Home செய்திகள் வாகன விதி மீறல்.! அதிகபட்சம் 29,000 வரை அபராதம் வசூலிக்கப்படும்.! அச்சத்தில் வாகன ஓட்டிகள்.!

வாகன விதி மீறல்.! அதிகபட்சம் 29,000 வரை அபராதம் வசூலிக்கப்படும்.! அச்சத்தில் வாகன ஓட்டிகள்.!

0
1667
chennai-police

மத்திய அரசு போக்குவரத்து துறையில் மோட்டார் வாகனங்களுக்கான புதிய சட்டங்களை அமல்படுத்தி உள்ளது. மேலும், இந்த சட்டங்கள் செப்டம்பர் முதல் நடைமுறைக்கு கொண்டு வரப்படும் என்று அறிவித்தது. இதன் மூலம் சாலையின் விதிமீறல்கலால் ஏற்படும் விபத்துகளையும் ,உயிர் இழப்புகளையும் தடுக்கலாம் என்றும் அறிவித்தார்கள்.

Image result for chennai traffic police


மோட்டார் வாகனங்களுக்கு என உள்ள சட்ட திருத்த மசோதா 93இல் பல மாற்றங்கள் செய்து கொண்டுள்ளது மத்திய அரசாங்கம். இந்த புதிய சட்டங்கள் மூலம் வாகன ஓட்டிகள் சாலை விதிகளை மீறினால் கடுமையான அபராதம் விதிக்கப்படும் என்று கூறப்பட்டது. இந்த சட்டங்களை நாடாளுமன்றத்தில் உள்ள இரு அவைகளிலும் பேசி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் செப்டம்பர் 1 முதல் அமுலாகும் என்றும் அறிவித்தார்கள். இதனால் தமிழகத்தில் போக்குவரத்து துறை போலீசார் சாலை விதிமுறைகளை மீறுபவர்களுக்கு ஏற்கனவே இருந்த அபதாரத்தை விட அதிகமாக போடப்படும் என்று அறிவித்தார்கள்.

ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டினால் 300 ரூபாய் தான் அபராதம் விதித்தார்கள் ஆனால் தற்போது ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டினால் முன்பெல்லாம் இரண்டாயிரம் ரூபாய் தான்அபராதம் , இனி குடித்து விட்டு வண்டியை தொட்டாலே அவர்களுடைய ஒரு மாத ஊதியத்தை இழக்க வேண்டும் என்றும் கூறினார்கள். ஹெல்மெட் போடாமலும் , அதிக வேகத்துடனும் வாகனம் ஓட்டினால் 15,000 ரூபாய்க்கு மேல் கூட அபதாரம் விதிப்பார்கள் என்றும் அரசாங்கம் அறிவித்தது. முன்பெல்லாம் ஹெல்மெட் போடாமல் வாகனம் ஓட்டினால் போலீசார் எச்சரித்து விட்டு விடுவார்கள் அல்லது 100 ரூபாய் மட்டும்தான் அபராதம் விதிப்பது வழக்கம். ஆனால் இனி ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டினால் ஆயிரம் ரூபாய்க்கு மேல் தான் அபராதம் இருக்குமே தவிர அதற்கு குறையாது.

Image result for chennai traffic police

வாகனத்தில் இன்சூரன்ஸ் இல்லாமல் ஓட்டினால் 2000 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. காரில் சீட் பெல்ட் அணியாமல் சென்றால் ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும். சிக்னலை கவனிக்காமல் வாகனம் ஓட்டி செல்லும் நபர்களுக்கு முன்னரெல்லாம் 100 ரூபாய் தான் அபராதம், தற்போது 500 லிருந்து 1000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்பட உள்ளது. வாகனத்தை வேகமாக ஓட்டி விபத்து நிலைக்கு ஓட்டும் ஓட்டுனர்களுக்கு 5000 ரூபாய் வரை விதிக்கப் அபராதம் விதிக்கப்படும். அதிக எடையை சுமந்து அதாவது நிறைய ஆட்களை அமர்த்தி கொண்டு வாகனம் ஓட்டினால் முன்பு வெறும் 200 ரூபாய்தான் வசூலிக்கப்படும், தற்போது 2000 ரூபாய் வரை அபராதம் விதிப்பார்கள்.

18 வயதிற்கு குறைவாக உள்ளவர்கள் வாகனம் ஓட்டினாலும், அவர்களிடம் எந்த ஒரு உரிமை ஆவணங்களும் இல்லாமல் வாகனம் ஓட்டினாலும் 25,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட உள்ளது. அத்துடன் 3 ஆண்டு சிறை தண்டனையும் வழங்கப்படும் . மேலும் அதிவேகமாக ஆபத்தை விளைவிக்கும் வகையில் வாகனங்களை ஓட்டுபவர்களுக்கு ஆறு மாதம் அல்லது ஒரு ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்க முடியும். மேலும் அவர்களை எச்சரித்து மீண்டும் அதே மாதிரி இரண்டாவது முறையும் வேகமாக வண்டி ஓட்டினால் இரண்டு ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் ரூபாய் பத்தாயிரம் வரை அபராதமும் செலுத்த வேண்டும். வாகனம் ஓட்டுபவர்கள் மனரீதியாகவோ, உடல்ரீதியாகவோ குறை இருந்தால் அதாவது வாகனம் ஓட்டுவதற்கு தகுதி இல்லாதவர்கள் என போலீசார் கண்டறியப்பட்டால் அவர்கள் ஆயிரம் ரூபாயிலிருந்து 2,000 ரூபாய் வரை அபராதம் செலுத்தவேண்டும்.இதுமட்டுமில்லாமல் 5 லிருந்து 7 முறை வரை ஒருவர் விபத்து ஏற்படுத்தினால் ஆறு மாதங்கள் வரை சிறை தண்டனையும் ,1000 ரூபாய் வரை அபராதமும் செலுத்தவேண்டும். மீண்டும் எச்சரித்தும் இவர்கள் இதே மாதிரி விபத்துகளை அடிக்கடி ஏற்படுத்தினால் ஒரு வருடம் சிறை தண்டனையும் 10 ஆயிரம் வரை அபராதமும் விதிக்கப்படும்.

Image result for chennai traffic police new rules

இந்த சட்டத்தின் மூலம் தினமும் நிகழும் சாலை விபத்துக்களையும், பல உயிரிழப்புகளையும் தடுக்கலாம் என்று அரசாங்கம் கூறியது. சாலை விதிகளை மதிப்போம்,பல உயிரிழப்பை தடுப்போம் என்று அரசாங்கம் அறிவித்த பொன் மொழிக்கேற்ப மக்கள் செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது