இனி திரையரங்குகளில் டிக்கெட் விற்பனை கிடையாது.! அப்புறம் எப்படினு கேக்குறீங்களா.!

0
1205
theater

விடுமுறை நாட்கள் என்றாலே அனைவரும் அதிகமாக செல்லுமிடம் தியேட்டர் தான். சிறுவர் முதல் பெரியவர்கள் வரை பொழுதுபோக்கிற்காக சினிமா தியேட்டர்களுக்கு சென்று மகிழ்ச்சியாக விடுமுறை நாட்களை கொண்டாடுகிறார்கள்.அதுவும் பண்டிகை நாட்கள் என்றால் அதிக படங்கள் வெளிவரும். இதனால் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெறும். மேலும் பெரிய பட்ஜெட் மற்றும் பிரபலமான நடிகர்களின் படங்கள் என்றாலே தியேட்டர்களில் டிக்கெட் விலை ஆயிரம் வரை இருக்கும்.

Image result for tamil nadu theatre ticket counter

இப்படி பிரபலமான நடிகர்கள் படங்களின் டிக்கெட்டுகளை அதிகமாக வைத்து இருக்கிறார்கள் என்று புகார் கொடுத்துள்ளார்கள். இந்த பிரச்சனையை தடுப்பதற்காக அமைச்சர் கடம்பூர் ராஜு ஒரு அறிக்கை வெளியிட்டார். இனி சினிமா தியேட்டர்களில் டிக்கெட்டுகளை நேரில் சென்று வாங்க முடியாது. ஆன்லைனில் மட்டும் தான் புக்கிங் செய்யப்படும் என்று அறிவித்தார். இதன் மூலம் பிளாக் மூலம் டிக்கெட் விற்கப்படுவது குறைக்கப்படும் என்றும் அறிவித்தார்.

இதையும் பாருங்க : இனி எச்சில் துப்பினால் கூட பாக்கெட்ல காஸ் வெச்சிட்டு துப்புங்க.! இந்தா போட்டாங்க அபராதம்.!

தியேட்டர்களில் நேரில் சென்று டிக்கெட் வாங்கும் போது நிறைய இடையூறுகளும்,பிரச்சனைகளும் ஏற்படுகிறது.மேலும் கூட்டத்தில் ஒரு சில பேருக்கு காயங்களும் ஏற்பட்டிருக்கின்றன. இதையெல்லாம் கருத்தில் கொண்டு தான் இந்த முடிவை எடுத்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். பிளாக் மூலம் டிக்கெட்டிகள் தியேட்டர்களில் விற்கப்படும் விலையை விட அதிகமாக விற்கப்படுகிறது. இதை தடுக்கும் வகையிலும் கொண்டுவரப்பட்டது என்று கூறினார்.

Image result for tamil nadu theatre ticket online booking

அதுமட்டுமில்லாமல் தியேட்டர்களில் விற்கப்படும் உணவுப் பொருட்கள் விலை அதிகமாகவும், அதுவும் பிரபலமான நடிகர்களின் படங்கள் என்றால் மிக மிக அதிக விலையிலும் வைத்து விற்கிறார்கள் என்ற மற்றொரு புகாரும் வந்துள்ளது. இனி மேல் தியேட்டர்களில் விற்கப்படும் உணவு பொருள்களின் விலையை அரசாங்கமே நிர்ணயிக்கும் என்றும் தெரிவித்தார். அதற்கான திட்டமும் விரைவில் அமலுக்கு வரும் என்றும் தெரிவித்தார். இந்த புதிய திட்டத்தின் மூலம் மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி என்று சினிமா வட்டாரங்களில் பேசி வருகின்றனர்.