FaceApp பயன்படுத்திறீங்களா மக்கா.! கொஞ்சம் உஷாரா இத படிச்சிட்டு அப்புறம் இன்ஸ்டால் பண்ணுங்க.!

0
19965
Vijay-Ajith

தற்போது சமூக வலையத்தளங்களில் அதிகமாக பேசப்படும் விஷயம் ஃபேஸ்ஆப் செயலி-யை பற்றி தான். யாரோஸ்லாஃப் காண்ட்ஷராஃப் நிறுவிய ரஷ்ய நிறுவனமான ‘வைர்லெஸ் லேப்’ வடிவமைத்த செயலிதான் ஃபேஸ்ஆப்.மேலும் ரஷ்யா இன மக்கள் தான் முதன் முதலில் இந்த ஃபேஸ்ஆப் செயலி -யை பயன்படுத்தினார்கள் .ஃபேஸ்ஆப் செயலி என்பது இளைனர் ஒருவரின் முகத்தோற்றத்தை ஒரு 50 வருடம் அதாவது முதியவர் ஆனால் எப்படி இருப்பார் என்பதை காட்டுவது தான் இதன் பயன்பாடுஆகும்.

Image result for face app tamil actors

இந்த ஃபேஸ்ஆப் செயலி தான் அனைத்து சமூக வலையத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இப்போதைய ட்ரென்டே இந்த ஃபேஸ்ஆப் தான். ஏழை முதல் பணக்காரன் வரை அனைவருமே அதிக அளவில் மாற்றி அமைக்கப்பட்ட தங்கள் புகைப்படத்தை சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகிறார்கள். இன்று டுப்ஸ்மாஷ், டிஃடோக்,ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகிய அனைத்து சமூக வலையத்தளங்களிலும் இது பற்றி தான் பேசப்படுது , அதிக புகைப்படங்கள் பகிரப்படுகிறது.

ஃபேஸ்ஆப் செயலி-யை ஐ.ஓ.எஸ் மற்றும் ஆன்ட்ராய்டு மொபைல் போன்களில் பயன்படுத்தலாம் என்று ஃபேஸ்ஆப் செயலி நிறுவனம் சொன்னது .இந்த ஃபேஸ்ஆப் செயலி இன்ஸ்டால் செய்வது நன்மையா ! தீமையா ! பலர் வினவினர். ஃபேஸ்ஆப் செயலி பயன்படுத்துவதன் மூலம் ஒருவரின் புகைப்படத்தை அவர்கள் அனுமதில்லாமல் திருடுகிறது என்று சொல்லப்படுகிறது . ஒரு முறை ஃபேஸ்ஆப் செயலி-யை இன்ஸ்டால் செய்து தன்னுடைய முதிய வயது உருவத்தை பார்த்தால் போதும் உடனுக்குடன் அவர்கள் சம்பந்தப்பட்ட தகவல்கள் எல்லாம் ஃபேஸ்ஆப் செயலி நிறுவனம் எடுத்து விடுகிறார்கள் என்று கூறப்படுகிறது .

Image result for face app

ஒருவர் சில ஆய்வின் மூலம் சொன்னது ஃபேஸ்ஆப் செயலிக்கு நிபந்தனைகள் உள்ளது. அது ஒரு முறை அவர்கள் புகைப்படம் போட்டு ஆப்-யை பயன்படுத்தினால் தானாகவே அவர்கள் வெப்ஸய்டுக்கு சென்று விடும் என்றும், மேலும் அவர்கள் புகைப்படம் மட்டும் தகவல்களை எதுக்கு வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்வோம் என்று சொல்லி இருந்தார்கள் . அதனால் இந்த ஆப் தனியுரிமையாக (பிரைவஸி) இருக்காது என்று சொன்னார். இதனால் பல நபர்கள் அதிர்ச்சியில் உள்ளார்கள்.

செயலி வந்த சில மணி நேரங்களிலே எதிர்மறையான எண்ணங்கள் பரவத் தொடங்கின. இதனால் ஒரு சில பேர் குற்றச்சாட்டு தொடுத்தனர். பலர் அவர் அவர் கருத்துக்களை தெரிவிக்கின்றனர்.அடுத்த ஆண்டு அமெரிக்காவில் நடக்க இருக்கும் தேர்தலில் அசம்பாவிதங்கள்(தகவல்களை திருடுவது ) நடக்க ரஷ்யா செய்யும் ஏற்பாடுதான் என்று தொனியில் சிலர் ட்வீட் செய்து இருக்கிறார்கள். மட்டும் சில பேர் என் கேமராவில் உள்ள அனைத்துபுகைப்படத்தையும் திருடுகிறார்கள் என்று சொன்னார்கள்.

இதுகுறித்து கார்டியன் ஐஓஎஸ் ஆப் நிறுவனரான வில் ஸ்டராஃபாக்கும் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்தார். என் ஃபேஸ்ஆப்லில் இதுபோன்ற செயல்கள் இல்லை உறுதியாக கூறினார். ஒரு ஆய்வின் மூலம் அவர் கூறியது என் ஃபேஸ் ஆப், மொபைல் கேமிராவில் இருந்துஎந்த படங்களையும் எடுக்கவில்லை.

அதுமட்டும் இல்லாமல் சமூக வலையத்தளங்கள் என்றாலே பிரைவஸி எதிர்ப்பார்க்க கூடாது. அனைத்து இணையங்களும் மற்றவரின் தகவல்களை திருடுவதே அவர்கள் வேளை ஆக உள்ளது. ஆனால் ஒரு சில பேர் இதை பெரிதாக பொருட்படுத்துவதில்லை.

ஃபேஸ்ஆப் செயலியை பயன்படுத்துவது அவர் அவர் எண்ணங்களை பொறுத்தது. நவீன உலகம் எந்த அளவுக்கு வாழ்கிறதோ அந்த அளவுக்கு ஆபத்தும் உள்ளது