Home அருமையான தகவல்கள் நீரழிவு நோய் உள்ளவர்கள் கண் தானம் செய்யலாமா? ஆய்வில் வெளியான தகவல்.!

நீரழிவு நோய் உள்ளவர்கள் கண் தானம் செய்யலாமா? ஆய்வில் வெளியான தகவல்.!

0
51
Eyes

இவ்வுலகில் உடல் உறுப்பு தானங்களில் மிக சிறந்ததாக கருதப்படுவது “கண்தானம்” தான். வளர்ந்து வரும் நாடுகளில் மில்லியன் கணக்கான மக்கள் பார்வை இல்லாமல் இருக்கின்றனர்.மேலும் விழிவெண்படல பாதிப்பால் பாதிக்கப்பட்டவர்கள் 60% பேர் உள்ளனர். அதுவும் 12 வயதிற்கு உட்பட்டவர்கள் தான் அதிகம். நாம் வாழும் காலத்தில் செய்கின்ற தானங்கள் தான் நம்மை வாழ வைக்கும்,இறந்த பிறகும் செய்யும் தானம் நம் தலைமுறையினர்களையும் வாழவைக்கும், மேலும் புண்ணியத்தை சேர்க்கும் என்று நம் முன்னோர்கள் காலம் காலமாக பின்பற்றி வரும் மரபு.

Image result for கண் தானம்


இந்த உலகில் இறந்த பிறகு உடலை பூமியில் புதைத்தோ அல்லது எரித்தோ வீணாகும் கண்களை தானம் செய்தால் இந்த உலகில் ஏதோ ஒரு மூலையில் நாம் இருக்கும் நிலை அதாவது இறவா நிலைக்கு கொண்டு செல்லும் என்று கூறுகிறார்கள்.வாழும் போது செய்யும் தானத்தை விட இறந்த பிறகும் செய்யும் தானம் தான் இந்த உலகில் மிகப்பெரிய தானமாகவும் என பல ஞானிகளால் கூறப்படுகிறது. உலகில் வாழும் மனிதர்கள் உடல் உறுப்புகளில் மிக முக்கியமான அங்கமாக கண் பங்கு வகிக்கிறது. அப்படிப்பட்ட கண் இல்லாமல் ஒரு கணம் பத்து நிமிடம் கண்களை மூடிக்கொண்டு வாழ்ந்தால் எவ்வளவு சிரமமாக உள்ளது என்பதை உணரலாம். அதன்முலம் அந்த பார்வையற்றவர்களின் அவலநிலை குறித்து நன்கு அறியலாம் . ஆகவே இறந்து போன பிறகு வீணாக போகும் கண்களை தானம் செய்வதன் மூலம் ஒரு உயிரை வாழ வைக்க முடியும் அவர்கள் வாழ்க்கையில் ஒரு ஒளியை ஏற்றி வைக்கலாம் என்று அறிஞர்கள் கூறுகிறார்கள்.

இந்த கண் தானம் பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த ஆகஸ்ட் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை கண்தான விழிப்புணர்வு முகாம் நடத்த அரசாங்கம் முடிவெடுத்துள்ளது. சில வருடங்களுக்கு முன் நம் மனதை உருக்கும் நிகழ்வு ஒன்று நிகழ்ந்தது. தன்னுடைய பார்வையில்லாத குழந்தைக்கு கண்கள் வேண்டும் என்று கருதி அந்தத் தாய் இறக்கும் முன் கடிதத்தில் என் கண்களை குழந்தைக்கு எடுத்து வையுங்கள் என்று எழுதிவிட்டு இறந்து போனார். இந்த தாய் பாசத்திற்கு வேறு எந்த பாசமும் ஈடாகாது என்பதற்கு ஏற்ப அவருடைய செயல் இருந்தது. மறக்கமுடியாத நிகழ்வாக சில நாட்கள் பேசப்பட்டும் வந்தது. இப்படி பலருக்கு கண் தானம் குறித்த விழிப்புணர்வு ஏதுமில்லாத மக்களும் இவ்வுலகில் இருக்கிறார்கள். பாதிக்கப்பட்டவர்களுக்கு கண்கள் யார் கொடுப்பார்கள்? யாரிடமிருந்து வரும்? என்ற கேள்விகளுக்கு இதனால் ஒரு சில பேர் இறக்கவும் செய்கிறார்கள் என்று மருத்துவர் சந்திரசேகர் கூறினார்.

Image result for can sugar patients donate eyes

இது குறித்து அவர் கூறுகையில் ரத்த தானத்திற்கு அடுத்த சிறந்த தானமாக விளங்குவது கண்தானம் தான். இந்த உலகில் அதிகமாக வெண்படல பாதிப்புக்கு ஆளானவர்கள் மட்டும் தான் அதிகமாக உள்ளார்கள். ஆனால் கண் தானம் செய்பவர்களின் எண்ணிக்கையும் குறைவு, கண் பார்வை முழுமையாக இறந்தவர்களுக்கு எந்த ஒரு மாற்று சிகிச்சையும் செய்ய முடியாது. ஆனால் கார்னியா என்ற விழிவெண்படலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டும் மாற்று சிகிச்சை செய்து கண் பார்வையை திரும்பப் பெற முடியும் என்று கூறினார். இது இரண்டு வயது முதல் 70 வயதுக்கு மேல் உள்ளவர்களுடைய கண்ணை தானமாக கொடுக்கலாம், மேலும் சிகிச்சையும் பெறலாம் என்று கூறினார். இது மட்டுமில்லாமல் இப்படி கண் தானம் செய்பவர்களின் உடம்பில் ஏதேனும் குறைபாடுகள் அதாவது நீரிழிவு நோய் ,ரத்த அழுத்தம் என சில நோய்களுக்கு பாதிக்கப்பட்டிருந்தால் தானம் செய்ய முடியுமா என்று ஒரு சில பேர் கேள்விகள் எழுப்பின. இதற்காக சில ஆராய்ச்சியின் மூலம் சர்க்கரையை கட்டுக்குள் வைத்து இருப்பவர்கள், இதய நோய், உயர் அழுத்த நோய் உள்ளவர்கள் கண் தானம் செய்யலாம் என்று ஆராய்ச்சியின் மூலம் தெரிய வந்தது.

