புகை பழக்கத்தில் இருந்து முற்றிலும் விடுபட இயற்கை தந்த மூன்று மூலிகைகள்

0
171
smokers

இன்று பல இளைஞ்சர்கள் புகை பழக்கத்திற்கு ஆளாகி தங்களது உடலை சீரழித்துக்கொண்டிருக்கின்றனர். ஆரம்பத்தில் ஜாலிக்காகவும், நண்பர்ககளின் வற்புறுத்தலின் பேரிலும் ஆரம்பிக்கும் இந்த பழக்கம் போக போக அவர்களை விடாமல் தொற்றிக்கொள்கிறது. தூங்கி எழுந்ததில் இருந்து இரவு தூங்கும் வரை ஒரு நாளைக்கு இருவது முப்பது சிகெரெட் பிடித்து தங்களின் உடலை சீரழித்துக்கொள்பவர்களும் இருக்கிறார்கள். இப்படி பகைக்கு அடிமையானவர்கள் அந்த பழக்கத்தில் இருந்து விடுபட இயற்கை அளித்துள்ள சில மருந்துகள் இதோ.

சூரிய காந்தி பூவின் விதைகள்:

சூரியன் போகும் திசையில் திரும்பும் சூரியகாந்தி பூவில் பல மருத்துவ குணங்கள் உள்ளன. இந்த பூவின் விதைகள் பல நன்மைகளை பயக்க வல்லது. சூரியகாந்தி பூவின் விதைகளை வாயில் போட்டு மென்று வர புகை பழக்கத்தின் மேல் உள்ள நாட்டம் கொஞ்சம் கொஞ்சமாக குறைய அராமிக்கும்.

உலர்ந்த திராட்சை:

உலர்ந்த திராட்சையுடன் சிறிது கிராம்பை சேர்த்து ஒரு நாளைக்கு இரண்டு முறை மென்று வந்தால், புகை பிடிக்கும்போது உண்டாகும் நாற்றத்தின் மீது வெறுப்பு வர ஆரமிக்கும். சிலருக்கு தங்களது புகை நாற்றத்தை நுகர்ந்தாலே வாந்தி வருவது போலான ஒரு உணர்வு ஏற்படும். இதனால் நாளடைவில் புகை பழக்கத்தில் இருந்து முழுமையாக விடுபடுவார்கள்.

குப்பை மேனி

குப்பை மேனியோடு சிறிது மிளகை சேர்த்து தினமும் காலை சாப்பிட்டு வந்தால் புகைக்க வேண்டும் என்ற எண்ணம் சிறிது சிறிதாக குறைய ஆரமித்து நாளடைவும் புகை பழக்கத்தில் இருந்து முற்றிலும் விடுபடுவார்கள்.

சிலரை விடாமல் தொற்றிக்கொண்டுள்ள புகை பழக்கத்தில் இருந்து விடுபட மேலே குறிப்பிட்டவைகளை செய்தால் மட்டும் போதாது. அந்த பழக்கத்தில் இருந்து விடுபடுவதற்கான மன உறுதியும் வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here