மதுபானங்கள் இவ்வளவு லாபம் வைத்து விற்கப்படுகிறதா.! உண்மையான விலையை பார்த்தா அசந்துடுவீங்க.!

0
1

டாஸ்மார்க் கடையில் விற்கப்படும் மதுபானங்களின் விலையில் பல மாற்றங்கள் உள்ளதாக திடுக்கிடும் தகவல் வெளிவந்துள்ளது. இன்றைய காலத்தில் சில ஆண்கள் வேலைக்கு செல்கிறார்களோ இல்லையோ? சரியான நேரத்திற்கு டாஸ்மார்க் கடைக்கு சென்றுவிடுகிறார்கள். ரேஷன் கடையில் இருக்கும் கூட்டத்தை விட டாஸ்மாக் கடையில் இருக்கும் கூட்டம்தான் அலைமோதும்.என்னதான் ஜிஎஸ்டி,எஸ்ஜிஎஸ்டி போன்ற பல வரிகள் கொண்டு வந்தாலும் குடிமகன்களுக்கு மட்டும் சரக்கு வாங்க காசு எங்கு இருந்து தான் வருகிறாதோ ???இப்படி டாஸ்மாக் மூலம் விற்கப்படும் மதுபானங்களில் இருந்து 100 லிருந்து 120 சதவீதம் லாபம் கிடைக்கிறது என்ற அதிர்ச்சியூட்டும் தகவல் வெளிவந்தது.

Image result for tamil nadu tasmac

டாஸ்மார்க் கடையில் விற்கப்படும் மதுபானங்களின் விலைக்கும், கொள்முதல் விலைக்கும் இடையே மிகப்பெரிய அளவு வேறுபாடு உள்ளது என்ற அதிர்ச்சியூட்டும் தகவல் வெளிவந்தது. இதனால் கொந்தலிப்பில் குடிமகன்கள் உள்ளார்கள்.டாஸ்மார்க்கில் உள்ள மதுபானங்கள் பல வகைகளில் உண்டு. அதில் ‘கிங்பிஷர் பீரின்’ கொள்முதல் விலை 56.88 ரூபாய் ஆனால் விற்பனை விலை 120 ரூபாய் ஆக வைத்து விற்கிறார்கள்.வரி மற்றும் முதலீடு போக இதன் மூலம் அவர்களுக்கு கிடைக்கும் லாபம் 63.12 ரூபாய். பிரிட்டிஷ் எம்பயர், டூபோர்க், கால்ஸ்பர்க் ஆகிய மதுபான வகைகளின் கொள்முதல் விலை 64.38 ரூபாய்,ஆனால் விற்பனை விலையோ 140 ரூபாய் ஆக உயர்த்தி உள்ளார்கள். இதன் மூலம் இவர்களுக்கு கிடைக்கும் லாபம் 75.62 ரூபாய்.

கோல்ட், மேக்ஸ்11000 போன்ற மதுபான வகையின் கொள்முதல் விலை 54.37 ரூபாயும், விற்பனை விலை 120 ரூபாய் ஆகவும் வைத்து விற்கிறார்கள். இதன் மூலம் அவர்களுக்கு கிடைக்கும் லாபம் 65.63 ரூபாய்.அதுமட்டுமில்லாமல் எம்சி விஎஸ்ஓபி மதுவின் கொள்முதல் விலை 62.40 ரூபாய், ஆனால் விற்பனை விலையும் 130 ரூபாய் ஆகும். இதன் மூலம் கிடைக்கும் லாபம் 67.60 ரூபாய் ஆகும். 1848 எக்ஸ்ஓ மதுவகையின் கொள்முதல் விலை 96.5 ரூபாய், இதன் விற்பனை விலை 180 ரூபாய் ஆகும்.இதன் மூலம் லாபமோ 83.95 ரூபாய். எம்ஜிஎம்கோல்டு கொள்முதல் விலை 87.87 ரூபாய், விற்பனை விலையும் 160 ரூபாய் உயர்ந்து உள்ளது .இதன் மூலம் கிடைக்கும் லாபம் எது 72.18 ரூபாய் ஆகும். ஓல்ட் மங்க் கொள்முதல் விலை 53.60 ரூபாய், விற்பனை விலை 100 ரூபாய் ஆகும். இதன் மூலம் கிடைக்கும் லாபம் 46.40 ஆகும்.

இந்த மதுவகைகளில் சில பிராந்தி மற்றும் விஸ்கி வகைகளைச் சார்ந்தது ஆகும். இப்படி கொள்முதல் விலையின் அளவைவிட இருமடங்கு விற்பனை விலையை உயர்த்தி வைத்து இருக்கிறார்கள். இவர்கள் அரசாங்கத்திற்கு சரியான முறையில் வரி செலுத்தியும் வருகிறார்கள். இப்படி வரி செலுத்தியும் அவர்களுக்கு கிடைக்கும் லாபம் கொள்முதல் விலையை விட ஒரு மடங்கு அதிகமாக உள்ளது.

இப்படி கொள்முதல் விலையை விட மதுபானங்களின் விற்கும் விலை அதிகமாக உள்ளது என்ற திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தது. இந்த தகவல் சமூக வலைதளங்களில் வைரலாக பரவிக் கொண்டு வருகின்றன. இப்படி டாஸ்மார்க் கடையில் விற்கப்படும் மதுபானங்களின் மூலம் அரசாங்கத்திற்கு நிறைய வருமானம் கிடைக்கும் என்ற மற்றொரு தகவலும் வெளிவந்துள்ளது. மதுபானங்கள் மூலம் வருமானம் வருகிறது என்ற நற்செய்தி இருந்தாலும், இதனால் நிறைய குடும்பங்கள், பல உயிர்களும் பாதிக்கப்படுகின்றன.மதுபானங்களில் இருந்து 100 லிருந்து 129 சதவீதம் லாபம் கிடைக்கிறது என்ற தகவல் மூலம் அரசாங்கத்திற்கு நிறைய வருமானம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.