Home செய்திகள் இந்தியா விக்ரம் லேண்டர் கைவிட்ட நிலையில்.! விஞ்ஞானிகளுக்கு ஆறுதல் கொடுத்த விஷயம்.! என்ன தெரியுமா?

விக்ரம் லேண்டர் கைவிட்ட நிலையில்.! விஞ்ஞானிகளுக்கு ஆறுதல் கொடுத்த விஷயம்.! என்ன தெரியுமா?

0
5863

இந்தியாவின் இஸ்ரோ விண்வெளி மையத்தில் இருந்து அனுப்பப்பட்ட சந்திராயன்-2 விண்கலத்தில் இருந்து பிரிந்த விக்ரம் லேண்டர் கைவிட்ட நிலையில் விஞ்ஞானிகளுக்கு ஆறுதல் கொடுத்த ஆர்பிட்டர். இன்று சந்திராயன்-2 விண்கலத்தில் இருந்து பிரிந்து நிலவின் மேற்பரப்பை சுற்றி ஆய்வு மேற்கொள்ள விக்ரம் லேண்டர் தரை இறங்க போகிறது என்று அனைத்து விஞ்ஞானிகளும் நம்பிக்கையில் இருந்தனர். ஆனால் சில விநாடிகளில் விக்ரம் லேண்டரில் இருந்து தரைக் கட்டுப்பாட்டு மையத்திற்க்கு வரும் சிக்னல்கள் துண்டிக்கப்பட்டது. இதனால் அனைத்து விஞ்ஞானிகளும் சோகத்திலும், கண்ணீர் மல்கிய நிலையிலும் உள்ளனர்.மேலும் பெங்களூரில் உள்ள இஸ்ரோவிற்கு வந்த மோடி மனமுடைந்து போன நிலையில் கண்ணீருடன் இருந்த சிவனுக்கு ஆறுதல் தெரிவித்தார். நாசா, சீனா இதுபோல் பலமுறை தோல்வி கண்டு உள்ளது. ஆனால் இது இந்தியாவின் தோல்வியல்ல!!! வெற்றிக்கான ஒரு அடிதான் என்று விஞ்ஞானிகளுக்கு ஆறுதல் வார்த்தை கூறினார்.

Image result for chandrayaan 2 live


மேலும், இந்தியாவின் நிலவிற்கான பயணம் குறித்த பல எதிர்பார்ப்புகள் தற்போது ஏமாற்றத்தில் முடிந்தது. இது குறித்து நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் விஞ்ஞானிகளுக்கு ஆறுதல் சொல்லி வரும் தகவல் வைரலாக பரவி கொண்டு வருகிறது.இது ஒரு பக்கம் வேதனை தந்த நிகழ்வாக இருந்தாலும் மறுபக்கம் சந்தோஷம் படும் விஷயமும் நடந்துள்ளது. விக்ரம் லேண்டரில் இருந்து பூமிக்கு வரும் சிக்னல் இழக்கப்பட்டாலும், நிலவை 100 கிலோ மீட்டர் தொலை தூரத்தில் சுற்றிக்கொண்டிருக்கும் ஆர்பிட்டர் கலனில் இருந்து வரும் தகவல்கள் இன்னும் துண்டிக்கப்படவில்லை. மேலும் இந்த ஆர்பிட்டால்கள் ஓராண்டுக்கு மேல் இயங்கி நிலவை புகைப்படம் எடுத்து நமக்கு கொடுக்கும் என்ற மற்றொரு சந்தோசம் ஊட்டும் செய்தியும் வந்தது. நிலவை எடுக்கும் புகைப்படங்கள் தரைக்கட்டுப்பாட்டு மையத்திற்கு தொடர்ந்து அனுப்பப்பட்டு இருக்கும் என்ற தகவல்கள் விஞ்ஞானிகள் தெரிவித்தனர். இதனால் இந்தியர்கள் சந்தோசமாகவும், பெருமிதத்துடனும் உள்ளனர்.

