ஆர்பிட்டர் உதவியுடன் விக்ரம் லேண்டரை கண்டுபிடித்த இஸ்ரோ விஞ்ஞானிகள்.! குஷியில் இந்தியர்கள்.!

0
1
Chandrayan-2

இந்தியாவின் இஸ்ரோ விண்வெளி மையத்தில் இருந்து அனுப்பப்பட்ட சந்திராயன்-2 விண்கலத்தில் இருந்து பிரிந்த விக்ரம் லேண்டர் கைவிட்ட நிலையில் விஞ்ஞானிகளுக்கு ஆறுதல் கொடுத்த ஆர்பிட்டர் கலன். சந்திராயன்-2 விண்கலத்தில் இருந்து பிரிந்து நிலவின் மேற்பரப்பை சுற்றி ஆய்வு மேற்கொள்ள விக்ரம் லேண்டர் சில நிமிடங்களில் தரை இறங்க போகிறது என்று அனைத்து விஞ்ஞானிகளும் நம்பிக்கையில் இருந்தனர். ஆனால் சில விநாடிகளில் விக்ரம் லேண்டரில் இருந்து தரைக் கட்டுப்பாட்டு மையத்திற்க்கு வரும் சிக்னல்கள் துண்டிக்கப்பட்டது. இதனால் அனைத்து விஞ்ஞானிகளும் சோகத்திலும், கண்ணீர் மல்கிய நிலையிலும் உள்ளனர்.மேலும் பெங்களூரில் உள்ள இஸ்ரோவிற்கு வந்த மோடி மனமுடைந்து போன நிலையில் கண்ணீருடன் இருந்த சிவனுக்கு ஆறுதல் தெரிவித்தார். இது இந்தியாவின் தோல்வியல்ல!!! வெற்றிக்கான ஒரு அடிதான் என்று விஞ்ஞானிகளுக்கு ஆறுதல் வார்த்தை கூறினார்.

Image result for chandrayaan 2 orbiter

தற்போது சந்திராயன்-2 விண்கலத்தில் இருந்து பிரிந்த விக்ரம் லேண்டர்யின் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்ட நிலையில் இஸ்ரோ விஞ்ஞானிகள் பல ஆய்வுகளை மேற்கொண்டு இருந்தார்கள். இந்நிலையில் இப்போது விக்ரம் லேண்டர் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து உள்ள தகவல் வெளியானது. விஞ்ஞானிகள் பல முயற்சிகள் மேற்கொண்ட நிலையில் விக்ரம் லேண்டர் இருக்கும் இடத்தை துல்லியமாக கண்டுபிடித்தனர்.அதுவும் நிலவின் சுற்றுவட்ட பாதையில் சுற்றிக்கொண்டிருக்கும் ஆர்பிட்டர் உதவியுடன் விக்ரம் லேண்டர் இருக்கும் இடம் தெரியவந்தது. மேலும் இந்த தகவலை இஸ்ரோ தலைவர் சிவன் அனைவருக்கும் தெரிவித்தார். ஆனால் விக்ரம் லேண்டர் இருக்கும் இடம் இடம் தெரிந்த போதும் அதிலிருந்து பூமிக்கு வரும் சிக்னல்கள் இன்னும் கிடைக்கவில்லை என்றும் கூறியுள்ளார். மேலும் அவர்கள் விக்ரம் லேண்டருடன் தொடர்பை ஏற்படுத்த தீவிர முயற்சியில் உள்ளார்கள். விரைவில் இந்தியா சந்திராயன்-2 நிலவில் தரை இறங்கும் தருணம் சில கணங்களிலேயே உள்ளது. இந்த தகவல் அனைத்து சமூக வலைதளங்களிலும் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது.

