Home செய்திகள் இந்தியா ரோல்ஸ் ராய்ஸ் காரை வாங்கிய முதல் இந்தியர் என்ற பெருமையை சேர்த்த முகேஷ் அம்பானி.!

ரோல்ஸ் ராய்ஸ் காரை வாங்கிய முதல் இந்தியர் என்ற பெருமையை சேர்த்த முகேஷ் அம்பானி.!

0
945
ambani

இந்த உலகில் நிறைய வகை பிராண்டுகள் கொண்ட கார்கள் உள்ளன. அப்படிபட்ட கார் வகைகளில் தற்போது கார்களின் ராஜாவாக ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் புதிதாக நவீன வசதிகள் உடைய “கலினன் கார்” ஒன்றை உருவாக்கி உள்ளது. அந்த காரை இந்தியாவில் சுமார் 6.25 கோடி ரூபாய் என்ற விலைக்கு விற்க உள்ளதாக ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் முதல் எஸ்யூவி கார்ராக “கலினன் கார்” திகழ்கிறது.

Image result for Rolls-Royce Cullinan

இந்த கார் உலகம் முழுவதும் உள்ள கார்களின் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக விளங்கி வருகிறது. இப்படி உலகமே வியந்து பார்த்து ஆச்சரியப்படும் வகையில் இந்த கலினன் கார் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இப்படிபட்ட காரை தற்போது இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளதாக ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் பகிரங்கமாக தகவல் வெளியிட்டுள்ளது. முதலில் யார் ?இந்த காரை வாங்குவார்கள் என்ற கேள்விகள் ஹாட் நியூஸாக சமூக வலைத்தளங்களில் பகிரப்படுகிறது. மேலும் பல எதிர்பார்ப்புகள் உள்ளதாக ரோஸ் ராயல்ஸ் நிறுவனம் கூறி உள்ளது.

இதையும் பாருங்க : வாகன விதி மீறல்.! அதிகபட்சம் 29,000 வரை அபராதம் வசூலிக்கப்படும்.! அச்சத்தில் வாகன ஓட்டிகள்.!

இப்படி பல அதிநவீன சிறப்பம்சங்களை கொண்ட இந்த எஸ்யூவி கார் இந்தியாவில் வாங்கும் முதல் ஆளாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி திகழ்கிறார். இவர் 100 பில்லியன் டாலருக்கும் மேல் அதிகமாக கொடுத்து இந்த காரை வாங்கியுள்ளார் என்ற தகவல் வெளியானது. இந்த காரின் சிறப்பம்சங்களை குறித்து நிறுவனம் கூறுகையில், இதில் டிவின் டர்போசார்ஜர்ஸ், 6.8 லிட்டர் கொண்ட வி12 இன்ஜின் உள்ளது.இதில் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் உள்ளது. இது மட்டுமில்லாமல் இந்த கார் வெறும் ஐந்து நொடிகளில் மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் என்ற ஆச்சரியப்பட கூடிய வகையிலும் உள்ளது என்று கூறினார்கள்.

Image result for Rolls-Royce Cullinan

இப்படி கார்களில் உள்ள முன்னணி நிறுவனங்களில் இந்த கலினன் கார் வகை நவீன வசதிகளுடன் உள்ளதாகவும், இந்த காரின் துவக்க விலையே 6.95 கோடி ரூபாய் அளவிலும் உள்ளதாக அந்த நிறுவனம் கூறியது. இந்த ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த கார் எல்லா வசதிகளை கொண்டதனால் தான் முகேஷ் அம்பானி வாங்கி உள்ளார்.ஆகவே இந்த கார் அடிப்படை மாடலாக இருக்காது அதேசமயம் அந்த காரில் அவருடைய பாதுகாப்பு குறித்தும், புல்லட் ப்ரூப், தற்காப்பு வசதிகள் என சில சிறப்பு அம்சங்களைக் கொண்டதாகவும் இருக்கும்என்றும் , இன்டர்நெட் வசதிகளும், தொலைத்தொடர்பு கருவிகளும் கூட அந்த காரில் பொருத்தப்பட்டு உள்ளதாக இருக்கிறது என்று தகவல்கள் வெளியானது. மேலும் முகேஷ் அம்பானி வாங்கிய கார் 10 கோடி ரூபாயிலிருந்து 15 கோடி ரூபாய்க்கு வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.