நிலவின் தென் துருவப் பகுதியை ஆய்வு செய்ய பெங்களூரில் உள்ள இஸ்ரோவில் இருந்து அனுப்பிய சந்திராயன்-2 விண்கலம் சில தினங்களுக்கு முன் நிலவின் உடைய சுற்றுவட்டப் பாதைக்குள் நுழைந்தது. இது தொடர்ந்து சந்திராயன் 2 விண்கலத்தில் இருந்து விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக பிரிக்கப்பட்டு நிலவின் மேற்பரப்பை ஆய்வு மேற்கொள்ள சில நேரங்களில் தரையிறங்கும் என்று தெரிவித்தார்கள். இது சவாலான நிகழ்வாக இருந்தாலும் இன்னும் சற்று நேரத்தில் தரையை அடையும் நிலையில் தரையை தொடும் 15 நிமிடத்தில் தரைக்கட்டுப்பாட்டு மையத்திற்கு வந்து கொண்டிருந்த சிக்னல்கள் திடீரென்று துண்டிக்கப்பட்டன. அதிர்ச்சியில் விஞ்ஞானிகளும் இருந்தார்கள். இன்னும் 2.1 கிலோ மீட்டர் தொலைவு தான் உள்ளது அதற்குள் இந்த தொடர்பு துண்டிக்கப்பட்டது என்றும் வேதனைப்பட்டார். இதனை இஸ்ரோ தலைவர் சிவன் ஊடகங்களுக்கு மன வேதனையுடன் தெரிவித்தார்.

Image result for chandrayaan 2 orbiter


மேலும் இந்த நிகழ்வு குறித்து கூறியது, இந்த தரைக்கட்டுப்பாட்டு தொடர்பு எந்த காரணத்தால் அல்லது எந்த தொழில்நுட்பக் கோளாறால் ஏற்பட்டது என்ற ஆய்வு சீக்கிரமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.இது மட்டுமில்லாமல் 100 கிலோ மீட்டர் தூரத்தில் நிலவை சுற்றிக் கொண்டிருக்கும் ஆர்பிட்டர் கலன் இன்னும் ஒரு ஓராண்டுக்கு மேல் நிலவை சுற்றி நிலவு குறித்த தகவல்களை பூமிக்கு புகைப்படம் மூலமாக அனுப்பும் என்ற தகவலையும் அவர் கூறினார்.

இதுகுறித்து பிரதமர் மோடி கூறியது, பல தடைகள் வந்தாலும் அதையெல்லாம் தாண்டி வெற்றி பெற்றிருக்கிறோம் என்று மகிழ்ச்சியாக கூறினார். விக்ரம் லிட்டர் தோல்வியில் முடிந்தாலும் ஆர்பிட்டர் மூலம் நிலவு குறித்த தகவல்கள் நம் இந்தியாவிற்கு அனுப்பப்படும் என்ற மகிழ்ச்சியான செய்தி கூட நம் இந்தியாவின் வெற்றிதான் என்று பெருமிதத்துடன் கூறினார். மேலும் இந்தியா விண்வெளி சக்தி கொண்ட பல நாடுகளில் ஒன்றாக இந்தியாவும் விளங்குகிறது என்றும் சொன்னார். இனி இது மட்டுமில்லாமல் நிலவை ஆராய்வதற்கான பயணம் மென்மேலும் தொடரும், நிலவை தொடும் முயற்சி கைவிடாமல் ஒருநாள் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்றும் மன உறுதியுடன் கூறினார். 2024 ஆம் ஆண்டு அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா 2024 ஆம் ஆண்டு நிலவின் தென்பகுதிக்கு விண்கலத்தை அனுப்ப உள்ளதாக தகவல் வெளியானது. மேலும் இந்தியா அனுப்பிய சந்திராயன் 2 மூலம் நாசாவிற்கு பெரும் உதவியாக இருக்கும் என்று குறிப்பிட்டார்.