100 ஆண்டுகளுக்கு மேல் சூரிய ஒளி படாத அதிசய நகரம்.

0
745
citywithout

ஒரு வாரம் சூரிய ஒளி இல்லை என்றாலே நாம் எல்லோரும் சோர்ந்துவிடுவோம் அனால் கிட்டதட்ட 100 ஆண்டுகளாக சூரியஒளி படாத ஒரு நகரம் இருந்தது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா. வாருங்கள் அந்த நகரத்தை பற்றி விரிவாக பார்ப்போம்.

கனிமம் மற்றும் பெட்ரோலிய வளம் மிக்க ஐரோப்பிய நாடான நார்வேயின் தென்பகுதியில் அடர்ந்த மலைகள் சூழ்ந்த பள்ளத்தாக்குகள் நிறைய இருக்கின்றன. அப்படி ஒரு பள்ளத்தாக்கில், பார்ப்பவர் கண்களை கவரக்கூடிய எழில் மிக நகரம் ஒன்று இருக்கிறது.

அந்த அழகிய நகரத்தின் பெயர் ருஜுகான். இங்கு சொல்லும்படியான பெரிய வசதிகள் ஏதுமில்லை. ஆகையால் 1900 ஆம் ஆண்டுக்கு முன்பு வரை இந்த பள்ளத்தாக்கில் மக்கள் யாரும் பெரிதாக வாசிக்கிவில்லை. அனால் இங்குள்ள ரூஜூக்கான் கோசன் என்னும் அழகிய நீர்வீழ்ச்சியில் இருந்து எடுக்கப்படும் நீரை கொண்டு ஒரு உர தொழிற்சாலை இயங்க ஆரமித்தது. அதனை அடுத்து அந்த தொழிற்சாலையை நம்பியும், இங்கு நீர் வளம் அதிகம் என்பதால் ஏதேனும் விவசாயம் செய்து பிழைத்துக்கொள்ளலாம் என்ற எண்ணத்திலும் மக்கள் இங்கு குடியேற ஆரமித்தனர். ஆரம்பத்தில் வெறும் 300 பேர் வசித்த இந்த சிறிய நகரத்தில் தற்போது 3500 பேர் வசித்துக்கொண்டிருக்கின்றனர்.

இந்த நகரம் ஒரு குறுகலான பள்ளத்தாக்கில் அமைந்துள்ளதால் இங்குள்ள மலை முகடுகள் தடைக்கற்களாக இருந்து, சூரிய ஒளிக்கதிர்களை இந்த நகரத்திற்குள் நுழையவிடமால் தடுத்துவிடுகிறது. இந்த நகர மக்களின் உடலில் சூரிய ஒளி விழ வேண்டும் என்றால் அவர்கள் பல மயில் தூரம் கடக்கவேண்டி இருந்தது. இப்படி சூரிய வெளிச்சத்தை பார்க்க இயலாமல் அந்த மக்கள் நூறாண்டுகளாக தவித்து வந்தனர். இவர்களின் இந்த பெரும் சோகத்தை போக்க ஒருவர் வந்தார். அவர் பெயர் மார்ட்டின் ஆண்டர்சன்.

பத்து ஆண்டுகளுக்கு முன்பு பாரிசில் இருந்து இங்கு வந்த அவர், இந்த நகரத்தின் இருளை போக்க பல திட்டங்களை தீட்ட தொடங்கினார். நவீன தொழில்நுட்பம் மூலம் எப்படி இந்த நகரத்தின் இருளை போக்க முடியும் என்று யோசிக்க ஆரமித்தார். பல கோணங்களில் யோசித்த அவர் இறுதியாக ஒரு தீர்வை கண்டுபிடித்தார். சூரியகாந்தி பூ எப்படி சூரியன் இருக்கும் திசை நோக்கி தானாக திரும்புகிறதோ அதுபோல கணிணி மூலம் இயங்கக்கூடிய ராட்சத நிலைக்கண்ணாடிகளை மலையின் உச்சியில் பொருத்தி அதை கணிணி மூலம் திருப்ப தீர்மானித்தார். அதன்படி மலை உச்சியில் 450 மீட்டர் உயரத்தில் மூன்று பெரிய கண்ணாடிகளைப் பொருத்தினார்.

சூரியவெளிச்சம் அந்த கண்ணாடிகளில் பட்டு நகரத்தின் மத்திய பகுதியில் எதிரொலிக்க ஆரமித்தது. இதன் மூலம் சுமார் 600 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட அந்த நகரத்தின் மத்திய பகுதி ஆண்டின் 365 நாட்களிலும் சூரிய ஒளியால் பிரகாசிக்கிறது. இந்த திட்டத்திற்காக சுமார் 8 .5 லட்சம் அமெரிக்க டாலர்கள் செலவழிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. கிட்டதட்ட 100 ஆண்டுகளுக்கு பிறகு கண்ணாடி மூலம் சூரிய ஒளியை பெற்றுள்ள ருஜுகான் வாசிகள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here