நீங்கள் செய்தது எல்லாமே தப்பு தான்.! தோல்வி குறித்து வறுத்தெடுத்த கங்கூலி.!

0
8312
Ganguly

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் 2019 ஆம் ஆண்டிற்கான உலக கோப்பை தொடரில் இந்திய அணி கோப்பையை கைப்பற்றும் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில் இந்திய அணி அரையிறுதியில் பரிதாபமாக தோற்று வெளியேறியது. இந்நிலையில் இந்திய அணியின் தோல்வி குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரரான கங்குலி பேட்டி ஒன்றினை அளித்துள்ளார்.

ganguly slams indian team coach ravi shastri and captain kohli

இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிக்கான உலக கோப்பை அரை இறுதிப்போட்டி கடந்த 9 ஆம் தேதி நடைபெற்றது. இந்த போட்டியில் நியூஸிலாந்து அணி மிகவும் சுலபமான இலக்கையே இந்திய அணிக்கும் நிர்ணயித்தது. ஆனால், இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ஒற்றைபடை ரன்களில் அவுட் ஆனதால் இந்திய அணி இந்த போட்டியில் தோல்வியடைய முக்கிய காரணமா இருந்தது.

இதையும் பாருங்க : பெட்டிக்கடையில் வாங்கிய 200 ரூபாய் கடனை திருப்பித்தர 30 ஆண்டுகள் கழித்து வந்த அமைச்சர்.!

அதே போல இந்த போட்டியில் ரிஷப் பண்ட் களத்தில் நின்ற நிலையில், ஐந்தாம் வரிசையில் அனுபவ வீரர் தோனியை அனுப்பாமல் தினேஷ் கார்த்திக்கை அனுப்பியது மிகப்பெரிய தவறு. அதே போல இந்த போட்டியில் தினேஷ் கார்த்திக் விக்கெட்டுக்கு பிறகு தோனி களமிறங்குவார் என்று எதிர்பார்க்கபட்ட நிலையில் பாண்டியா அனுப்பபட்டதும் தவறு என்று பலரும் கருத்து தெரிவித்தனர்.

Image result for ganguly

இந்த நிலையில் இதே கருத்தினை ஆமோதித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் கங்குலியும் கருத்து தெரிவித்துள்ளார் அதில், ஐந்தாம் வரிசையில் தோனியை இறக்காமல் தினேஷ் கார்த்திக்கையும் அதன்பின்னர் பாண்டியாவையும் இறக்கியது மிகப்பெரிய தவறு ,தோனியை இறக்கியிருந்தால் ரிஷப்புடன் பார்ட்னர்ஷிப் அமைத்திருப்பார். கடைசியில் அடித்து ஆட தினேஷ் கார்த்திக்கும் பாண்டியாவும் இருந்திருப்பார்கள். ஆனால் தோனியை ஏழாம் வரிசையில் இறக்கி தவறு செய்துவிட்டதாக தெரிவித்தார் என்று கூறியுள்ளார்.