காட்டுத்தீயில் உயிர் பிழைத்த இளம்பெண் சொன்ன பரபரப்பு தகவல்கள்.

0
5
forest

தேனிமாவட்டத்தில் போடியை அடுத்து குரங்கணி மலை உள்ளது. இந்த மலையில் கடந்த 11-03-2018ம் தேதியன்று சென்னை,கோயமுத்தூர் மற்றும் ஈரோட்டை சேர்ந்த சுமார் 39 பேர் ட்ரக்கிங் சென்றனர்.

kurangani

கடந்த ஒருவார காலமாக தேனியை ஒட்டியுள்ள காட்டுப்பகுதிகளில் ஏற்பட்ட தீ படிப்படியாக அதிகரித்து 11-03-2018 மதியம் குரங்கணி மலையில் ட்ரக்கிங் சென்றவர்களின் பகுதியை சூழ்கின்றது. திடீரென்று காட்டுத்தீ காற்றின் வேகத்தில் அதிகரித்ததால் காட்டுத்தீயின் பிடியிலிருந்து தப்பிக்கமுடியாமல் பலரும் தீயில் சிக்கி படுகாயமடைந்தனர்.

தீயிலிருந்து தங்களை தற்காத்துக்கொள்ள முயன்று பாறைகளை நோக்கி கீழேவிழுந்தவர்களில் 10 பேர் இதுவரையிலும் தீக்கிரையாகி உயிரிழந்துள்ளனர்.காட்டுத்தீயை கண்டதும் அதிலிருந்து சுதாரித்துக்கொண்டு தப்பிய இளம்பெண் தற்போது அவர் எப்படி தப்பினார் என்பதை விவரித்துள்ளார்.சென்னையை சேர்ந்த கல்லூரி மாணவியான சஹானா இந்த குரங்கணி மலையேற்ற குழுவில் இணைந்து பயணித்தவர்.

Paneerselvam

விபத்தில் சிக்கி தப்பித்தது எப்படி என செய்தியாளர்களிடம் கூறியபோது “மலையேற்றத்தின் போது மதியம் அனைவரும் உணவருந்திக்கொண்டு மகிழ்ச்சியாக கதைகள் பேசிக்கொண்டிருந்தோம். அப்போது திடீரென்று காட்டுத்தீ வேகமாக எங்களை நோக்கி வந்தது. என்னசெய்வதென்று தெரியாமல் தவித்த அனைவரும் ஆளுக்கொரு புறமாய் ஓடினோம். அப்போது தானும் எனது தோழியும் எப்படியாவது காட்டுத்தீயிலிருந்து தப்பிக்க மேலேயிருந்து பாறைகளுக்கு இடையேயான ஒரு பெரிய பள்ளத்தில் குதித்தோம்.

நாங்கள் குதிப்பதை பார்த்த மேலும் சிலரும் பள்ளத்தில் குதித்தனர்.கீழே குதித்ததில் பெரும்பாலோனோர் சிறு காயங்களுடன் காட்டுத்தீயில் சிக்காமல் அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்தோம். பின்னர் அங்கிருந்து எங்களை கிராமவாசிகள் மற்றும் வனத்துறை அதிகாரிகள் மீட்டனர். ஆனாலும் எங்களோடு வந்த பலரும் இறந்துவிட்டனர் என்று வேதனையுடன் தெரிவித்தார்.

speech