ஒரிஜினல் லைசென்ஸ் கட்டாய உத்தரவிற்கு கோர்ட் இடைக்கால தடை.

0
476
traffic-police

வாகன ஓட்டிகள் அனைவரும் கட்டாயம் ஒரிஜினஸ் லைசென்ஸ் வைத்திருக்க வேண்டும் என்று தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் அறிவித்திருந்தார். இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் லாரி உரிமையாளர்கள் சங்கத்தை சேர்ந்த சுகுமார் என்பவரும் ஒரு ரிட் மனுவை தாக்கல் செய்திருந்தார்.

Traffic-Police

அந்த மனுவில், சட்டம் பிரிவு 139ன்கீழ் அசல் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்கவேண்டியது கட்டாயம் இல்லை என்றும், இது அதிகார துஷ்பிரயோகத்திற்கு வழிவகுக்கும் என்றும் தெரிவித்திருந்தார். ஆகையால் அசல் ஓட்டுநர் உரிமம் கட்டாயம் தேவை என்ற நடைமுறைக்கு உடனே தடைவிதிக்க வேண்டும் என்றார்.

நீதிபதி துரைசாமி அமர்வு முன்பு இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது, மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் அசல் லைசென்ஸ் கட்டாயம் வைத்திருக்கச் சொல்வதில் சிரமம் இருப்பதாக தெரிவித்தார். இது குறித்து கருத்து தெரிவித்திருந்த நீதிபதி, மோட்டார் வாகன சட்டப்படி அசல் லைசென்ஸை வைத்திருப்பதை கட்டாயப்படுத்த முடியாது என்றார், மேலும் இதில் பல்வேறு பிரச்னைகள் இருக்கிறது என்றும் தெரிவித்தார்.

public-on-Road

வழக்கை விசாரித்த நீதிபதி துரைசாமி, வருகிற செப்டம்பர் 5ம் தேதி வரை தமிழக அரசு சார்பில் அறிவித்திருந்த ஒரிஜினஸ் லைசென்ஸ் நடைமுறைக்கு இடைக்காலத் தடை விதிப்பதாக கூறினார். ஆகையால் செப்டம்பர் 5ம் தேதி வரை வாகன ஓட்டில் அசல் ஓட்டுனர் உரிமம் கட்டாயம் வைத்திருக்கவேண்டிய அவசியமில்லை. இந்த வழக்கை வரும் திங்கட்கிழமை அன்று விதுசாரிக்க நீதிபதி பரிந்துரை செய்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here