பிணத்துடன் வருடக்கணக்கில் வாழும் வினோத மக்கள் – ஆச்சர்யத்தின் உச்சம்

0
149
deadhh

ஒரு நாளைக்கு மேல் பிணங்களை வைத்திருந்தால் நாற்றம் அடிக்கும் என்று நாம் எண்ணுகிறோம் அனால் இந்தோனேசியாவில் உள்ள சுலவேசி என்னும் சிறிய தீவில் உள்ள டோராஜன் என்னும் பிரிவை சார்ந்த மக்கள் பிணத்துடன் வருடக்கணக்கில் வாழ்கின்றனர்.

இவர்கள் தங்கள் வீட்டில் யாரேனும் இறந்துவிட்டால், அவர்களை இறந்தவர்கள் போல் கருதாமல் உயிருள்ள ஒரு ஜீவனாகவே கருதி அவர்களோடு வாழ்கின்றனர். இவர்களை பொறுத்தவரை ஒருவருக்கு மரணம் என்பதே கிடையாது. ஒரு எருமையை பலி கொடுத்த பின்பு தான் ஒருவருடைய மரணத்தை இவர்கள் மரணமாக எடுத்துக்கொள்கின்றார்களாம்.

அதுவரை மாதக்கணக்கில், வருடக்கணக்கில் என இறந்தவர்களுடைய உடலை வீட்டலேயே வைத்துக்கொண்டு அவர்களுக்கு உணவு ஊட்டி, உடை மாற்றி, சுத்தப்படுத்தி அந்த உடலை ஒரு உயிர் உள்ள ஜீவன் போல் கருதி அதோடு வாழ்கின்றனர்.

இது ஒரு புறம் இருக்க, ஒரு சிலர் புதைக்கப்பட்டுள்ள தங்கள் உறவினரின் பிணங்களை வருடம் ஒரு முறை தோண்டி எடுத்து, உடை மாற்றி சுத்தப்படுத்தி, சில நாட்கள் தங்களோடு வைத்துக்கொண்டு மீண்டும் புதைத்துவிடுகின்றனர்.

பல வருடங்களாக தொடர்ந்து வரும் இந்த வினோத பழக்கத்தை பலர் வீடியோ பதிவு செய்து அதை youtube போன்ற சமூக வலயத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here