ஹிட்லரையே தன் விளையாட்டால் ஈர்த்த மேஜர் தியான் சந்த் பிறந்த தினம்.!

1
87
dhyan chand

இந்தியாவின் தேசிய விளையாட்டாக கருதப்படுவது ஹாக்கி தான். ஹாக்கி வரலாற்றில் ஒரு தனி முத்திரையைப் பதித்தவர் “தியான் சந்த்”. அவருடைய பிறந்த நாளைத் தான் நாம் இந்தியாவின் தேசிய விளையாட்டு தினமாக இன்றுவரை கொண்டாடப்படுகிறது. தியான் சந்த் ஒரு அசாத்தியமான ,திறமை மிக்க ஹாக்கி வீரர்.அவர் இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்னதாக 30 ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தில் வாழ்ந்தவர். ஒரு எளிமையான பஞ்சாப் குடும்பத்தில் பிறந்த இளைஞன்தான். இவர் ஹாக்கி போட்டியை பார்க்க அடிக்கடி போவார். அப்படி பார்க்கும் போது ஆங்கிலேயர்கள் ஆதரித்து அணிக்கு எதிராக இருந்த அணியை இவர் உற்சாகப்படுத்தி உத்வேகம் செய்தார். இதனை கண்ட ஆங்கிலேய அதிகாரிகள் இறங்கி சென்று விளையாடேன் என்று கிண்டலாகவும், அவரை போட்டி காலத்திற்குள் தள்ளியும் விட்டார்கள். அப்போது அவர் அடித்த கோல் 4 .

Image result for தயான் சந்த்


இவர் ஹாக்கி விளையாட்டை எந்த ஒரு மின்விளக்கு இல்லாமலும், நிலவொளியில் தான் பயிற்சி செய்வது வழக்கம் .அதனாலேயே அவர் “சந்த்” என்று பலராலும் அழைக்கப்பட்டார். ஒருமுறை நியூசிலாந்து அணியுடன் மோத முதல் முறையாக இந்திய அணிக்கு வாய்ப்பு கிடைத்தது .அதில் சந்தும் இடம் பெற்றார். இந்திய அணி எண்ணற்ற போட்டில் கலந்துகொண்டு நிறைய வெற்றிகளை குவித்தது. அப்படி கலந்த போட்டிகளில் 192 கோல்களை இந்திய அணி அடித்தது. அதில் நூறு கோல் சந்த் அடித்ததாகும்.அப்படி கலந்துகொண்ட போட்டிகளில் ஒரே ஒரு போட்டியை தவிர மற்ற எல்லா போட்டிகளிலும் இந்திய அணி வென்றது.நிறைய தங்கங்களும் வென்றார்கள். இதனால் இவருக்கு நிறைய ரசிகர்களும் இருந்தார்கள். இவரின் மீதி இரண்டு பெண்களுக்கும் அதிக நாட்டமும் இருந்தது.ஒரு முறை டான் பிராட்மன் இவருடைய ஆட்டத்தை பார்த்துவிட்டு நாங்கள் ரன் அடிப்பது போலவே இவரும் அடிக்கிறார் என்று ஆச்சரியப்பட்டார்.

மீண்டும் வந்த ஒலிம்பிக் போட்டியிலும் அப்படியே கலக்கி கொண்டிருந்தது இந்திய அணி. இறுதிப் போட்டியில் ஒரு முறை அமெரிக்காவையும் கதற விட்டார்கள்.ஷாக்கியில் தன்னுடைய தம்பிக்கும் அதிக நாட்டம் இருந்தது.இதனால் அண்ணன், தம்பி இருவரும் சேர்ந்து இந்திய அணியில் கலக்கி நிறைய கோல்கள் எடுப்பார்கள் .ஒருமுறை இங்கிலாந்து அரசி இவரிடம் தன்னுடைய குடையை கொடுத்து இதில் கோல் எடு என்று கொடுத்தார் அதை பெற்றுக்கொண்டு கோலும் அடிக்கச் செய்தார் சந்த்.

