Home அருமையான தகவல்கள் ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப் உயிருடன் இருக்கிறாரா.! சர்ச்சையை ஏற்படுத்திய புகைப்படம்.!

ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப் உயிருடன் இருக்கிறாரா.! சர்ச்சையை ஏற்படுத்திய புகைப்படம்.!

0
189
steve

உலக மக்கள் ஸ்டீவ் ஜாப்ஸ்உடைய புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் கண்டு சந்தோஷத்திலும் ,அதிர்ச்சியிலும் உள்ளனர். ஸ்டீவ் ஜாப்ஸ் உயிரோடுதான் இருக்கிறார் என்று சமூகவலைத்தளங்களில் ஒருவர் பரப்பிய வதந்தி மக்களிடையே பெரும் ஆர்ப்பாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.இதனால் ஒரு சில மக்கள் ஸ்டீவ் ஜாப்ஸ் உயிரோடுதான் இருக்கிறார் என்று நம்புகிறார்கள். ஸ்டீவ் ஜாப்ஸ் தொழில்துறையின் தலைவராகவும் , மிகவும் சிறந்த கண்டுபிடிப்பாளரகவும் , தொழில்நுட்பத்துறைக்கே கடவுளாகவும் மக்களால் பார்க்கப்பட்டவர்.தகவல் தொழில்நுட்பத் துறையின் ஜாம்பவானாக கருதப்படுகிறார்

கணினி துறையில் நிறைய புரட்சிகள் செய்து வந்தவர். உலகில் உள்ள பிரபலமான நிறுவனங்களில் ஒன்றான “ஆப்பிள்” நிறுவனத்தை உருவாக்கியவர்களில் ஒருவர். இவரை உலகில் போற்றப்படாதவர் எவருமிலர். இவர் தன் வாழ்நாள் முழுவதும் கண்ட கனவும் அதற்காக எடுத்த முயற்சிகளும் ஆச்சரியப்படத்தக்கவை. ஸ்டீவ் ஜாப்ஸ் சான்பிரான்சிஸ்கோ நாட்டில் பிறந்து ,அங்கேயே இறந்தும் போனார். இவர் பிக்சர் அசை படநிறுவனம், வால்ட் டிஸ்னி போன்ற பல தொழில்நுட்பத்துறையில் ஆட்சியராக பணிபுரிந்தார்.ஸ்டீவ் ஜாப்சின் வாழ்க்கை தொழில் துறையில் சாதிக்க நினைக்கும் பலருக்கும் ஒரு எடுத்துக்காட்டாக இருக்கும். இவர் ஒரு சிறந்த உழைப்பாளி,திறமையான நிர்வாக தலைவர் தொழில்நுட்பத்தின் தந்தை என்று போற்றப்படுபவர்.
இவர் 2011ம் ஆண்டில் தன் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் பதவியிலிருந்து விலகினார். மேலும் பதவியில் இருந்து விலகிய சில வாரங்களிலேயே அவர் உடல்நிலை மிகவும் குன்றியது. அவர் புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்ததால் தன்னுடைய 56 வயதிலேயே சான்பிரான்சிஸ்கோவில் காலமானார். இவர் தொழில்நுட்பத்துறையில் பண்ணாத சாதனைகள் இல்லை,மேலும் நிறைய கண்டுபிடிப்புகளும் அதற்கான உரிமைகளையும் வாங்கியிருந்தார். இப்படி உலகம் முழுவதும் உள்ள பிரபலமான மக்களால் பாராட்டப்பட்ட ஸ்டீவ் ஜாப்ஸ் புகைப்படத்தை சில நாட்களுக்கு முன்பாக சமூக வலைத்தளங்களில் ஒருவர் பரப்பிய செய்தி வைரலாக உள்ளது. இப்படி சமூக வலைத்தளங்களில் பரவி வரும் அந்த புகைப்படம் எகிப்தில் எடுக்கப்பட்டதாகும். எகிப்திலுள்ள ஒருவரை எடுத்த புகைப்படம் ஸ்டீவ் ஜாப்ஸ் போல ஒரே மாதிரியாக உள்ளது. இதனால் அந்த புகைப்படம் அதிகமாக சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு இதன் மூலம் நிறைய மக்கள் ஸ்டீவ் ஜாப்ஸ் இறக்கவில்லை உயிரோடுதான் இருக்கிறார்கள் என்றும் நம்புகிறார்கள்.


இதற்கு சில ஆதாரங்களையும் அவர்கள் கூறினார்கள் ஸ்டீவ் ஜாப்ஸ் எப்போதும் ஷூ அணிய மாட்டார். அதேபோலவே அந்த புகைப்படத்தில் உள்ளவரும் ஷூ அணியவில்லை. அதற்கு எதிராக மற்றொருவர் கூறியது, ஸ்டீவ் ஜாப்ஸ் கையில் எப்போதும் ஆப்பிள் கடிகாரம் அணிந்திருப்பார். அந்த புகைப்படத்தில் உள்ளவரின் கையில் இல்லையே என்று நகைச்சுவையாக தெரிவித்தார். இதுவரை இவர் கம்ப்யூட்டர் மற்றும் மொபைல் தொடர்பான நிறைய சாதனைகள் படைத்துள்ளார். அவரை இந்த உலகம் தொழிலதிபராக பார்க்காமல் இந்த உலகிற்கு பல கண்டுபிடிப்புகளை தந்த கண்டுபிடிப்பாளராக கருதினார்கள். இவரின் கண்டுபிடிப்புகள் தொடங்கிய காலத்திலிருந்தே கூகுளுக்கு ஆப்பிள்ளைக்கும் நிறைய வர்த்தக போராட்டம் நடந்து கொண்டிருந்தது. அதனால் ஒருமுறை கூகுளின் சிஇஓ அவரை நிர்வாக பொறுப்பை ஏற்குமாறு கூறினார். ஆனால் அதை மறைத்து தான் உருவாக்கிய ஆப்பிள் நிறுவனம் மீது மட்டும்தான் கவனம் செலுத்துவேன் என்று கூறினார்.
ஸ்டீவ் ஜாப்ஸ் மறைவுக்குப்பின் கூகுள் நிறுவனம் தன்னுடைய ஹோம் பேஜில் அவரைப்பற்றி இரங்கலை தெரிவித்தது. அமெரிக்க அதிபர் ஒபாமா கூட, தமது வாழ்க்கையை மாற்றியது அவர் தான் தன்னுடைய தொழிலுக்கு புது அர்த்தத்தை தந்தவர்.மேலும் இந்த உலகமே பெரும் இழப்பை இழந்தது என்று கருதி அஞ்சலி செலுத்தினார். மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ், ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூகர்பெர்க் என பலரும் அஞ்சலியை தெரிவித்தனர். உலகில் உள்ள ஏராளமான மக்களும் சமூக வலைத்தளங்களில் ஸ்டீவ் ஜாப்ஸ் குறித்து அஞ்சலி தெரிவித்தார்கள்.தற்போது வெளிவந்த இந்த புகைப்படத்தின் மூலம் ஸ்டீவ் ஜாப்ஸை நினைவு கொள்ளவும் அவரின் சாதனைகளும், அவருடைய கண்டுபிடிப்புகளும் நினைவில் வந்தது அற்புதமான விஷயம் ஆகும்.