இந்த உலகில் கண்ணாடி அணிபவரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே வருகிறது. இதற்கு காரணம் கண் நரம்புகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் தான் என்றும் ஆய்வின் மூலம் தெரியவந்தது. யாரெல்லாம் கண்தானம் செய்ய கூடாது என்று கேட்டபோது, ஏற்கனவே விழி வெண்படல மாற்று சிகிச்சை செய்தவர்கள், ரேபிஸ் நோயால் பாதித்து உயிர் இழந்தவர்கள், எச்ஐவி தொற்று நோய் கொண்டவர்கள், பாம்பு கடியால் இறந்தவர்கள், விஷமருந்தி இறந்தவர்கள், மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டவர்கள், கண் நோய் தொற்றால் இறந்தவர்களிடம் இருந்து கண்களை பெறக்கூடாது.

கண் தானம் பெற உரியவர்கள் யாராக இருக்கும் என்று கேட்டபோது பிறவிக் குறைபாடு கிருமித்தொற்று, வைட்டமின் ஏ குறைபாடு, கண்களில் காயம் தழும்பு ஏற்படும் போது விழிவெண்படல பாதிப்பால் ஒளி ஊடுருவும் தன்மை பாதிப்படைந்து விட்டவர்கள். இந்த மாதிரி உள்ளவர்களுக்கு கண்ணை தானமாக கொடுத்தால் பரிசோதனை மூலம் அவருக்கு மாற்று சிகிச்சை செய்து பார்வை வர வைக்கலாம். ரத்ததான முகாம் போன்று இப்போது கண்களுக்கான முகாம்களும் அதிகமாக நடத்தப்பட்டு வருகிறது. சமூக நலன் கருதி கண் சார்ந்த அமைப்புகளும், கண் தொடர்பான மருத்துவமனைகளும், இறப்பிற்குப்பின் கண்களை பதிவு செய்யும் அமைப்புகளும் அரசு மருத்துவமனைகளில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அவசர சிகிச்சை பிரிவில் பலனின்றி இறந்த நோயாளிகள், மூளைச்சாவு அடைந்தவர்கள் ஆகியவர்களிடம் இருந்தும் கண் தானம் பெறலாம்.அதாவது விழிவெண்படலம் நன்றாக உள்ள உயிரோடு இருக்கும் நோயாளியிடம் இருந்தும் கூட தானமாக பெறலாம். ஆனால் இப்படி உயிரோடு இருக்கும் நபர்கள் கண்ணை தானமாக அளிப்பது ஒரு அரிதான செயலாகும். செயற்கையான முறையிலும் விழிவெண்படல சிகிச்சை இதுவரை 400- 500 பேர் நபர்களுக்கு நடந்தது. ஆனால் செயற்கை சிகிச்சை விட இயற்கை தான் சிறந்தது நீடித்து இருக்கும்.

ஒருவர் கண் தானம் செய்ய முடிவு செய்தால் : இறந்த உடன் அவர்களின் இமைகளை மூடி வைக்க வேண்டும், கண்களில் ஈரமான பஞ்சையும் வைக்க வேண்டும், மின்விசிறிகளை ஏதும் இயக்கக்கூடாது, குளிர் சாதனங்களை பயன்படுத்த வேண்டும், இறந்தபின் அவர்களின் 104 என்ற மருத்து உதவி எண்ணுக்கு அழைக்கலாம். ஒருவருடைய கண்தானம் 2 பேருக்கு பார்வை அளிக்கும் என்றும் கூறுகிறார்கள். ஒருவர் இறந்த நிலையில் ஆறு மணி நேரத்திற்குள் கண்களை எடுத்து பாதுகாப்பாக வைத்து பார்வையற்றவர்களுக்கு அறுவை சிகிச்சை மூலம் கண்ணை மீண்டும் பெற செய்யலாம். நம் இந்தியாவை பொருத்தவரை 72 மணிநேரம் இறந்தபின் ஒருவரின் கண்களை பாதுகாக்கப்படுகிறது. இது வளரும் நாடுகளில் நடக்கும் நிகழ்வு ஆனால் வளர்ந்த நாடுகளில் மூன்று ஆண்டுகள் வரையும் பாதுகாக்கும் புதிய தொழில்நுட்பங்களை கண்டுபிடித்து உள்ளார்கள். இப்படி மற்றவர்களுக்கு ஒளி கொடுக்க விரும்பினால் கண்தான முகாம் பதிவுகள் உள்ளது .அதில் தாங்கள் இறந்தபின் தங்களின் கண்களை எரிக்காமலும் புதைக்காமலும் வாழ பயன்படுத்த அதில் பதிவுசெய்யவும். இறந்தும் இந்த உலகில் வாழ ஒரு அரிய வாய்ப்பாக உள்ளது.