1 ஜிபிபிஎஸ் அதிரவைக்கும் வேகம்.! இன்று களமிறங்கியது ஜியோ பைபர் திட்டம்.! பெறுவது எப்படி.!

0
739
Jio

ஜியோ ஜிகா பைபர் பிராட்பேண்ட் என்ற புதிய சேவை இன்று முதல் இந்தியாவில் பெருநகரங்களில் மட்டும் அறிமுகப்படுத்த உள்ளதாக முகேஷ் அம்பானி தெரிவித்தார். கொஞ்சம் கொஞ்சமாக அனைத்து பகுதியிலும் இந்த சேவைகள் முழுமையாக கிடைக்கும் என்றும் தெரிவித்தார். சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் 42 ஆம் ஆண்டு பொதுக்குழு கூட்டம் மும்பையில்நடைபெற்றது.இதில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி இந்த ஜியோ ஜிகா பைபர் சேவையைப் பற்றி கூறினார்.

Image result for jio fiber

இந்த சேவையை குறித்து அவர் கூறியது, ஜியோ ஜிகா பைபர் சேவையை பயன்படுத்தினால் தற்போது இருக்கும் இணைய வேகத்தை விட அதிவேகமாக இணைய வசதிகள் கிடைக்கும். மேலும் இது ஐந்து கோடி வீடுகளுக்கு வழங்க இருப்பதாகவும் கூறினார், இதற்கு முதல் கட்டமாக 1100 நகரங்களில் முதலில் தொடங்கப் போகிறது என்றும் அந்த கூட்டத்தில் தெரிவித்தார். இந்த புதிய சேவையை பெற அந்தந்த பகுதியில் உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் பதிவு செய்தால் பெரும்பான்மை அடிப்படை பொருத்து முன்னுரிமை வழங்கப்படும் என்று ஜியோ நிறுவனம் தெரிவித்தது. முதலில் jio.com அல்லது மைஜியோ என்ற செயலி மூலம் உங்களது தகவல்களை முன்பதிவு செய்து கொள்ளவும். இதுதான் இது ஜிகாஃபைபரின் சேவையை பெறுவதற்கான முதல் கட்டமாகும். இப்படி எப்பகுதியில் அதிகமான எண்ணிக்கையில் முன்பதிவு செய்வோர் காண்பிக்கிறதோ அதை பொறுத்துதான் இந்த சேவையை, இலவச இணைப்பு வழங்கப்படும் என்று ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது

ஜியோ தொலைத்தொடர்பு சேவையில் தற்போதுவரை 350 மில்லியனுக்கும் அதிகமான சப்ஸ்கிரைப்களும் உள்ளதாக தெரிவித்தார்கள்.மேலும் அவர் ஜியோ பைபர் சேவை மூலம் கிடைக்கும் இணைய வேகம் மிக அதிகமான அளவில் இருக்கும் என்றும்,இது குறைந்தபட்சமாக 100 எம்பிபிஎஸ் ஆகவும் அதிகபட்சம் 1ஜிபிபிஎஸ் ஆகவும் இணையசேவை வழங்கப்படும் என்றும் கூறினார். அதுமட்டுமில்லாமல் அமெரிக்காவில் இதுவரை உள்ள இணைய வேகம் 90 எம்பிபிஎஸ் ஆக தான் இருக்கிறது. இந்தியாவில் தான் முதன் முறையாக அறிமுகம் செய்யப்படுகிறது என்று ஆர்வத்துடன் கூறினார்.இப்படி தொலைதொடர்பு துறையில் நிறைய பல சலுகைகள் தந்து வந்தார். அப்படி வழங்கி வந்த நிலையில் தற்போது மிகப் பெரிய சந்தையான பிராட்பேண்ட் சேவையும் வழங்க உள்ளதாக ரிலையன்ஸ் நிறுவனம் அறிவித்தது.

 இந்த சேவையை பெற அந்தந்த பகுதியில் உள்ளோர் ஆன்லைனில் பதிவு செய்தால், பெரும்பான்மையை பொறுத்து, முன்னுரிமை அடிப்படையில் பிராட்பேண்ட் சேவையை ஜியோ நிறுவனம் வழங்கும்.

ஜியோ சேவை கட்டணம் 700 ரூபாயிலிருந்து அதிகபட்சமாக 10000 ரூபாய் வரை உள்ளது என்று அறிவித்தார். இந்த ஜியோ ஜிகா பைபர் சேவை மலிவானதாகவும் அதிக சலுகைகளையும் தரும் என்று ஒரு நற்செய்தியும் கூறினார். இந்த ஜியோ பைபர் மூலம் செட்டாப் பாக்ஸ் ,எச்டி, 4ktv என பல இலவச இணைப்புகளை வழங்கப்படும் என்று அடுத்தடுத்து அதிர்ச்சிகளையும் கூறினார்,மேலும் ஒரு முறை மட்டும் பணம் செலுத்தினால் போதும் லேன்ட்லைன் மூலம் வாய்ஸ் கால் சேவைகளை வாழ்நாள் முழுவதும் இலவசமாக பெறலாம் என்ற மற்றொரு இன்ப அதிர்ச்சியையும் அறிவித்தார். இந்த ஜியோ ஜிகா ப்ராட் பேண்ட் சேவை 12 மாதங்களில் நிறைவடையும் என்றும் கூறினார்.

ரிலையன்ஸ் நிறுவனத்தின் மொபைல் சேவைகள் அதிகமாக வளர்ந்து வருவதற்கு காரணம் மற்ற மொபைல்களை விட ஜியோ சேவை மிக மலிவானதாகவும், அதிக வசதிகளுடனும் உள்ளது என மக்களால் கூறப்படுகிறது. மேலும் இந்த இலவச தொலைக்காட்சி வழங்கப்படும் திட்டத்தை குறித்து வேறு ஏதேனும் வைப்புத்தொகை அளிக்க வேண்டுமா? என்ற எந்த ஒரு தகவலும் அவர் அறிவிக்கவில்லை. கடந்த 2014ஆம் ஆண்டு தொலைத்தொடர்புத் துறையில் முத்திரை பதித்த ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் மக்களிடையே பெரும் வரவேற்பையும், அதிக பயன்பாட்டிற்கும் வந்துள்ளது.இதற்கெல்லாம் காரணம் அவர்கள் அறிவித்த அதிக சலுகைகள் தான். இந்தியாவின் மொபைல்களில் முன்னணி நிறுவனங்களாக திகழ்ந்தது ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்கள் ஆனால் அதையே முறியடித்து தற்போது ஜியோ தான் மொபைல் இணைய சேவையில் முன்னணி நிறுவனமாக திகழ்ந்து வருகிறது.

இன்டர்நெட் ,கேபிள், லேண்ட்லைன் ஆகியவை அனைத்தும் குறைந்த விலையிலும் அதிக சலுகைகள் மக்களுக்கு கிடைக்கப் பெறும் என்றும் அறிவித்தார். மேலும் டெல்லி மும்பை கொல்கத்தா ஜெய்ப்பூர் ஹைதராபாத் சூரத் வதோதரா சென்னை நொய்டா காசியாபாத் புவனேஸ்வரம் வாரணாசி அலகாபாத் பெங்களூர் லக்னோ பஞ்சாப் போர்ட் பிளேயர் காமிரா விசாகப்பட்டினம் போன்ற பல நகரங்களில் இந்த ஜியோ ஜிகா ஆஃபரை முதலில் அறிமுகப்படுத்த உள்ளதாக முகேஷ் அம்பானி அறிவித்தார்.

Image result for jio fiber

இன்டர்நெட் ,கேபிள், லேண்ட்லைன் ஆகியவை அனைத்தும் குறைந்த விலையிலும் அதிக சலுகைகள் மக்களுக்கு கிடைக்கப் பெறும் என்றும் அறிவித்தார். மேலும் டெல்லி மும்பை கொல்கத்தா ஜெய்ப்பூர் ஹைதராபாத் சூரத் வதோதரா சென்னை நொய்டா காசியாபாத் புவனேஸ்வரம் வாரணாசி அலகாபாத் பெங்களூர் லக்னோ பஞ்சாப் போர்ட் பிளேயர் காமிரா விசாகப்பட்டினம் போன்ற பல நகரங்களில் இந்த ஜியோ ஜிகா ஆஃபரை முதலில் அறிமுகப்படுத்த உள்ளதாக முகேஷ் அம்பானி அறிவித்தார்.

கூடிய விரைவில் அனைத்து நகரங்களுக்கும் இச்சேவை வழங்கப்படும் என்றும் தெரிவித்தார். இந்த ஜிகா பிராட்பேண்ட் சேவையுடன் ஜியோ ரவுட்டர் ,ஜியோ ஜிகா டிவி வழங்கப்படும் என்றும் தெரிவித்தார் .இதன் வழியாக 1 ஜிபி வரையிலான அதிவேக இணைய சேவையும் கிடைக்க வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்தார். மேலும் தொலைக்காட்சி சேவைகளையும் எளிதாக காணலாம் என்றும் கூறினார். இந்த தகவல்கள் ஜியோ வாடிக்கையாளர்களிடம் அதிக வரவேற்பையும் மகிழ்ச்சியையும் அளித்துள்ளது.