இப்படி சென்றால் ஹெல்மட் இல்லை என்றால் கூட தப்பித்து விடலாம்.! ஐ பி எஸ் அதிகாரியே பகிர்ந்த வீடியோ.!

0
1
helmet

இந்தியா முழுவதும் செப்டம்பர் 1 முதல் போக்குவரத்து துறையில் புதிய மோட்டார் வாகன சட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஹெல்மெட்(தலைக்கவசம்) அணியாமல் வாகனங்களை ஓட்டிச் சென்றால் உடனடியாக 1000 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என்று அரசாங்கம் அறிவித்தது. மேலும் இந்த சட்டத்தை பல்வேறு மாநிலங்கள் நடைமுறைப்படுத்தியது. இப்படி மத்திய அரசாங்கம் கொண்டுவந்த இந்த புதிய மோட்டார் வாகன சட்டங்களை ஒரு சில மாநிலங்களும் அதில் உள்ள ஒரு சில மாவட்டங்களிலும் பின்பற்றாததால் உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து அனைத்து மாநிலங்களிலும் புதிய மோட்டார் வாகன சட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் , சாலை விதிமுறைகளை மீறுபவர்களுக்கு உடனடியாக அபராதங்கள் விதிக்கப்படும் என்று அறிவித்தார்கள்.

Image result for without helmet fine


இதனை தொடர்ந்து ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டி வந்தால் அவர்களுக்கு உடனடியாக ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும் என்று தெரிவித்தார்கள். இதையடுத்து ஐபிஎஸ் அதிகாரி பங்கஜ் நயின் என்பவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் புதிய மோட்டார் வாகன சட்டம் குறித்து வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டிய பல பேர் அபராத தொகை கட்டியுள்ளனர். ஆகவே ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுவதன் மூலம் அபராத தொகையை செலுத்தாமல் எப்படி செல்வது என்பதற்கான வழியைக் கூறிஉள்ளார்.

மேலும் அவர் ‘ ஹெல்மெட் அணியாமல் வண்டியை ஓட்டிச் சென்றால் அபராதம் கட்ட வேண்டும், ஆனால் வண்டியை தள்ளிக் கொண்டு சென்றால் !!!. அந்த வீடியோவில் ஹெல்மட் போடாமல் தள்ளிக் கொண்டு செல்கிறார்கள்.இது குறித்து அவர் கூறியது , ஹெல்மட் போடாமல் வண்டி ஓட்டினால் தான் குற்றம். ஆனால் நடந்து செல்வதன் மூலம் எந்த அபராதமும் எந்த தண்டனையும் கிடைக்காது என்றும் கூறினார். இப்படி ட்விட்டரில் ஐபிஎஸ் அதிகாரி பங்கஜ் நயின் தண்டனையை தவிர்ப்பதற்காகவும், அபராத தொகையிலிருந்து தப்பிப்பதற்காக ஒரு நல்ல வழி தான் என்றும் கூறியுள்ளார்கள். மேலும் அவர் சாலை விதிகளை மதித்து இந்த மாதிரி அபராதம் செலுத்தும் நிலையை தவிருங்கள் என்றும் வலியுறுத்தியுள்ளார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிகமாக பரவி கொண்டு வருகிறது.இப்படி ஐபிஎஸ் அதிகாரி பங்கஜ் நயின் கூறிய செய்தி நல்லா ஐடியாவாக இருந்தாலும், ஆனால் எல்லா இடங்களிலும் வண்டியை தள்ளிக் கொண்டு செல்ல முடியாது அல்லவா!!!! என்று பல நெட்டிசன்கள் கேட்டு கேள்வி கேட்டுள்ளனர். ஆகவே சாலை விதிகளை பின்பற்றுவதன் மூலம் விபத்துகளையும், உயிரிழப்புகளையும் தடுக்கலாம்.

முன்பெல்லாம் சாலை விதிமுறைகளின்படி ஹெல்மெட் அணியாமல் சென்றால் 100 ரூபாய் அபராதமும், அதுவும் ஒரு சில சமயங்களில் திட்டி விட்டு போ என்று விட்டுவிடுவார் போலீசார்.” கட்டாயம் ஹெல்மெட்” என்ற திட்டம் கொண்டு வந்து சில நாட்கள் மட்டும் தான் அதை கடைபிடித்தார்கள் .ஆனால் , மக்கள் சில மாதங்களுக்கு பின் ஹெல்மெட் யாரும் அணியவில்லை.இதற்கு காரணம் தண்டனைகள் குறைவாக இருந்தது தான். தற்போது ஹெல்மட் அணியாமல் வந்தால் 1000 ரூபாய் அபராதம் என்று கொண்டுவரும் சட்டத்தின் மூலம் அனைவர் மனதில் பயம் ஏற்பட்டு ஹெல்மெட்டை அணிவார்கள் என்று தெரிவித்தது அரசாங்கம்.” தலை காக்கும் கவசம் உயிர் காக்கும் கவசம்” என்று வாகனங்களில் பொன்மொழிகளை எழுதினால் மட்டும் பத்தாது அதற்கேற்றவாறு நடந்து கொள்ள வேண்டும் என்று போக்குவரத்துத்துறை தெரிவித்தார்கள்.