ஆண்களின் தாடிகளுக்கு என கொண்டாடும் நாள்.! இந்தாங்க தாடி வளர அருமையான டிப்ஸ்கள்.!

0
180
vikram

இந்த உலகில் எவ்வளவோ பாரம்பரியமான விஷயங்கள் கொண்டாடப்பட்டு வருகின்றன. அந்த வகையில் ஆண்களின் வீரத்திற்கும் அழகும் பெருமை சேர்க்கும் விதமாக உலக தாடிகள் தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இப்படி தாடி, மீசை வளர பல குறிப்புகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகின்றன. ஒரு சில பேருக்கு மரபணு காரணமாக தாடி, மீசை முடிகள் தானாகவே அதிகமாக வளரும்.ஆனால் ஒரு சில பேருக்கு என்னதான் எண்ணெய் தடவினாலும் ,பல ட்ரீட்மெண்ட் செய்தாலும் தாடி முடிகள் வளர்வதில்லை என்று கூறுகிறார்கள்.

Image result for beard day

மீசையும், தாடியும் தான் ஒரு ஆண்ணுக்கு அழகு.ஒரு ஆண்ணின் கம்பிரமும் ,அழகும் அவர்களுடைய மீசை, தாடி என்பது தான் நம் முன்னோர்கள் காலத்தில் இருந்து இன்று வரை இருக்கும் பழக்கம். ஒரு ஆண் மேன்லியாக இருக்க முக்கிய காரணம் மீசை, தாடி என்றும் கூறுவார்கள். அந்த காலத்தில் நம் முன்னோர்கள் மீசையை முறுக்கி விட்டு நடந்து வந்தால் கம்பீரமும், கௌரவமும் உடன் இருப்பார்கள். அப்படி ஆண்களின் பெருமைக்குரிய விஷயங்களில் ஒன்றாக உள்ள இந்த தாடியைப் பற்றி கருத்துக்கள் வலைத்தளங்களில் கூறப்படுகின்றன.

ஆண்கள் மீசையை முறுக்கி விட்டு தாடியை கோதும் போது அழகோ அழகு என்று பெண்கள் பலர் கூறுவர்கள்.பொதுவாக நிறைய பெண்களுக்கு மீசை, தாடி வைத்திருக்கும் ஆண்களை தான் பிடிக்கும் என்று ஆய்வின் மூலம் தெரியவந்தது. மீசையை முறுக்கி தாடியை கோதுவதை பார்ப்பதற்கே அழகாக இருக்கும். இப்படி இருக்கும் தாடி முடிகள் ஒரு சில பேருக்கு தானாக எந்தவித பராமரிப்பும் இல்லாமல் வரும். ஆனால் ஒரு சில பேருக்கு என்ன முயன்றாலும் மருந்துகள் சாப்பிட்டாலும், எண்ணெய் தடவினாலும் வருவதில்லை. அவர்களுக்கான சில டிப்ஸ்கள் கூறப்படுகின்றன.

Image result for mens beared

தேங்காய் எண்ணெய்: பொதுவாக தலைக்கு எல்லோரும் பயன்படுத்துவார்கள், அதனால் தலைமுடி நன்கு வளரும் கருமையாகவும் இருக்கும் என்றும் தடவுவார்கள். இந்த தேங்காயுடன் ரோஸ்மேரி எண்ணெய்யும் சேர்த்து தடவினாள் தாடி வளரும் என்றும் ஒரு சில பேர் கூறுகிறார்கள்.

நெல்லிக்காய் எண்ணெய் தடவுவதன் மூலம் முகத்தில் முடி வளர்வதை தூண்டும் என்ற தகவலும் வந்தது. நெல்லிக்காய் எண்ணெயை முகத்தில் தடவி 20 நிமிடங்கள் மசாஜ் செய்து பின்னர் குளிர் நீரில் கழுவினால் உடனடியாக முடி வளரும் என்றும் கூறப்படுகிறது.

இலவங்க எண்ணெய்: இலவங்க எண்ணெய் இரண்டு துளியில் எலுமிச்சை சாறு ஒரு கரண்டியும் சேர்த்து முகத்தில் 20 நிமிடங்கள் தடவி பிறகு கழித்து கழுவினால் சில நாட்களில் எதிர்பாராத அளவிற்கு கருகருவென முடி வளரும்.

யூகலிப்டஸ் எண்ணெய் : இந்த எண்ணெயுடன் ஆலிவ் எண்ணெய் சேர்த்து முகத்தில் தடவினால் முடி நன்றாக வளரும் என்றும் கூறுகிறார்கள்.

ஜோஜோபா எண்ணெய்:முகம் பிரச்சனை மற்றும் தலை முடி பிரச்சனைகளுக்கு பயன்படுத்தக் கூடிய முக்கியமான எண்ணெயாகும். இதுமட்டுமில்லாமல் இது சருமத்தில் உள்ள முடிகளை வளர தூண்டிவிடம்.

இனி மேல் ஆண்கள் அனைவரும் தாடிகள் தினத்தை சந்தோஷமாக கொண்டாடுங்கள் என்று வலைதளங்களில் கூறியுள்ளார்கள்.