பாரம்பரிய திண்டுக்கல் பூட்டிற்கும், கண்டாங்கி சேலைக்கும் கிடைத்த அங்கீகாரம்.! குஷியில் தொழிலாளர்கள்.!

0
1584

தமிழ்நாட்டில் பூட்டிற்கு பிரபலமான திண்டுக்கல் மற்றும் கண்டாங்கி சேலைக்கு பிரபலமான ஊர் காரைக்குடி. தற்போது இப்படி புகழ்பெற்ற திண்டுக்கல் பூட்டு மற்றும் காரைக்குடி கண்டாங்கி சேலைக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. ஆகவே தமிழ்நாட்டிற்கு இதுவரை கிடைத்துள்ள புவிசார் குறியீடுகளின் எண்ணிக்கை 31 ஆக அதிகரித்துள்ளது.இது தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்க்கும் விஷயமாகும்.

Image result for dindigul lock

புவிசார் குறியீடு என்பது ஒரு குறிப்பிட்ட இடத்தையோ அல்லது அதற்கான தோற்றத்தையோ குறிக்கும் படி ஒரு பொருளின் மீது பயன்படுத்தப்படும் பெயர் அல்லது சின்னம் புவிசார் குறியீடு ஆகும். ஒவ்வொரு ஊருக்கும் சில தனித்தன்மைகள் பெற்ற பொருள்கள் அந்த ஊரை பெருமைப்படுத்தும் வகையில் இருக்கும். எடுத்துக்காட்டாக திருநெல்வேலிக்கு அல்வா, சேலத்து மாம்பழம், காஞ்சிபுரத்திற்கு பட்டு என அந்த ஊரில் உருவாகும் பொருள்கள் அந்த ஊரையே பிரபலப்படுத்தும் வகையில் இருக்கும்.இப்படி பாரம்பரிய முறைப்படி வேறு எங்கும் கிடைக்காத சிறப்பம்சங்களை கொண்டிருக்கும். இந்த பொருட்கள் எங்கு வேண்டுமானாலும் உருவாக்கினாலும் அதற்கு பெயர் போன இடத்தில் தான் அதன் மதிப்பும் சுவையும் அருமையாக இருக்கும். அப்படி உருவாகும் பொருட்களுக்கு அளிக்கப்படும் அங்கீகாரம்தான் புவிசார் குறியீடு.

இதையும் பாருங்க : ஹிட்லரையே தன் விளையாட்டால் ஈர்த்த மேஜர் தியான் சந்த் பிறந்த தினம்.!

இதன் மூலம் அந்த பொருட்கள் எங்கு உற்பத்தி ஆகிறது அதற்கான மதிப்பும், மரியாதையும் எளிதாக உலகில் உள்ள அனைவரும் கண்டுபிடிக்கலாம். இந்த புவிசார் குறியீட்டினை பெற்ற பொருட்கள் மூலம் அதன் உடைய தரத்தையும், மதிப்பையும் அறிந்து கொள்ளமுடியும். அதுமட்டுமில்லாமல் ஒரே மாதிரியான பெயரில் தயாரிக்கப்படும் போலி நிறுவனங்களின் பொருள்களைக் கூட புவிசார் குறியீடு மூலம் பொதுமக்கள் எளிதாக கண்டறியலாம். இதனால் போலி பொருட்கள் தயாரிக்கப்படுவது தடை செய்யப்படும்.

Image result for dindigul lock and kandangi saree

புவிசார் குறியீட்டு குறித்து இந்திய அரசாங்கம் 1999 ஆம் ஆண்டு ஒரு சட்டம் கொண்டு வந்தது. பலவகை பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்குவதன் மூலம் அந்த பொருட்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் அந்த சட்டம் கொண்டு வரப்பட்டது. தமிழ்நாட்டில் ஏற்கனவே பத்தமடை பாய், நாச்சியார்கோவில் குத்துவிளக்கு, தஞ்சாவூர் வீணை, மதுரை மல்லி உள்ளிட்ட 6 பொருட்களுக்கு கடந்த 2013ம் ஆண்டு புவிசார் குறியீடு வழங்கி வழங்கி சிறப்பித்தது. கடைசியாக ஈரோட்டில் உள்ள மஞ்சளுக்கும் புவிசார் குறியீடு வழங்கப்பட்டது.

dindugal-lock

இந்த புவிசார் குறியீடு வழங்குவதன் மூலம் பொருள்களுக்களை பாதுகாக்கலாம் , சர்வதேச அளவில் அங்கீகாரம் கிடைக்கும். சர்வதேச அளவில் ஏற்றுமதியும் அதிகரிக்கும். பொருள்களுக்கு சட்டபூர்வ பாதுகாப்பு கிடைக்கும். மேலும் புவிசார் குறியீடு வாங்கப்பட்ட பொருட்களை மற்றவர்கள் யாரும் தவறாக போலி முறையில் தயாரித்து விற்கப்படுவதை தடுக்கப்படும். இந்த புவிசார் குறியீடுகள் சர்வதேச அளவில் அனைவராலும் மதிக்கப்படும். அந்த வகையில் தற்போது திண்டுக்கல் பூட்டுக்கும் , காரைக்குடி கண்டாங்கி சேலைக்கும் கிடைக்கப்பெற்றுள்ளது.இது குறித்து 2013ம் ஆண்டு தொழிலாளர் கூட்டுறவு சங்கம் விண்ணப்பித்த தன் படி திண்டுக்கல் பூட்டுக்கு புவிசார் குறியீடு தரப்பட்டது.மேலும் கடந்த சில 150 ஆண்டுகளுக்கு முன்னர் சங்கரலிங்கச்சாரி தயாரிப்பில் உருவானது தான் திண்டுக்கல் பூட்டு.

Image result for kandangi saree

இதேபோன்று 2013ஆம் ஆண்டு ராஜீவ் காந்தி கைத்தறி கூட்டுறவு நெசவாளர்கள் விண்ணப்பித்த நிலையில் தான் காரைக்குடி கண்டாங்கி சேலைக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டது.மேலும் செட்டி நாட்டவர் கைவண்ணத்தில் உருவானது தான் இந்த கலாசாரம் மிகுந்த கண்டாங்கி சேலை.முன்னதாக மதுரை மல்லி பூ, சுங்குடி சேலை சேலம் மாம்பழம், பத்தமடை பாய் உள்ளிட்ட 29 பொருட்களுக்குவழங்கப்பட நிலையில் தற்போது இந்த இரு பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.