Image result for dhyan chand


இதுவரை தோல்வி என்ற ஒன்று இல்லாத இந்திய அணிக்கு பெர்லின் ஒலிம்பிக் போட்டியில் ஆரம்பத்தில் முதன்முறையாக தோல்வியைக் கண்டார்கள். பெல்டிங் நகரில் இறுதி போட்டி நடந்தது, அதில் ஹிட்லரும் இருந்தார். ஏற்கனவே ஜெர்மனி இந்தியாவை தோற்கடித்த கம்பீரத்தோடு இருந்தது. இந்திய அணியினர் அனைவரும் காங்கிரஸ் கொடியினை வணங்கிவிட்டு, களத்திற்குள் நுழைந்தார்கள். முதல் பாதியில் இந்திய அணி ஒரு கோல் மட்டும்தான் அடித்திருந்தது, தியான் சந்த் தன்னுடைய ஷூவை கழட்டி எறிந்து விட்டு வெறும் கால்களோடு களத்திற்குள் நுழைந்தார்.அப்போது மக்களின் ஆர்ப்பரிப்புடன் என்ன மாயாஜாலம் நடந்தது என்றே தெரியவில்லைஅவர் தன்னுடைய கோல்களை அடித்து மூன்றாவது முறையாகவும் ஒலிம்பிக்கில் இந்தியா தங்கம் வென்றது.

Image result for dhyan chand


தியான் சந்த் அதிகமாக ரயில்வே தண்டவாளங்களில் தான் பந்தை இரண்டு கிலோமீட்டர் தூரத்துக்கு அடித்துக்கொண்டே சென்று பயிற்சி பெறுவார். வறுமை வாட்டி கொண்டிருந்தபோதும் அவர் அதைப் பொருட்படுத்தாமல் ஹாக்கி மீது கொண்ட ஆர்வத்தினால் அதிக பயிற்சி செய்து கொண்டே இருப்பார். இவர் வேட்டையாடுதல் ,மீன் பிடித்தல் போன்ற பொழுதுபோக்கு மேற்கொள்வார். அவர் மரணமடைந்த நிகழ்வை யாரும் கண்டுகொள்ளவில்லை .இது நாம் அனைவரும் வெட்கப்பட வேண்டிய விஷயம் ஆகும். அதற்காகவே அடுத்த வருடம் அவரின் தலையை அஞ்சல் நிலையத்தில் மறக்காமல் வெளியிட்டார்கள். ஐம்பது ஆண்டுகள் கழித்து அவருடைய பிள்ளைகள் ஆக்லாந்து நகருக்கு போகும் போது எல்லா இடங்களையும் அவர் பற்றி குறிப்புகளை கண்டு வியப்படைந்தனர், பெருமைப் பட்டனர்.

1 COMMENT

  1. […] புவிசார் குறியீடு என்பது ஒரு குறிப்பிட்ட இடத்தையோ அல்லது அதற்கான தோற்றத்தையோ குறிக்கும் படி ஒரு பொருளின் மீது பயன்படுத்தப்படும் பெயர் அல்லது சின்னம் புவிசார் குறியீடு ஆகும். ஒவ்வொரு ஊருக்கும் சில தனித்தன்மைகள் பெற்ற பொருள்கள் அந்த ஊரை பெருமைப்படுத்தும் வகையில் இருக்கும். எடுத்துக்காட்டாக திருநெல்வேலிக்கு அல்வா, சேலத்து மாம்பழம், காஞ்சிபுரத்திற்கு பட்டு என அந்த ஊரில் உருவாகும் பொருள்கள் அந்த ஊரையே பிரபலப்படுத்தும் வகையில் இருக்கும்.இப்படி பாரம்பரிய முறைப்படி வேறு எங்கும் கிடைக்காத சிறப்பம்சங்களை கொண்டிருக்கும். இந்த பொருட்கள் எங்கு வேண்டுமானாலும் உருவாக்கினாலும் அதற்கு பெயர் போன இடத்தில் தான் அதன் மதிப்பும் சுவையும் அருமையாக இருக்கும். அப்படி உருவாகும் பொருட்களுக்கு அளிக்கப்படும் அங்கீகாரம்தான் புவிசார் குறியீடு.இதையும் பாருங்க : ஹிட்லரையே தன் விளையாட்டால் ஈர்த்த மே… […]

Comments are closed.