன்று.இதனால் இன்றைய இளைஞர்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

Image result for pubg game


காலை எழுந்திருக்கும் போதும் இரவு உறங்கும் வரை இந்த பப்ஜி விளையாட்டிலேயே கவனம் அதிகம் செலுத்துகின்றனர் இன்றய இளைனர்கள். இதனால் நிறைய பிரச்சனைகள் விளைகிறது.அவர்கள் சாப்பிடும் போது, நடக்கும் போது. உட்காரும்போதுஎன பலவிடங்களில் அதிகமாக இந்த பப்ஜி கேம்யை விளையாடுகின்றனர் என்று அறிஞர்கள் ஆய்வின் மூலம் தெரிவித்தனர். அப்படி பாதிக்கப்பட்டவர்கள் பட்டியலில் இளைஞர்கள் தான் அதிகம் உள்ளனர். அப்படிப்பட்ட இளைஞர்களில் 19 வயதுடைய இளைஞர் ஒருவன் வனபர்தி. வனபர்திக்கு இந்த பப்ஜி விளையாட்டின் மூலம் பக்கவாதம் ஏற்பட்டது. சமூக வலைதளங்களில் அதிகமாக இந்த பப்ஜி விளையாட்டை பற்றி விமர்சனங்கள் வெளியிடப்படுகின்றன.

முன்னரெல்லாம் இளைஞர்கள் டப்ஸ்மாஷ், வாட்ஸ்அப், ஃபேஸ்புக் என்ற பிரபலமான செயலியை பயன்படுத்துவதில் தான் அதிகம் மூழ்கி இருப்பார்கள். ஆனால் அந்த அளவிற்கு அதிகமாகவே பப்ஜி விளையாட்டில் ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால் தற்போது உள்ள இளைஞர்கள் ஹெட்செட்டை காதில் மாட்டிக்கொண்டு யார்?என்ன ?நடக்குது கூட தெரியாத அளவிற்கு பப்ஜி விளையாட்டை விளையாடிக் கொண்டிருக்கின்றனர். அவர்களின் பக்கத்தில் சென்றாலே சில சமயம் கோபமாகவும், சில சமயம் சந்தோசமாகவும் , கூச்சலிடும் அவர்களுடைய உனர்வுகளை வெளிப்படுத்துகின்றனர். அந்த விளையாட்டின் மீது உள்ள மோகம் இன்றுவரை இளைஞர்களுக்கு குறையவில்லை என்பதற்காக ஹைதராபாத்தில் ஒரு சம்பவம் நிகழ்ந்தது.

Image result for pubg game


ஹைதராபாத்தில் வசித்து வரும் வனபர்தி என்ற 19 வயது உடைய இளைஞன் ஒருவன் இந்த பப்ஜி கேம்பில் அதிகமாக ஈடுபாடு உள்ளவர். இவன் ஹைதராபாத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் பி எஸ் சி இரண்டாம் ஆண்டு படித்து வருகிறான். கடந்த சில தினங்களுக்கு முன்பாக அந்த இளைஞன் உடைய ஒரு கை மற்றும் கால் இரண்டும் இயங்கவில்லை என்று அவன் கூறினான். இதைக் கேட்டு உடனே மருத்துவமனையில் சேர்த்து அவனை பரிசோதித்தனர். பரிசோதனை செய்த டாக்டர்கள் கூறியது, மூளைக்கு செல்லும் இரத்தம் தடைபட்டதால் இவருக்கு பக்க வாதம் ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த குறைபாடு காரணம் , அவன் கவனம் முழுவதும் கேம் விளையாடுவதிலும் , இதனால் முறையான உணவையும், தண்ணீரையும் அவன் எடுத்துக் கொள்ளவில்லை .மேலும் தூக்கமும் சரியாக இல்லை. இதையெல்லாம் பார்க்கும் வகையில் மூளைக்கு செல்லும் ரத்தம் தடை ஏற்பட்டுள்ளது என தெரிவித்தார். ஒரு நாளைக்கு 8 மணியிலிருந்து 10 மணி நேரம் வரை மொபைலில் கேம் விளையாடுவதை அவன் நோக்கமாகக் கொண்டிருந்தான் . இதனால் சிறிது சிறிதாக உடல் எடையும் குறைந்து கொண்டே வந்தான்.

மேலும், உறவினர்கள் கூறியது, மருத்துவமனைக்கு அழைத்து வரும் சில நாட்களுக்கு முன் அவனுக்கு அடுத்தடுத்து தலைவலி ,வாந்தி, உடல் சோர்வு போன்ற பல பாதிப்புகள் இருந்ததாகவும் கூறினார்கள். இது குறித்து இளைஞனின் தாயாரிடம் கேட்டபோது அவன் இரவு 8 மணிக்கு பப்ஜி கேம் ஐ விளையாட தொடங்கினால் காலை மாலை 5 மணி வரை விளையாடிக் கொண்டே இருப்பான். இரவு முழுவதும் உறங்க மாட்டான், சாப்பிட மாட்டான்.அவன் காலையில் நியூஸ் பேப்பர் போடுகின்ற வேலையில் இருப்பதால் அந்த சிறிது நேரம் மட்டும்தான் கேமை நிறுத்திவிட்டு வேலைக்கு செல்வான். கல்லூரியில் கிளாஸ் பீரியட் இல்லாதபொழுதும் பப்ஜி கேம் தான் விளையாடிக் கொண்டிருப்பான். இரவு நேரத்தில் அனைவரும் உறங்கினாலும் இவன் மட்டும் போர்வைக்குள் சென்று அமைதியாக உறங்காமல் பஜ்ஜி கேமை ஆடிக் கொண்டே இருப்பான். இதனால் நிறைய நாட்கள் கூட உணவு சாப்பிடவில்லை. சரியாக நீர் அருந்துவது இல்லை போன்ற பல அன்றாட வேலைகளில் கவனம் குறைந்து காட்டியிருந்தான் அதேசமயம் கல்லூரி விடுமுறை நாட்களில் கூட காலையில் விளையாட ஆரம்பித்தான் மறுநாள் வரியும் விளையாடிக் கொண்டே இருப்பான் என்று மன வேதனையுடன் கூறினார் அவரின் தாயார்.

ஒரு சில மாநிலங்களில் இந்த பப்ஜி விளையாட்டிற்கு தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த விளையாட்டு என்பது மன நிம்மதிக்கும், உடல் புத்துணர்ச்சி கிடைப்பதற்காக விளையாடுவது. ஆனால் அதுவே தொழிலாக கொண்டு காலையில் இருந்து இரவு வரை விளையாடினால் அதனால் பெரும் விளைவுகள் ஏற்படும் என்பது இந்த சம்பவத்தின் மூலம் தெரியவந்தது. இந்த பப்ஜி விளையாடுவது காரணமாக நிறைய பாதிப்புகளும் , மூளை மூளை சம்பந்தமான பிரச்சனைகளும் , உடல் ரீதியாக நிறைய பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இதனை கருத்தில் கொண்டு இதை உருவாக்கிய நிறுவனம் இதை கேம்யை தடை செய்தால் சில பாதிப்புகளில் இருந்து பாதுகாக்கப்படலாம் என்று தெரிவித்தார்கள்.