வாகனங்களில் இனி இது போன்ற ஸ்டிக்கர்களை ஓட்டினாலும் அபராதம் தான்.!போக்குவரத்து துறை எச்சரிக்கை.!

0
1
Car

இந்தியாவில் அமுல்படுத்தப்பட்ட புதிய மோட்டார் வாகன சட்டத்தில் போக்குவரத்து துறையில் புதிய விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. ஜாதி, மதம்,தொழில்,அரசியல் சார்ந்த ஸ்டிக்கர்களை ஓட்டினால் உடனடியாக 5 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என்று போக்குவரத்து துறை எச்சரிக்கை விடுத்தது.

Image result for religion sticker in vehicle

கார் பைக் போன்ற அனைத்து வாகனங்களிலும் ஜாதி, மதம், தொழில் சார்ந்த, அரசியல் அடையாள சின்னங்கள் சம்பந்தப்பட்ட ஸ்டிக்கர்களை ஓட்டினால் அபராதம் விதிக்கப்படும் என ராஜஸ்தான் போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. மேலும் அரசியல் அடையாள கொடிகள், அரசியல் சம்பந்தப்பட்ட வாசகங்கள், ஜாதி, மத தலைவர்களின் பொன்மொழிகள், சாமி படங்கள் ,தொழில் சார்ந்த புகைப்படங்கள் கொண்ட ஸ்டிக்கர்களை வாகனங்களில் ஒட்டக்கூடாது என்று ராஜஸ்தான் மாநில போக்குவரத்து காவல் துறையினர் தெரிவித்தனர்.

இது குறித்து ராஜஸ்தான் போக்குவரத்து துறையிடம் கேட்டபோது, ஜாதி மத அரசியல் சார்ந்த கொடி சின்னங்கள் ஸ்டிக்கர்களை ஓட்டுவதன் மூலம் மக்களிடையே மோதல்களும். பிரச்சனைகளும் நேரிடுகிறது. இதனால் சில சமயங்களில் விபத்துக்கள் கூட நேரிட்டது என்று ஒரு தொண்டு நிறுவனம் கடிதம் எழுதியது. ராஜஸ்தான் மாநில போக்குவரத்து துறையும் ஜாதி மதம் அரசியல் சார்ந்த அடையாள ஸ்டிக்கர்கள் நம்பர் பிளேட் ஆகியவற்றில் ஸ்டிக்கர்களை ஒட்டினால் அந்த வாகனங்களுக்கு உடனடியாக 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

Image result for allah  sticker in vehicle

மேலும் நம்பர் பிளேட்டுகளில் வாசகங்கள்,ஸ்டிக்கர் ஓட்டுவதன் மூலம் அந்த வண்டி ஏதேனும் விபத்துகள் ,சாலை விதிமுறை மீறல்கள் போன்ற சம்பவங்கள் நிகழ்ந்தால் அந்த வாகனங்களை குறித்த தகவல்கள் கிடைக்காமல் இருக்கும் நிலை ஏற்படுகிறது என ராஜஸ்தான் போக்குவரத்து துறை தெரிவித்தது. நம்பர் பிளேட்டுகளில் ஜாதி மத சம்பந்தமான வாசகங்களும் ஸ்டிக்கர்களும் ஓட்டுவது சட்ட விரோதமான செயலாகும். அப்படி சட்டத்தை மீறுபவர்களுக்கு 5 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவித்தார்கள்.

இந்த மாதிரி ஜாதி மத ஸ்டிக்கர்களை ஓட்டுவதன் மூலம் நிறைய போராட்டங்களும்,வன்முறைகளும் நிகழ்ந்துள்ளன என குடிஉரிமை அமைப்பு ஒன்று அரசுக்கு எழுதிய கடிதத்தை தொடர்ந்து இந்த உத்தரவு பிரிக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்கள். ஆனால் பெயர் ,பதவி, படிப்பு ஆகிய சம்பந்தமான ஸ்டிக்கர்கள் அல்லது எழுத்துகளை ஓட்டுவதன் மூலம் அபராதம் ஏதும் விதிக்கப்படாது என்றும் காவல்துறை தெரிவித்து உள்ளது. இந்த மாதிரியான ஸ்டிக்கர் ஒட்டும் கலாச்சாரத்தை ஒழிப்பதன் முக்கிய நோக்கம் வாகன ஓட்டிகளின் பாதுகாப்பும், ஜாதி மதங்களை எப்படியாவது? எதிலாவது கொண்டு மக்களுக்கு திணிக்கும் ஜாதி வெறி பிடித்த அவர்களின் எண்ணங்களை ஒழிக்கும் வகையில் கொண்டு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.