Home ஆன்மீகம் சீதையின் முன் தோன்றிய விஸ்வரூப ஆஞ்சநேயர் எங்குள்ளார் தெரியுமா?

சீதையின் முன் தோன்றிய விஸ்வரூப ஆஞ்சநேயர் எங்குள்ளார் தெரியுமா?

- Advertisement -

dsdsfராவணன் சீதா பிராட்டியை கடத்தி கொண்டுபோய் அசோக வனத்தில் வைத்திருந்தபோது. அவர் ஸ்ரீ ராமனை நித்தமும் நினைத்து வாடிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ராம தூதனான அனுமன் சீதா பிராட்டிக்கு விஸ்வரூப காட்சி தந்தார் என்பது நாம் அறிந்ததே.

அதே விஸ்வரூபத்தில், அழியா நிலை என்னும் ஊரில் அனுமன் இன்றும் காட்சிதந்து கொண்டிருக்கிறார். அறந்தாங்கி-புதுக்கோட்டை சாலையில் இருந்து ஐந்து கி.மீ. தொலைவில் உள்ளது அழியா நிலை என்னும் ஊர்.இங்குள்ள ஆஞ்சநேயர் கோவில் மிகவும் பிரபலமானது.

- Advertisement -

இரண்டு அடி பீடத்தில், ஒன்பது அடி உயரத்தில் இங்கு விஸ்வரூப தரிசனம் தருகிறார் ஆஞ்சநேயர். இந்த ஆலயத்திற்கு அருகில் ஒரு தியான மண்டபம் உள்ளது. அதற்கு முன்பாக 23 அடியில் மிகப்பெரிய கதாயுதம் ஒன்று உள்ளது. பார்பவர்களை பிரமிக்கவைக்கும் அளவிற்கு உள்ளது இங்குள்ள ஆஞ்சநேயர் சிலையும் கதாயுதமும்.

இந்த கோவிலில் உள்ள விநாயகரை தரிசித்துவிட்டு அதற்கு பின் கொடிமரத்தைச் சுற்றி விட்டு அதற்கு பின்பு மூலஸ்தானத்திற்குச் சென்று அனுமனை மனதார வேண்டினாள், சீதையின் மனதில் இருந்த துன்பங்கள் அனைத்தும் அனுமனை கண்ட மாத்திரத்தில் எப்படி விலகியதோ அதுபோல நம் வாழ்வில் உள்ள துன்பங்கள் அனைத்தும் விலகிச்செல்லும் என்பது நம்பிக்கை.

- Advertisement -
96,044FansLike