இனி அதிமுகவிலும் தொடங்குகிறது வாரிசுகள் ஆட்சிகள்.! எரிச்சலில் அதிமுக தொண்டர்கள்.!

0
70

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அரசியலில் இனி யாரையும் நம்பி ஒரு பிரயோஜனமும் இல்லை என்று நினைத்து தனது மகனையே அரசியலில் குதிக்க முடிவு செய்து உள்ளார் என்ற திடுக்கிடும் தகவல் வெளியானது. இதுக்கு முன்னால் தேர்தலில் எந்த ஒரு வாரிசுகளும் அரசியலில் நிறுத்த இடமில்லை என்றும் , ஒரு சாதாரண தொண்டன் கூட இந்த முதலமைச்சர் பதவிக்கு வரலாம் என்பது தான் அதிமுக தலைமைலில் சொல்லியிருக்கும் விதிமுறை ஆகும்.ஆனால் தற்போது அந்த விதியை தலைகீழாக மாற்றிவிட்டார் அதிமுக முதலமைச்சர்.

Image result for edappadi palanisamy in london


தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடன் எடப்பாடி பழனிசாமி அவர்கள் சில மாதங்களுக்கு முன்னர் தன் மகனுக்காக சீட் கேட்டு விண்ணப்பித்து உள்ளார் என்றும் ஒரு சில தகவல்கள் மூலம் தெரியப்படுகிறது. முந்தய காலங்களில் அரசியலில் இருந்த எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகிய ஜாம்பவான் அவர்கள் முதலமைச்சர் பதவியில் இருந்த போது எம்பி, எம்எல்ஏ தேர்தல்களில் போட்டியிட வாரிசுகளுக்கு வாய்ப்பளிக்க மாட்டார்கள். அப்படியே அவர்கள் போட்டியிட வாய்ப்பு கேட்டாலும் அவர்கள் குறித்து யோசித்து, அவர்கள் பற்றி விசாரித்து அப்புறம்தான் அரசியலில் சேர்ப்பார்கள்.
வாரிசு அரசியல் என்றாலே அனைவருக்கும் கவனத்தில் வருவது திமுக அரசியல் தான். தற்போது இந்த நிலையை அதிமுகவும் மாறி விடுமோ என்ற கவலை ஒரு பக்கம்,இன்னொரு பக்கம் அதிமுக உறுப்பினர்களிலில் ஒரு சில பேர் தன் மகன்களுக்காக சீட்டு கேட்கும் போது மற்ற அதிமுக தொண்டர்கள் , கடும் கோபத்திலும்,ஆத்திரத்திலும் உள்ளார்கள் என்ற சுவாரசியமான உண்மைகளும் வெளிவந்தது. இதனால் தங்களின் வாரிசுகள் தவிர மற்ற யாராவது வெற்றி பெற்றால் , அவர்களை எப்படியாவது தோற்கடித்து தங்களின் வாரிசுகளை நிற்க வைக்க வேண்டும் என்று தந்தைமார்கள் எண்ணம் தோன்றும். இதனால் அரசியலில் போட்டி ,பொறாமை,வன்மம் , நேர்மை, நியாயம் எல்லாம் சீர்குலையும் என்று தெரியாமல் உள்ளார்கள்.இந்த நிலைமை மற்ற எதிர் கட்சிகளுக்கு சாதகமாக மாறிவிடும்.


எடப்பாடி அவர்கள் தன் மகனை கட்சியில் நிறுத்த பல முயற்சிகள் செய்து கொண்டு வருகிறார் என்பது அவர் கட்சி நிகழ்ச்சிகளுக்கும் பொது நிகழ்ச்சிகளுக்கும் அவர் மகனை பங்கேற்கும் படி கூறப்படுவதுன் மூலம் தெரிகிறது.மேலும் ஓபிஎஸ் மகனுக்கு சமமாக தன் மகனையும் அரசியலில் கொண்டு வரவேண்டும் என்ற எண்ணம் எடப்பாடிக்கு தோன்றியது. ஆனால் டெல்லியில் தன்னுடைய செல்வாக்கை எப்படியாவது காட்ட வேண்டும் என்பதுதான் எடப்பாடியின் பலநாள் எண்ணமாகும். அதற்காக தன்னுடைய கட்சியில் உள்ள ஆதரவாளர்களுக்கு ராஜ்யசபாவில் சீட் உட்பட பலவகையிலும் முயற்சி செய்தும்
ஓபிஎஸ்க்கு சமமாக அல்லது அவரை விட உயர்ந்து செல்வாக்கை டெல்லியில் பெற முடியவில்லை எடப்பாடியால் .
அதனால் தான் தன் மகனை எப்படியவது மத்திய அமைச்சராக அமர்த்த வேண்டும் என்ற யோசனை இருக்கிறதுஎன்ற தகவலும் வெளியானது. அவரின் இந்த சிந்தனைக்கு ஏற்றவாறு மிதுன் ஆர்வத்துடனும், நம்பிக்கையுடனும் செயல்பட்டு அரசியலில் தன்னுடைய பங்கை தந்து வருகிறார்.இதனால் அரசியலில் உள்ள பல சிறிய தொண்டர்களை கூட நம்பாமல் தன் மகனை நம்பி இருப்பது அதிமுக தொண்டர்கள்இடையே அதிக கோபம் நிலவியது. இந்த தகவல்கள் எந்த அளவுக்கு உண்மையோ பொய்யோ என்று தெரியாது. ஒருவேளை எடப்பாடி மகன் மீதுன் மிக திறமையானவராக இருந்தும் , அதன் மூலம் நாட்டிற்கு பல நன்மைகளும் ஏற்படலாம். ஆனால் அவர் வாரிசு என்ற ஒரு காரணத்தினால் அவரை ஒதுக்கி விடுவது நியாயமாக இருக்காது. வாரிசாக இருந்தாலும் நாட்டின் நலன் கருதி, நாட்டின் நன்மைக்காக பாடுபடுவதே உண்மையான அரசியல்வாதி.