Cam scanner வச்சிருக்கீங்களா. உடனே டெலீட் செய்யுங்க.! பிளே ஸ்டோரே நீக்கிடாங்க.!

0
601
camscanner

கூகுள் நிறுவனம் ப்ளே ஸ்டோரில் இருந்து தரவிறக்கம் செய்யப்படும் கேம் ஸ்கேனர் என்ற செயலியை நீக்கப்பட்டுள்ளது.கேம் ஸ்கேனர் செயலி என்பது ஸ்கேன் செய்யப்படும் புகைப்படங்களை பிடிஎஃப் என்று எளிய வடிவத்தில் மாற்ற உதவும் ஸ்கேனர் ஆகும். இந்த கேம்ஸ்கேனரை லட்சக்கணக்கான மக்கள் அதிகமாக மொபைல்களில் பதிவிறக்கம் செய்தனர்.இதனால் பெரிய அளவில் மக்களிடையே அதிக வரவேற்பு பெற்ற இந்த செயலி “மால்வேர்” வைரஸ் என்ற தாக்குதல் ஏற்பட்டதன் காரணமாக நீக்கம் செய்யப்பட்டு உள்ளது.இதன் மூலம் மொபைல்கள் பாதுகாப்பு குறைபாடு ஏற்படுகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூகுள் நிறுவனத்திற்கு தெரிவித்தனர்.

Related image


இதன் மூலம் உடனடியாக கேம் ஸ்கேனர் செயலியை கூகுள் நிறுவனம் நீக்கியது. மால்வேர் போன்ற வைரஸ்கள் அதிகமாக தாக்கப்படுவது ஆன்ட்ராய்டு வெர்ஷன் , ஐஓஎஸ் வெர்ஷன் ஆகிய மொபைல்கள் மூலம் தான் அதிகமாக தாக்கப்படும் என்ற திடுக்கிடும் தகவலும் வெளிவந்தது. கேம்ஸ்கேனர் செயலியை மக்கள் அதிகமாக வணிக வளாகங்களிலும் அதனால் நிறைய விளம்பரங்கள் உருவாக்கப்படும் என்று கூறினார்கள்.இந்த விளம்பரங்கள் மூலம் போலி விளம்பரங்கள் உருவாக்க நிறைய வாய்ப்பு உள்ளது. இதனால் மால்வேர் போன்ற வைரஸ் தாக்குதல்கள் உருவாகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர்.

Image result for camscanner removed from play store

இதனால் இந்த வகை வெர்ஷன் மொபைல்களை உபயோகிக்கும் பயனர்கள் வங்கி கணக்குகள் தகவல்கள், தனிப்பட்ட ரகசியங்கள் ஆகியவைகளை இணையத்தின் ஹேக்கர்கள் மூலம் தகவல் திருடப்படும் வாய்ப்புள்ளது என தெரியவந்தது. ஓசிஆர் எனப்படும் ஆப்டிகல் கேரக்டர் ரெகக்னிஷன் மூலம் ஸ்மார்ட் போன் மூலம் ஊடுருவி தகவல்களை திருடுகிறார்கள் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர். இதனை மேலும் உறுதி செய்ய கூகுள் நிறுவனம் கேம் ஸ்கேனர் செயலியை உடனடியாக நீக்கம் செய்ய வேண்டும் என்று பயனாளர்களுக்கு எச்சரிக்கை அறிவித்தது. பாதுகாப்பு காரணமாகத்தான் கேம் ஸ்கேனர் ஐ நீக்கம் செய்கிறோம் என்றும் கூகுள் நிறுவனம் வெளியிட்டது.


இதன்மூலம் கூகுள் நிறுவனம் மக்களின் பாதுகாப்பு குறித்து குறைபாடுகள் கொண்ட செயலிகளை அடுத்தடுத்து நீக்கம் செய்து வருகிறோம் என்ற தகவலும் வெளியிட்டார்கள். சில காலத்திற்கு முன் சூப்பர் செல்பி, கேமரா ஆப், சிஓஎஸ் கேமரா, பாப் கேமரா என 80க்கும் மேல் அதிகமான செயலிகளை கூகுல் நிறுவனம் பாதுகாப்பு குறைவு காரணமாக நீக்கியுள்ளது என்றும் கூறினார்கள். இதன் மூலம் கூகுள் நிறுவனம் வெளியிடும் செயலிகள் பாதுகாப்பு குறைவு இருந்தால் திடீரென நீக்கம் செய்தும் விடுகிறார்கள்.