புலி பசிச்சாலும் புல்லை திங்காது.! இந்த விடியோவை பாத்தா இனி அப்படி சொல்ல மாடீங்க.!

0
179

குஜராத் மாநிலத்தில் அம்ரேலி மாவட்டத்தில் உள்ள கிர் காட்டில் வாழ்ந்து வரும் சிங்கம் ஒன்று புல்லைத் தின்னும் வீடியோ சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.காட்டுக்கே ராஜாவாக சிங்கத்தின் இந்த வீடியோவை பார்த்த மக்கள் ஆச்சரியத்தில் உள்ளனர். சிங்கம் என்பது ஒரு பாலூட்டி வகையைச் சார்ந்த விலங்காகும். சிங்கம் பூனை உடைய பேரினத்தைச் சேர்ந்தது ஆகும். பூனை பேரினத்தில் ஒரு பெரிய விலங்கு சிங்கம் தான். இந்த சிங்கம் ஆப்பிரிக்காவிலும் இந்தியாவிலும் உள்ள காடுகளில் தான் அதிகம் காணப்படுகிறது. காட்டில் வேட்டையாடி பல உயிர்களைக் கொன்று மாமிசத்தை உண்ணும் சிங்கம் தற்போது புல்லை சாப்பிடும் வீடியோ சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருவதால் மக்களிடையே அதிக கருத்துக்கள் தோன்றி உள்ளன. மக்கள் பார்த்த இந்த காட்சிகள் அதிக பரபரப்பாக வைரலாக பரவிக் கொண்டு வருகிறது.


ஆனால், இந்த செயலை குறித்து வல்லுனர்களிடம் கேட்ட போது இது சிங்கத்தின் இயல்பான செயல் தான் என்று கூறியுள்ளார்கள்.சிங்கம் வேட்டையாடி தான் உண்ணும்,அதுவும் மாமிசத்தை தான் உண்ணும் என்று பல மக்களுக்கு தெரியும்.மேலும் அனைத்து மக்களுக்கும் அறிந்த விஷயம் சிங்கம் வேட்டையாடி மாமிசத்தை உண்ணும் அசைவ வகையாக தான் பலரும் அறிந்திருப்பார்கள். ஆனால் அப்படி பட்ட சிங்கம் தற்போது தாவரங்களை(புல்லை) உண்ணும் காட்சி மக்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.


இந்த நிகழ்வு குறித்து வல்லுநர்கள் கூறுகையில், அனைத்து உயிரினங்கள் தாவரங்களையும் உண்ணும் என்பது சில ஆய்வின் மூலம் தெரியப்படுகிறது. பலரும் அறிந்த பழமொழி ” புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது” ஆனால் தற்போது உள்ள “சிங்கம் பசித்தால் புல்லையும் உண்ணும்” என்பது தான் புதுமொழி என கிண்டலுடன் பல கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் பகிர்ந்து வருகிறார்கள். ஒரு சில மக்கள் சமூக வலைதளங்களில் நீங்கள் ஆடுகள் இல்லை சிங்கங்கள் என்ற நகைச்சுவை கருத்துக்களையும் பகிர்ந்து உள்ளார்கள். இதைப்பற்றி அவர் கூறுகையில் உலகிலுள்ள அனைத்து உயிரினங்களும் தாவரங்களை உண்ணும் வகையை சார்ந்தது என்று அறிந்து கொள்ளவும். ஏனென்றால் தாவரத்தில் தான் நாம் உண்ணும் உணவு பொருட்களை சீக்கிரமாக செரிமானம் செய்யும் வேதிப்பொருட்கள் உள்ளது என்று வல்லுநர்கள் கூறினார்கள். போது தான் சரியான செயல் சீக்கிரமாக நடைபெறுகிறது


வழக்கமாக சில விலங்குகள் வயிற்றில் செரிமான பிரச்சனைகள் இருக்கும் போது புல்களை உண்ணும். அதனால் செரிமானம் ஆகாமல் இருக்கும் விலங்குகள் இந்த புல்களை உண்டு வாந்தி எடுத்து தன் வயிற்றுப் பிரச்சனையை சரிசெய்து கொள்ளும் என வனத்துறை அதிகாரி சந்தீப் குமார் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். இந்த சிங்கம் புல் உண்ணும் வீடியோ சில பேருக்கு ஆச்சரியமான ஒன்றாக இருந்தாலும் பல பேருக்கு இது சாதாரண நிகழ்வுதான். ஏனென்றால் செரிமான நிகழ்விற்காக மனிதர்கள் பல முறைகளைக் கையாளுகின்றனர்.அதுபோல தான் வாய்யில்லாத ஜீவன்களும் வயிற்றுப் பிரச்சனையை தீர்க்க இந்த புல்லை தின்று வாந்தி எடுத்து செரிமானம் செய்து கொள்கின்றனர்.இதன்முலம் வயிற்றுப் பிரச்சனையையும் தீர்த்துக் கொள்கிறது என்று வல்லுநர்கள் கூறிஉள்ளார்கள்.ஆகவே மக்களின் பல கேள்விகளுக்கான விடையை சமூக வலைத்தளங்களில் பகிரப்படுகிறது.