புது ஜோடிகளாக மலையேற சென்றவர், கணவரை இழந்து தனியாக வந்த துயரம் – புகைப்படம் உள்ளே

0
5
divya3

குரங்கணிக்கு திருமணமான புது ஜோடிகளாக சென்ற ஈரோட்டைச் சேர்ந்த  விவேக் மற்றும் திவ்யா காட்டுத் தீயால் தங்களின் வாழ்க்கையை  இழந்த நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.குரங்கணி மலைப் பகுதியில் வார இறுதி மலையேற்றப் பயிற்சிக்கு சென்ற கல்லூரி மாணவிகள், சுற்றுலா பயணிகள் மற்றும் குழந்தைகள் வனப்பகுதிக்குள் பரவிய பயங்கர காட்டுத் தீயில் மாட்டிக்கொண்டர்.

divya

காட்டுத்தீயில் சிக்கி இதுவரையிலும் சென்னையைச் சேர்ந்த 6 பேர் உட்பட 9 பேர் பலியானதாக தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் தெரிவித்திருந்தார்.இதில் ஈரோட்டைச் சேர்ந்த  விவேக்கும் பரிதாபமாக உயிரிழந்தார். திருமணமான 100 நாட்களே ஆன நிலையில்.அடுத்த மாதம் துபாய் செல்ல திட்டம்மிட்டிருந்த விவேக் இறுதியாக தனது மனைவி மற்றும் நண்பர்களுடன்  குரங்கணி பகுதிக்கு மலையேற முடிவு செய்து சென்றுள்ளார்.

தங்களின் ட்ரெக்கிங் பயணத்தை குறித்து விவேக் தன்னுடைய  ஃபேஸ்புக் பக்கதில்  ஆவலுடன்  பதிவிட்டு புறப்பட்டு சென்றுள்ளார்.  கடந்த சில தினங்களுக்கு முன்புதான் திவ்யா, விவேக் தம்பதியர் திருமணமாகி தங்களின் 100வது நாளை கொண்டாடியுள்ளனர்.ஆனால் அவர்களுக்கு இதுவே அவரின்  இறுதி பயணமாக மாறும் என்று எதிர்பார்க்கவில்லை.

natarajan

குரங்கணி மலையில் ஏற்ட்ட காட்டுத்தீயை விவேக் தான் முதலில் பார்த்துள்ளார்.காற்றின் வேகத்தில் தீ  வேகமாக பரவியுள்ளது. இதனால் தனது மனைவியான திவ்யாவை காப்பாற்ற அவரை அணைத்தபடி அவர் ஓடியுள்ளார் .அப்படி ஓடியதில் விவேக் இறந்துவிட்டார். தற்போது திவ்யா மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.கணவனுடன் சென்ற திவ்யா கணவனை இழந்து தற்போது வீடு திரும்பியுள்ளது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.