பெட்டிக்கடையில் வாங்கிய 200 ரூபாய் கடனை திருப்பித்தர 30 ஆண்டுகள் கழித்து வந்த அமைச்சர்.!

0
547
richard

முதல்வர் டீக்கடையில் காசு கொடுத்து டீ குடித்தார், முதல்வர் தள்ளு வண்டிக்கடையில் காசு கொடுத்து பழம் வாங்கினார் என்று தான் நாம் இதுவரை செய்திகளை கேள்விப்பட்டு இருப்போம். ஆனால், பல வருடத்திற்கு முன்னாள் வெறும் 200 ரூபாய் கடனை திருப்பி கொடுக்க நாடு விட்டு நாடு வந்துள்ளார் ஒரு அமைச்சர்.

அது வேறு யாரும் இல்லை, கென்யா நாட்டின் ஞாரிபாரி நாடாளுமன்ற உறுப்பினரான ரிச்சர்ட் டோங்கி என்பவர் தான் கென்யா நாட்டை சேர்ந்த இவர் தற்போது ஆப்பிரிக்காவில் அமைச்சராக இருக்கிறார். இவர் கடந்த 1985 – 89 ஆண்டு அவ்ரங்காபாத் நகரில் உள்ள ஒரு கல்லூரியில் ஸ்டுடென்ட் மேனஜிமென்ட் படிப்பை படித்து வந்துள்ளார்.

இதையும் பாருங்க : உலக கோப்பை குறித்து அப்போதே கணித்து கூறிய ஜோதிடர்.! இணையத்தில் கலக்கும் வீடியோ.!

இவர், அவ்ரங்காபாத் பகுதியில் படிக்கும் போது அதே பகுதியில் எஸ் கே காவ்லி என்பவர் பேட்டிக்கடை நடத்தி வந்துள்ளார். தற்போதைய அமைச்சரான ரிச்சர்ட், கல்லூரியில் படிக்கும் போது காவ்லியிடம் 200 ருபாய் கடனாக வாங்கியுள்ளாராம். தற்போது அந்த கடனை திருப்பி செலுத்த இந்தியா வந்துள்ள ரிச்சர்ட்,காவ்லீயின் வீட்டுகே சென்று தான் வாங்கிய 200 ரூபாய் கடனை திருப்பி கொடுத்துள்ளார்.

This image has an empty alt attribute; its file name is richard.jpg

கோடிகளில் கடனை வாங்கிவிட்டு வெளிநாடு சென்று தஞ்சம் புகுந்து கொண்டுள்ள பலர் மத்தியில் வெறும் 200 ரூபாய் கடனுக்காக 30 வருடம் கழித்து நாடு விட்டு நாடு வந்து திருப்பி கொடுத்துள்ள கென்ய அமைச்சரின் நல்ல குணத்தை கண்டு அனைவருமே வியந்துள்ளனர்.