Home செய்திகள் நெஞ்சுப்பகுதியை துளைத்த கம்பி.!உயிருக்கு போராடிய இளைஞன்!! நெஞ்சை பதறவைக்கும் புகைப்படங்கள்...

நெஞ்சுப்பகுதியை துளைத்த கம்பி.!உயிருக்கு போராடிய இளைஞன்!! நெஞ்சை பதறவைக்கும் புகைப்படங்கள்…

- Advertisement -

மதுரையை சேர்ந்த குருசாமி என்பவரின் கழுத்துக்கு கீழ் நெஞ்சு பகுதியை கம்பி ஒன்று துளைத்தது.அதிர்ஷ்டவசமாக 4 மணிநேரம் அறுவை சிகிச்சைக்குப்பின் நலமாக திரும்பிய வாலிபர். குருசாமி என்பவர் கடந்த போனவாரம் இரவு தன்னுடைய நண்பர்களுடன் மது அருந்திவிட்டு போதையில் இருசக்கர வாகனத்தை கண்மூடித்தனமாக ஓட்டிச் சென்றார். அப்போது மேலவாசல் அருகில் தன் நிலை அறியாத அளவில் தடுமாறி சாலை கட்டுமான பணி நடந்து கொண்டிருந்த இடத்தில் உள்ள குழியில் விழுந்து விட்டார். அந்த குழிக்குள் நாலு அடி நீள கூர்மையான இரும்பு கம்பிகள் இருந்தது. அந்த கம்பியின் மேல் விழுந்ததால் குருசாமயின் கழுத்துக்கு கீழே நெஞ்சுப் பகுதியின் முன் பக்கமாக குத்திய கம்பி பின்னால் முதுகுப்பக்கம் வந்து விட்டது.

gurusamy

- Advertisement -

அவருடன் சென்ற நண்பர்களுக்கு சிறிது காயம் தான் ஏற்பட்டது. அவர்கள் பக்கத்திலுள்ள மக்களிடம் இந்த விபத்து குறித்து கூறி ஆம்புலன்ஸ் வர ஏற்பாடு செய்தனர். பின்னர் 108 அவசர ஊர்தியில் குருசாமியை ஏத்தி கொண்டு மதுரை அரசு இராசாசி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்கள். மருத்துவமனைக்கு வந்த சில நொடிகளிலேயே அவருக்கு உரிய முதலுதவியும் அளிக்கப்பட்டது. மருத்துவமனைக்கு கொண்டு வரும் வழியில் அவருடைய நெஞ்சு பகுதியில் இருந்த கம்பியை கிராம மக்களும், நண்பர்களும் யாரும் எடுக்காதது?தான் அவர் இன்று உயிருடன் இருக்க முக்கிய காரணம் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

குருசாமி அனுமதிக்கப்பட்ட சில நேரங்களிலேயே அவருக்கு அறுவை சிகிச்சை தொடங்கப்பட்டது. இரவு 11.30 மணிக்கு தொடங்கப்பட்ட சிகிச்சை நான்கு மணி நேரத்தில் நடைபெற்று முடிந்தது. அதிஷ்டவசமாக உடலிலிருந்த கம்பியை அகற்றும்போது ஏற்பட்ட ரத்தநாள கசிவு சிதைவுகளும் சரி செய்யப்பட்டன. இந்த அறுவை சிகிச்சை மதுரை மருத்துவர்களுக்கு சவாலான ஒன்றாக இருந்து அந்த இளைஞரை உயிருடன் திருப்பித் தந்தது. இந்த அறுவை சிகிச்சைக்குப் பிறகு குருசாமி சிறிது சிறிதாக உடல்நலம் தேறிக் கொண்டு வருகிறார்.

இது குறித்து அவருடைய உடன்பிறந்தவர் கணேஷ் இடம் செய்தியாளர்கள் கேட்டபோது அவர் கூறியது , என் அண்ணன் திங்கட்கிழமை அன்று வண்டியில் வரும்போது மதுரை மேலவாசல் அருகில் சாலை விரிவாக்கப் பணி நடைபெறும் இடத்தில் உள்ள குழியில் விழுந்து விட்டார். குழியில் இருந்த 4அடி கம்பி அவரின் நெஞ்சு பகுதியில் நுழைந்து முதுகின் பின்பக்கமாக வந்துவிட்டது. அங்கிருந்த கிராம மக்களின் உதவியுடன் அவரை மருத்துவமனையில் சேர்த்து தீவிர சிகிச்சைக்குப் பிறகு தற்போது தேறி வருகிறார். தீவிர கண்காணிப்பு சிகிச்சை பிரிவில் சிறிது நாட்கள் இருந்தார். தற்போது சாதாரண பிரிவில் மாற்றி உள்ளார்கள். தற்போது அவரது உடம்பில் சிறுசிறு பிரச்சினைகள் இருந்தாலும் என் அண்ணன் உயிருடன் நலமாக இருக்கிறார். அதற்கு மருத்துவர்களுக்கு தான் நாங்கள் நன்றி சொல்ல வேண்டும். மதுரை அரசு மருத்துவமனையில் உள்ள அறுவை சிகிச்சை நிபுணர், ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை நிபுணர், ரத்தநாள நிபுணர், மயக்க மருந்து நிபுணர், நரம்புமண்டலம் சிறப்பு அறுவை சிகிச்சை நிபுணர் என ஒட்டுமொத்த மருத்துவர்களின் கூட்டு முயற்சியால் தான் இன்று எங்கள் அண்ணன் உயிருடன் இருக்கிறார். அவர்களுக்கு எங்கள் குடும்பம் மிகவும் நன்றி பட்டிருக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.

scan report
gurusamy

இதுகுறித்து மதுரை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் கூறுகையில், எங்கள் மருத்துவமனையில் அனைத்து மருத்துவத் துறை மருத்துவர்களும் எந்தநேரத்திலும் தயார் நிலையில் இருப்பார்கள்.இதனால்தான் இந்த சவாலான அறுவை சிகிச்சையை நாங்கள் வெற்றிகரமாக செய்து முடித்தோம் என்று கூறினார். மேலும் அறுவை சிகிச்சை நிபுணர் கூறியது, அந்த இரும்புக்கம்பி மூளைக்கு செல்லும் ரத்த நாளங்கள் ஆன பெரு நரம்பு மற்றும் தமனிகளை துளைத்து விட்டது. இது எங்களுக்கு மிகவும் சவாலான சிகிச்சையாக இருந்தது. மேலும் அதிர்ஷ்டவசமாக அவருக்கு அதிக ரத்த இழப்பு ஏற்படாமல் இருந்ததுதான் அற்புதமான விஷயம் என்று மருத்துவர்கள் கூறினார்கள். இரண்டு மூன்று, நாட்கள் தீவிர சிகிச்சைக்கு பிறகு குருசாமி தற்போது நலமாக உள்ளார் என்றும் தெரிவித்தார்கள். அவருக்கு சிறிது காலத்திற்கு நீண்ட ஓய்வு தேவை.இந்த சவாலான அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் குழுவிற்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்து மடல்கள் வந்து குவிகின்றன.

- Advertisement -
96,044FansLike