எப்படி அங்கே போகலாம் ?சர்ச்சையை ஏற்படுத்திய புகைப்படம்.! தினேஷ் கார்த்திக்கு நோட்டீஸ் அனுப்பிய பிசசிஐ.!

0
294
Dinesh

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியில் இடம் பிடித்து விளையாடிய தமிழகத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர் தான் தினேஷ் கார்த்திக். தினேஷ் கார்த்திக் வெஸ்ட் இண்டீஸ் கரீபியன் பிரீமியர் லீக் நடத்தி வரும் டி20 தொடரின் டிரின்பகோ நைட் ரைடர்ஸ் அணியின் உடை மாற்றும் அறையில் இருந்தார் என்று பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் அவர் அந்த அணியின் பயிற்சியாளர் பிரெண்டன் மெக்குலன் உடன் பேச்சுவார்த்தை செய்து கொண்டிருந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி கொண்டு வருகின்றது. இதனால் பல நெட்டிசன்கள் தினேஷ் கார்த்திக்கு அங்கே என்ன வேலை? என்று கேள்விகளை எழுப்பினர்.

என்ன புகைப்படம்?

பிசிசிஐயின் விதிமுறைகள் படி இந்திய வீரர்கள் வெளிநாட்டு டி20 தொடர்களில் ஆடக்கூடாது. இந்த விதியை மறந்து இருப்பாரோ!! என்ற சந்தேகம் எழுந்தது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக தினேஷ் கார்த்திக் இருக்கிறார். 2019 ஆம் நடந்த ஐபிஎல் தொடரில் இந்த அணி ஐந்தாம் இடத்தை பிடித்தது.இது குறித்து கொல்கத்தா கேப்டன் மீது பல்வேறு சர்ச்சைகள் மக்களிடையே நிலவின. கரீபியன் பிரீமியர் லீக்கில் நைட் ரைடர்ஸ் அணியின் உடையை அணிந்து இருந்தாலும், அவருடன் நைட் ரைடர்ஸ் அணியின் பயிற்சியாளர் இருக்கிறார் என்ற தகவலும் வெளியானது. இதன்மூலம் இந்த இரண்டு அணிக்கும் பிரெண்டன் மெக்குலன் தான் பயிற்சியாளர் என சில மாதங்களுக்கு முன் நியமிக்கப்பட்டார். அவருடன் தான் தினேஷ் கார்த்திக் ஆலோசனை செய்து இருந்தார் என்ற தகவல் வெளியானது.

இதுகுறித்து கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் தினேஷ் கார்த்திக்கு நோட்டீஸ் அனுப்பியது. மேலும் அவர் அந்த தொடரில் வீரராக பங்கேற்கவில்லை என்றாலும்… எதற்காக நைட் ரைடர்ஸ் அணியின் உடையில் அங்கு இருந்தார். இந்த வெளிநாட்டு டி20 தொடரில் யுவராஜ் சிங்குக்கு மட்டும் தான் விளையாட அனுமதி பெற்ற ஒரே இந்திய வீரர் என்றும் கிரிக்கெட் நிர்வாகம் தெரிவித்தது. அதேசமயம் தினேஷ் கார்த்திக் அனுமதி பெறாமல் அங்கு சென்றிருப்பது சிக்கல்களை ஏற்படுத்தி உள்ளது என தெரிவித்தார்கள்.

Image result for தினேஷ் கார்த்திக்

மேலும் இவர் வீரராக பங்கேற்பதற்கு தான் தடை தவிர அந்த அணியுடன் இருப்பது எந்த ஒரு பிரச்சனையும் இல்லை என்றும் இணையங்களில் பரவி வருகிறது. இதன் மூலம் இவரை கொல்கத்தா அணியின் கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்படுவாரா ? என்ற பல சர்ச்சைகள் எழுந்துள்ளன. 2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் காரணமாக அடுத்த தொடரில் கொல்கத்தா அணியின் கேப்டனாக இருப்பேனா? என்ற ஆலோசனையில் தான் பயிற்சியாளரிடம் பேசி கொண்டிருந்தேன் என்றும் தெரியவந்தது.

இதுகுறித்து கிரிக்கெட் வாரியம் கேட்டபோது , கிரிக்கெட் வாரியத்தின் தலைமை அதிகாரி ராகுல் நோட்டீஸ் அனுப்பியது உண்மைதான் என்று கூறினார் .மேலும் வெளிநாட்டு அணியுடன் விளையாட தடை விதித்ததைத் தவிர அணியுடன் இருப்பதற்கு தடை இல்லை என்றும் கூறினார்.அடுத்த ஐபிஎல் தொடரிலும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கேப்டனாக தொடர்வது குறித்து தான் தன்னுடைய புதிய பயிற்சியாளர் உடன் ஆலோசனை கேட்டுக் கொள்ளத் தான் கரீபியன் பிரீமியர் லீக்கு சென்றுயிருந்தார் என்று சில கருத்துக்களும் வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. மேலும் அவரை கொல்கத்தா அணியின் அடுத்த தொடரிலும் கொல்கத்தா அணியின் தலைவராக தொடரலாம் என்றும் தெரிவித்தார்கள்.