Home வியப்பூட்டும் செய்தி உலக கோப்பை குறித்து அப்போதே கணித்து கூறிய ஜோதிடர்.! இணையத்தில் கலக்கும் வீடியோ.!

உலக கோப்பை குறித்து அப்போதே கணித்து கூறிய ஜோதிடர்.! இணையத்தில் கலக்கும் வீடியோ.!

0
2415
Balaji

2019 ஆம் ஆண்டிற்கான உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து இந்திய அணி வெளியேறியது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த நிலையில் உலகக் கோப்பை தொடருக்கான இறுதிப்போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் யார் உலகக்கோப்பையை வெல்வார் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து நிலையில் நியூசிலாந்து அணி உலக கோப்பையை வெல்லும் என்று கூறி ஷாக் கொடுத்துள்ளார் பிரபல ஜோதிடர் பாலாஜி.

WATCH: An Astrologer from Tamil Nadu rightly predicted India's fate in ICC Cricket World Cup in January 2019; New Zealand to win the title

மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிப்பை முடித்துள்ள பாலாஜி, தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘விஹாரி வருட பலன்கள்’ என்ற நிகழ்ச்சியில் வருங்காலத்தை குறித்த நிகழ்வுகளை கணித்து கூறி வருகிறார். இவர் கூறும் கணிப்புகள் ஒவ்வொன்றும் சரியாகவே நடக்கிறது. சமீபத்தில் நடந்த பொதுத் தேர்தலில் நரேந்திர மோடி தான் பெரும்பான்மையைப் குவித்து வெற்றி பெறுவார் என்று அவர் கணித்திருந்தது அப்படியே பறித்து இருந்தது.

இந்த நிலையில் உலக கோப்பை தொடருக்கு முன்பாக இவர் புதுயுகம் தொலைக்காட்சியில் பங்குபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசுயுள்ள பாலாஜி, இந்த ஆண்டு கண்டிப்பாக நியூசிலாந்து, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தியா ஆகிய அணிகள் அரையிறுதிக்கு செல்லும் என்றும், இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் தான் அரையிறுதிப் போட்டியில் மோதும் அதிக வாய்ப்பு இருக்கும் என்றும் கூறியிருந்தார். மேலும், நியூசிலாந்து அணி இந்திய அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் என்றும் அவர் கூறியிருந்தார். அவர் கூறியது போலவே இந்திய அணி அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்திடம் தோற்றது.

அதே போல அந்த வீடியோவில் நியூஸிலாந்து அணியின் கேன் வில்லையாம்சன் தொடர் நாயகன் விருதை பெறுவார் என்றும் நயூிஸிலாந்து அணி தான் இந்த ஆண்டின் உலக கோப்பையை வெல்லும் என்றும் கூறியிருந்தார். இதுவரை அவர் கூறியது போலவே அனைத்தும் நடைபெற்றுள்ள நிலையில் உலக கோப்பை இறுதி போட்டியில் நியூஸிலாந்து அணி வெற்றி பெறுமா என்று மட்டும் நாம் பொறுத்திருந்து பார்க்கவேண்டும்.