Home செய்திகள் இந்தியா நிலவில் தரையிறங்க போகிறது சந்திராயன்-2.! இந்தியாவின் வரலாற்று சாதனை.! நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது.!

நிலவில் தரையிறங்க போகிறது சந்திராயன்-2.! இந்தியாவின் வரலாற்று சாதனை.! நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது.!

- Advertisement -

இந்தியாவில் உள்ள விண்வெளி ஆராய்ச்சி மையமான “இஸ்ரோ” சில மாதங்களுக்கு முன்னதாக (ஜூலை மாதத்தில்) ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட் மூலம் சந்திராயன்-2 விண்கலத்தை விண்ணில் ஏவியது. இந்த சந்திராயன்2 விண்கலம் நிலவை ஆய்வு செய்வதற்காக படைக்கப்பட்டதாகவும் மேலும் இந்த சந்திராயன் 2 விண்கலம் நாளை நிலவின் உடைய தென் துருவப் பகுதியில் தரை இறங்க போகிறதும் என்ற தகவலும் வந்துள்ளது. இது இந்தியாவின் மிகப்பெரிய வரலாற்று சாதனையாகும்.உலகமே வியந்து பார்க்கும் அளவில் இந்த சாதனை இருக்கப்போகிறது என்று சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

Image result for சந்திராயன் 2


- Advertisement -

சந்திராயன்2 விண்கலத்தில் இருந்து விக்ரம் லேண்டன் பிரிந்து வந்து நாளை நிலவின் தென் துருவப் பகுதியில் தரை இறங்க உள்ளது. இந்த விண்கலம் நிலவின் உடைய மேற்பரப்பை சுற்றியவாறே விண்ணில் ஆய்வு செய்ய ஆர்பிட்டர் கலனும், நிலவில் தரை இறங்க விக்ரம் லேண்டர் கலனும், நிலவின் தரை பகுதியில் ஊர்ந்து சென்று ஆய்வு செய்ய ரோவர் ஆகிய மூன்று கலங்களும் சந்திராயன்-2 விண்கலத்தில் அமைக்கப்பட்டுள்ளது.இந்த விண்கலத்தை ஜிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட நாளிலிருந்து இன்றுவரை திட்டமிட்டபடி பூமியை சுற்றிக் கொண்டு வருகிறது. இதுவரை 6 முறை புவி வட்டப்பாதையில் சுற்றி வந்துள்ளது.

மேலும் இந்த விண்கலம் பூமியின் மேற்பரப்பை படங்கள் எடுத்து இஸ்ரோவின் விண்வெளி மையத்திற்கு அனுப்பி வைத்துள்ளது. இதன்படி சந்திராயன்2 விண்கலம் சீரான வேகத்தில், சரியான முறையில் புவியின் சுற்று வட்ட பாதையில் ஆகஸ்ட் 17ஆம் தேதி சுற்றி முடித்து விட்டது. மேலும் இந்த விண்கலம் நிலவை நோக்கி பயணத்தை தொடங்கியது எனவும் தெரிவித்தார்கள். நிலவின் வட்டப் பாதையை நோக்கி செல்லும் போது விண்கலத்தின் வேகத்தை தேவைக்கேற்ப உயர்த்தியும், குறைத்தும் சீராக மாற்றி வைத்து உள்ளார்கள் இஸ்ரோ விஞ்ஞானிகள். இதனை தொடர்ந்து ஆகஸ்ட் 20-ஆம் வெற்றிகரமாக நிலவின் சுற்றுவட்டப் பாதைக்குள் நுழைந்துவிட்டது சந்திராயன்-2. நிலவின் வட்டப்பாதையில் சிறிது சிறிதாக விண்கலத்தின் உயரம் மாற்றப்பட்டது.

Image result for சந்திராயன் 2


இதுவரை 5 முறை நிலவின் வட்டப்பாதையில் சுற்றி வந்த நிலையில் தற்போது நாளை விக்ரம் லேண்டரை விண்கலத்தில் இருந்து பிரித்து தரையில் இறங்க உள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தார்கள். மேலும் ஆர்பிட்டார் நிலவின் வட்டப் பாதையில் தொடர்ந்து சுற்றியும் , கண்காணித்து வருகிறது. லேண்டர் முதலில் நிலவின் தென் துருவப் பகுதியில் தரையிறங்க உள்ளதாகவும், தற்போது நிலவிற்கு மிக நெருக்கமாக 35 கிலோ மீட்டர் தூரத்தில் தான் உள்ளது என தெரியவந்தது. இதனுடைய வேகம் படிப்படியாக குறைக்கப்பட்டு தரையிறங்க உள்ளதாக தகவல்கள் வெளியானது.

இந்நிலையில் 1471 கிலோ எடை கொண்ட விக்ரம் லெண்டர் நாளை அதிகாலை 1.30மணியிலிருந்து 2.30 மணிக்குள் நிலவின் தென் துருவப் பகுதியில் தரையிறங்க போகிறது என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் மூலம் தகவல்கள் தெரிவிக்கப்பட்டது. அதுமட்டுமில்லாமல் லேண்டர் இன் வேகத்தை மெல்ல மெல்லக் குறைத்து பாதுகாப்பான முறையில் தரை இறங்குவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவின் விஞ்ஞானிகளுக்கு சவால் விடும் வகையில் உள்ளது. அடுத்தபடியாக இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டமிட்டபடி லேண்டர் தரையிறக்கப்பட்ட உடன் லேன்டரிலிருந்து 27 கிலோ எடை கொண்ட ஆறு சக்கர வாகனம் பிரக்யான் ரோவர் மெது மெதுவாக நிலவின் தரையில் ஊர்ந்து கொண்டு தடம் பதிக்கும். ரோவர் தரைப் பகுதிக்கு வந்தவுடன் அதில் உள்ள சோலார் கருவி மூலம் மின்சக்தி திறனை உள்வாங்கிக்கொண்டு நிலவின் உடைய மண்வளத்தை ஆய்வு செய்யவும் உள்ளார்கள். பின்னர் நிலவில் கனிமவளங்கள்.நில அதிர்வுகள், நீர்வளம் ஆகியவை குறித்தும் ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக பெங்களூரில் உள்ள இஸ்ரோவின் கட்டுப்பாட்டு மையத்துக்கு தகவல்கள் அனுப்பப்படும்.

இந்நிகழ்வை இஸ்ரோ தளத்திலிருந்து நேரடியாக பார்வையிட்டுள்ளார் பிரதமர் மோடி. அவருடன் அமர்ந்து இந்த அற்புதமான காட்சியை பார்க்க மாணவர்களுக்கும் அறிய வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆன்லைன் மூலம் நடக்கும் வினாடி வினா போட்டியில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் இந்த நிகழ்வை பிரதமர் மோடியுடன் அமர்ந்து பார்க்கலாம். இதில் தமிழகத்தை சேர்ந்த இரண்டு பேரும், புதுச்சேரியை சேர்ந்த ஒருவர் உட்பட இந்தியாவில் மொத்தம் 70 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். பிரதமர் மோடியுடன், மாணவர்கள் அனைவரும் நாளை சந்திராயன்-2 நிலவில் தரையிறங்க போவதைக் காண ஆர்வத்துடன் உள்ளனர்.

- Advertisement -
96,044FansLike