Home செய்திகள் இந்தியா குடி போதையில் வாகனம் ஒட்டியதால் அபராதம்.! பைக்கையே கொளுத்திவிட்டு சென்ற நபர்.!

குடி போதையில் வாகனம் ஒட்டியதால் அபராதம்.! பைக்கையே கொளுத்திவிட்டு சென்ற நபர்.!

0
694
Bike

இந்தியாவில் மோட்டார் வாகனங்களுக்காக புதிய சட்டங்களை கொண்டு வந்துள்ளது அரசாங்கம்.இதை செப்டம்பர் 1 முதல் அமல்படுத்தப்பட்டது.மேலும் இந்த புதிய மோட்டார் வாகன சட்டத்தின்படி போக்குவரத்து போலீசார் சாலையோரங்களிலும், வாகன சோதனை சாவடிகளிலும் தீவிரமாக கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர் .சாலை விதிமுறைகளை மீறுபவர்களுக்கு உடனடியாக அபராதமும் போடப்பட்டு வருகிறது.

டெல்லியில் நேற்று இரவு சேராய் என்ற பகுதியில் கொடூரமான சம்பவம் நிகழ்ந்தது.டெல்லியில் வசித்து வரும் ராகேஷ் என்பவர் மது அருந்துவிட்டு பைக்கை தாறுமாறாக ஒட்டிக் கொண்டு வந்தார். இதனால் அங்கு இருந்த டிராபிக் போலீசார் அவரை நிறுத்தி தீவிரமாக சோதனை செய்தார். அவர் தன்னிலை அறியாத அளவிற்கு போதையில் உள்ளதை அறிந்து போலீசார் அவரிடம் ஆர்சி புக், வாகனங்களுக்கு உரிய ஆவணங்களை கேட்டார். ஆனால் அவரிடம் எதுவும் இல்லை. இதனால் போலீசார் ராகேஷ்க்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தது. ஏற்கனவே போதையில் இருந்த ராஜேஷ் என்ன? செய்கிறோம் என்று தெரியாத அளவிற்கு போலீசாரிடம் ஃபைன் கட்ட முடியாது என்று தகராறு செய்து கொண்டிருந்தார்.

பின்னர் திடீரென்று தன்னுடைய பைக்கில் உள்ள பெட்ரோல் டேங் மூடியை கழட்டி தீக்குச்சியை பற்றவைத்து பெட்ரோல் டேங்கில் போட்டார். மளமளவென பைக் உடனடியாக தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இதனால் அங்கு சுற்றியிருந்த மக்களும் , போலீசாரும் அதிர்ச்சி உற்றார்கள். இந்த நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பைக்கை எரித்து விட்டு போலீசாரிடம் மேலும் சண்டை போட்டுக் கொண்டிருந்தார்.

இதையடுத்து போலீசார் தீயணைப்பு துறை வரவைத்து அந்த நெருப்பை அணைத்தது. இருந்தாலும் பைக் நன்றாக எரிந்து கருகிப் போனது . டெல்லி வாலிபரை அபராதம் கட்ட சொன்ன காரணத்திற்காக மது போதையில் என்ன செய்கிறோம் என்று தெரியாத நிலையில் பைக்கையும் எரித்துவிட்டு போலீசாரிடம் தகராறு செய்து வந்தார். இந்த சம்பவம் டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிகழ்வு மூலமாவது இனி மக்கள் வாகனத்திற்கு உரிய ஆவணங்களையும், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டாமல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது