பாபர் கட்டியது மசூதியே இல்லை.! நீதிமன்றத்தில் எழுந்த புதிய சர்ச்சை.!

0
277
babar

புதுடில்லியில் முகலாய மன்னர் பாபர் கட்டியது மசூதியே இல்லை என்று இந்து அமைப்பு சார்பில் உச்சநீதிமன்றத்தில் போடப்பட்ட வழக்கு சில மாதங்களாகவே நடந்து கொண்டிருக்கிறது.உத்திரப்பிரதேச மாநிலத்தில், அயோத்தியில் உள்ள இந்த பிரச்சனைக்குரிய இடத்தில் உள்ள மசூதி முகலாய மன்னன் பாபரால் தான் கட்டப்பட்டதாக முஸ்லிம் இனத்தவரால் கூறப்படுகிறது. ஆனால் அந்த கட்டடம் மசூதியே இல்லை, அதை மசூதி ஆகும் அங்கீகாரம் தரப்படவில்லை என்று இந்து அமைப்பு சார்பில் விவாதிக்கப்பட்டது. இந்த அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் பல மாதங்களாக நடந்து கொண்டு வருகிறது.இதற்கு தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகோய், அவர் தலைமையில் 5 நீதிபதிகள் அமர்த்தி விசாரித்து வருகிறார்கள்.

Image result for babri masjid

வழக்கை விசாரித்த பதினைந்தாவது நாள் அன்று அகில பாரதிய ஸ்ரீ ராம் ஜன்மபூரி புனருதார சமிதி என்ற ஹிந்து அமைப்பின் சார்பில் உள்ள மூத்த வழக்கறிஞர் பி.என். மிஸ்ரா அவர்கள் கூறுகையில் ,ஒரு மசூதி என்பது இஸ்லாமிய சட்டத்தின் விதி முறைகள் படி தான் இருக்கவேண்டும். ஆனால் அந்த மசூதி எந்த ஒரு விதிமுறையும்,அதற்கான அம்சங்களையும் கொண்டு இல்லை. அயோத்தியில் முகலாய மன்னன் பாபர் கட்டப்பட்டதாக கூறப்படும் எந்த கட்டடம் முதலில் மசூதியே இல்லை என்றும் , அந்த இடம் முதலில் முகலாய மன்னர்களுக்கு சொந்தமான இடமில்லை என்றும் கூறினார்.

மேலும் முஸ்லிம்களின் சொத்துக்களை “வக்ப்” என்ற அமைப்புகள் தான் நிர்வகிக்கும். ஆனால் அப்படி மன்னரால் கட்டப்பட்ட மசூதி எந்த ஒரு அமைப்பின் கீழும் இருந்ததில்லை என்றும் தெளிவுபடுத்துகிறார். மேலும் இந்த கட்டிடம் மசூதியின் வடிவத்திலும் இல்லை. இதற்காக இஸ்லாமிய சட்டத்தில் கூறப்படும் ஆதாரங்கள் வெளிப்படுத்தினார். இஸ்லாமிய சட்டத்திலேயே கூறியுள்ள படி மற்றொரு மதத்தினருக்கு சொந்தமான நிலத்தில் மசூதியை கட்டக்கூடாது என்று முகலாய மன்னர் ஷாஜகான் வெளியிட்டார். இந்த அறிக்கையை அவர் நினைவுபடுத்தினார். ஒருமுறை முகலாய அரசர் ஷாஜகான் அரசு ஆணையில் இருந்த இந்து கோவிலுக்கு சொந்தமான நிலத்தை திருப்பியும் தந்தார்.ஆகவே இந்த நிலம் இந்துக்களுக்கு தான் சொந்தம் என்று அவர் வாதிட்டார்.

Image result for babri masjid case

அதைத் தொடர்ந்து நீதிபதிகள் கூறியது, இந்த மாதிரியான சர்ச்சைக்குரிய இடத்தில் மசூதி போன்ற ஒரு கட்டடம் இருந்தது உண்மைதான். இது 500 ஆண்டுகள் கழிந்துவிட்ட நிலையில் கட்டப்பட்டதாகவும், அந்த கட்டடத்தை பாபர் மசூதி அறிவித்தாரா? இல்லையா? என்று பல விவாதங்கள் பற்றி விசாரிப்பது கொஞ்சம் சிரமமான விஷயமாகத்தான் உள்ளது என்றும் கூறினார். அந்தக் கட்டிடத்தை முகலாய மன்னர் பாபர் தான் கட்டினாரா? இது இஸ்லாமிய சட்டத்தை மீறி செய்தாரா? என்று பல கேள்விகளை பற்றி விவாதிப்பது தேவையில்லாத விஷயம் என்று கூறுகிறார். மேலும் இந்த கட்டட மசூதியை பற்றிப் பல விசாரணைகள் நடந்து கொண்டு வருகிறது.