Image result for chandrayaan 2 orbiter


விக்ரம் லேண்டரில் இருந்து பூமிக்கு வரும் சிக்னல் இழக்கப்பட்டாலும், நிலவை 100 கிலோ மீட்டர் தொலை தூரத்தில் சுற்றிக்கொண்டிருக்கும் ஆர்பிட்டர் கலனில் இருந்து வரும் தகவல்கள் இன்னும் துண்டிக்கப்படவில்லை. மேலும் இந்த ஆர்பிட்டால்கள் ஓராண்டுக்கு மேல் இயங்கி நிலவை புகைப்படம் எடுத்து நமக்கு கொடுக்கும் என்ற மற்றொரு சந்தோசம் ஊட்டும் செய்தியும் வந்தது. நிலவை எடுக்கும் புகைப்படங்கள் தரைக்கட்டுப்பாட்டு மையத்திற்கு தொடர்ந்து அனுப்பப்பட்டு இருக்கும் என்ற தகவல்கள் விஞ்ஞானிகள் தெரிவித்தனர். இதனால் இந்தியர்கள் சந்தோசமாகவும், பெருமிதத்துடனும் உள்ளனர். மேலும் சந்திராயன் 2 வில் உள்ள ஆர்பிட்டர் ஆயுட்காலம் ஏழரை ஆண்டுகள் என்ற புதிய தகவலும் இஸ்ரோ தலைவர் சிவன் கூறியுள்ளார். மேலும் அவர் ஆர்பிட்டர் குறித்த திட்டம் முதல் ஓராண்டுக்கு மட்டும்தான் போடப்பட்டிருக்கு என்று கூறினார். ஆனால் அந்த ஆர்பிட்டர் 7 ஆண்டுகள் வரை இயங்கும், அதில் மிக அதிநவீன கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.மேலும் அந்த கேமராக்கள் எடுக்கும் புகைப்படத்தின் மூலமாகத்தான் இப்போது விக்ரம் லேண்டர் குறித்த தகவல்கள் வெளியானது. மேலும் விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன என்றும் கூறினார்
மேலும் இந்த நிகழ்வு குறித்து கூறியது, இந்த தரைக்கட்டுப்பாட்டு தொடர்பு எந்த காரணத்தால் அல்லது எந்த தொழில்நுட்பக் கோளாறால் ஏற்பட்டது என்ற ஆய்வு சீக்கிரமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.இது மட்டுமில்லாமல் 100 கிலோ மீட்டர் தூரத்தில் நிலவை சுற்றிக் கொண்டிருக்கும் ஆர்பிட்டர் கலன் இன்னும் ஒரு ஓராண்டுக்கு மேல் நிலவை சுற்றி நிலவு குறித்த தகவல்களை பூமிக்கு புகைப்படம் மூலமாக அனுப்பும் என்ற தகவலையும் அவர் கூறினார்.

Image result for chandrayaan 2 orbiter


இதுகுறித்து பிரதமர் மோடி கூறியது, பல தடைகள் வந்தாலும் அதையெல்லாம் தாண்டி வெற்றி பெற்றிருக்கிறோம் என்று மகிழ்ச்சியாக கூறினார். விக்ரம் லிட்டர் தோல்வியில் முடிந்தாலும் ஆர்பிட்டர் மூலம் நிலவு குறித்த தகவல்கள் நம் இந்தியாவிற்கு அனுப்பப்படும் என்ற மகிழ்ச்சியான செய்தி கூட நம் இந்தியாவின் வெற்றிதான் என்று பெருமிதத்துடன் கூறினார். மேலும் இந்தியா விண்வெளி சக்தி கொண்ட பல நாடுகளில் ஒன்றாக இந்தியாவும் விளங்குகிறது என்றும் சொன்னார். இனி இது மட்டுமில்லாமல் நிலவை ஆராய்வதற்கான பயணம் மென்மேலும் தொடரும், நிலவை தொடும் முயற்சி கைவிடாமல் ஒருநாள் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்றும் மன உறுதியுடன் கூறினார்.ஆகவே ஆர்பிட்டர்மூலம் இன்னும் சில நாட்களில் இந்தியா வரலாற்று சாதனை அடையும் என்பதில் எந்த ஒரு ஐயமும் இல்லை என்று பெருமிதத்துடன் கூறுகிறார்கள்