முதல் நாள் வழங்கப்பட்ட உணவு.! கொடுக்கப்பட்ட சலுகைகள்.! இருந்தும் தூக்கமில்லாமல் தவித்த சிதம்பரம்.!

0
1
chidambaram

இந்தியாவின் நிதி அமைச்சராக பதவி வகித்த தமிழகத்தை சேர்ந்த ப.சிதம்பரம் அவர்கள் ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனமொன்று செயல்படுத்தி வந்திருந்தார். அப்போது அந்த நிறுவனத்திற்கு 305 கோடி ரூபாய் அளவில் அந்நிய நாடுகள் நேரடியாக முதலீடு செய்தனர். இப்படி அவர்கள் செய்யும் முதலீடுகளுக்கு முறையான சான்றிதழ்கள் , ஒப்புதல் வழங்காமல் அனுமதி தந்தார் ப.சிதம்பரம். இப்படி தரப்பட்ட அனுமதியில் ஊழல் நடந்ததை கண்டறிந்த இந்திய புலனாய்வுதுறை சிதம்பரத்தின் மீது ஊழல் மற்றும் பணமோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.

congress

சிபிஐ அதிகாரிகள் ஐ என் எக்ஸ் மீடியாவில் முறைகேடு செய்து உள்ளதாக ப.சிதம்பரத்தை சிபிஐ காவலில் இருந்து டெல்லி நீதிமன்றத்தில் ஒப்படைத்தார்கள்.மேலும் சிபிஐ அதிகாரிகள்கூறியது, நீதிமன்ற காவலில் உள்ள ப.சிதம்பரத்தை திகார் சிறைக்கு அனுப்ப கோரிக்கை கேட்டனர். இதனை ஒப்புக்கொண்ட சிபிஐ நீதிமன்றம் ப.சிதம்பரத்தை பதினைந்து நாட்கள் திகார் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். மேலும் அவரை பொருளாதார குற்றவாளிகளுக்கான பிரிவில் ஏழாம் எண் அறையில் அடைக்கப்பட்டார். இந்த அறை சிதம்பரத்தின் மகனான கார்த்திக் சிதம்பரம் இருந்த அறை ஆகும். மேலும் சிதம்பரத்தை சிறையில் அடைக்கப்பட்ட அன்று இரவு சப்பாத்தியும், காய்கறிகளும் கொடுத்தார்கள். ஆனால் அவர் சாப்பிடவில்லை.

சிபிஐ நீதிமன்றம் கூறுகையில், ப.சிதம்பரம் சிறையில் உள்ள கேண்டின்களிலும் சாப்பிடலாம் என்றும் கூறினார்கள். சிதம்பரத்திற்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு உள்ளதால் அதன் மூலம் அவரை சிசிடிவி கேமராக்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வரும். அதே போல் அவர் இருக்கும் சிறையில் தமிழ் மொழி பேசும் காவலர்கள் யாரும் பணியில் அமர்த்த கூடாது என்றும் அறிவித்தார்கள். சிதம்பரம் இருக்கும் அறைக்கு தினமும் பத்திரிகைகள் கொடுக்க வேண்டும் என்றும் கூறினார்கள். மேலும் ப.சிதம்பரம் அவர்கள் சிறைச்சாலையில் உள்ள நூலகத்தையும் டிவியையும் பயன்படுத்திக் கொள்ள அனுமதி உண்டு. சிதம்பரத்திற்கு கம்பளி மற்றும் தலையணையை கொடுக்கலாம் என்றும் கூறினார்கள். மேலும் அவருக்கு வெஸ்டர்ன் ஸ்டைல் கழிப்பறை மற்றும் மருந்துகள் வைத்துக்கொள்ள ரேக் போன்றவைகளை உபயோகிக்கலாம் என்று கூறினார்கள். இப்படி பல சலுகைகளும் வசதிகளும் செய்து கொடுத்து அவர் தூக்கம் இல்லாமல் தவித்தார் என்று கூறினார்கள்.

karthi-chithambaram-speech-about-p-chithambaram-arrest

ஐ என் எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் பீட்டர் , இந்திராணி முகர்ஜி மற்றும் கார்த்தி சிதம்பரம், ப.சிதம்பரம் ஆகிய நால்வருக்கும் தொடர்பு உள்ளதாக தெரியவந்தது. இதில் பீட்டர் மட்டும் இந்திராணி முகர்ஜி அப்ரூவல் ஆவதாக தெரிவித்தனர் ஐ என் எக்ஸ் மீடியா முறைகேட்டை மும்பையின் வருமானவரித்துறை துறையும், இந்தியாவின் புலனாய்வுத் துறையும் சந்தேகத்தின் அடிப்படையில் பதிவு செய்தார்கள். மேலும் அவர்கள்பதிவு செய்த வழக்கு உண்மையாகிவிட்டது. ப.சிதம்பரமும் அவருடைய மகன் கார்த்தி சிதம்பரமும் தான் ஐஎன்எக்ஸ் மீடியா இல் நிறைய ஊழல்கள் செய்யப்பட்டுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டது. கோடிக்கணக்கான அளவில் மோசடி செய்து உள்ளார்கள். இப்படி கோடிக்கணக்கான அளவில் மோசடி செய்பவர்களுக்கு சிறையில் சலுகைகளும் வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளது இந்திய அரசாங்கம்