பாபா ராம்தேவ் க்கு உதவிய பாஜக, புதிய முறைகேடு கண்டுபிடிப்பு !

0
2
baba

வடமாநிலங்களில் மிகவும் பிரபலமான யோகா குரு பாபா ராம்தேவ். அதிவேகமாக வளர்ந்துவரும் கார்பரேட் சாமியார்களில் முக்கியமான ஒரு நபர்தான் இவர். இந்த பாபா ராம்தேவ்வின் நிறுவனம் தான் பதஞ்சலி. காங்கிரஸ் காலம் வரையிலும் பெரிதாக வளர்ச்சியடையாத இந்த பதஞ்சலி நிறுவனம் தான் பாஜக ஆட்சியில் ராக்கெட் வேகத்தில் வளர்ச்சியடைந்தது.

modi

இதற்கு பாஜக அரசாங்கம் பலவழிகளில் இவர்களுக்கு உதவியுள்ளது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

பாஜக ஆளும் அத்தனை மாநிலங்களிலும் இந்த பாபா ராம்தேவ்வின் நிறுவனத்திற்கு 2000க்கும் அதிகமான ஏக்கர் நிலங்கள் ஏலத்தில் மிகமிக குறைவான விலைக்கு விற்கப்பட்டுள்ளது அம்பலமாகியுள்ளது. இந்த நில ஏலம் எடுத்தல் அனைத்திலும் பாஜகவின் தலையீடுகள் இருந்துள்ளது என்பதை ராய்ட்டர்ஸ் என்கிற ஆங்கில ஊடகம் ஆதங்களோடு வெளியிட்டுள்ளது.

இதே பதஞ்சலி நிறுவனம் காங்கிரஸ் ஆட்சி இருந்த 2013 வரையில் ஒரு ஆண்டு வியாபாரமே 1000கோடிகளுக்குள் தான் செய்து வந்தது. பாஜக ஆட்சிக்கு வந்த ஆண்டு முதல் இந்த வியாபாரமானது ஆண்டுக்கு நான்கு மடங்கு வரை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

babaramdev

பதஞ்சலி நிறுவனத்தின் மற்றொரு தூணான ஆச்சார்யா பாலகிருஷ்ணா இந்தியாவின் பணக்காரர் பட்டியலில் கடந்த வருடம் 25 ஆம் இடத்தில் இருந்ததார். இந்த வருடம் 8 ஆவது இடத்துக்கு முன்னேறி உள்ளார். இவரது சொத்து மதிப்பு 173% மடங்கு உயர்ந்து தற்போது ரூ.70,000 கோடியாக உள்ளது.

இவையெல்லாம் தான் பாஜக ஆட்சியில் கார்பரேட் சாமியார்கள் தான் அதிகளவில் சம்பாதித்து வருகின்றனர் என்பதை தோலுரித்துகாட்டுகின்றது