Home செய்திகள் வண்டி விலை ரூ.15 ஆயிரம், அபராதம் ரூ.23 ஆயிரம்.! நல்லா இருக்கில்ல இது.!

வண்டி விலை ரூ.15 ஆயிரம், அபராதம் ரூ.23 ஆயிரம்.! நல்லா இருக்கில்ல இது.!

0
890
traffic

போக்குவரத்து துறையில் அரசாங்கம் மோட்டார் வாகனங்களுக்கு என புதிய சட்டம் செப்டம்பர் 1 முதல் நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டது. இந்த புதிய சட்டத்தின் மூலம் சாலை விதிமுறைகளை மீறுபவர்களுக்கும் , மதிக்காதவர்களுக்கும் அதிகமாக அபராதம் செலுத்தும் வகையில் உயர்த்தியுள்ளது. குடிபோதையில் வாகனங்களை ஓட்டிச் சென்றாலும், ஹெல்மெட் அணியாமல் வாகனங்களை ஓட்டிச் சென்றாலும் அதிக ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என்று அரசாங்கம் தெரிவித்தது.

மேலும், ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டினால் 300 ரூபாய் தான் அபராதம் விதித்தார்கள் ஆனால் தற்போது ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டினால் முன்பெல்லாம் இரண்டாயிரம் ரூபாய் தான்அபராதம் , இனி குடித்து விட்டு வண்டியை தொட்டாலே அவர்களுடைய ஒரு மாத ஊதியத்தை இழக்க வேண்டும் என்றும் கூறினார்கள். ஹெல்மெட் போடாமலும் , அதிக வேகத்துடனும் வாகனம் ஓட்டினால் 15,000 ரூபாய்க்கு மேல் கூட அபதாரம் விதிப்பார்கள் என்றும் அரசாங்கம் அறிவித்தது

இதற்கேற்ப ஹரியானாவில் நடந்த நிகழ்வு ஸ்கூட்டியை ஓட்டிச்சென்ற நம்பருக்கு மோட்டார் வாகன சட்டத்தின்படி ரூபாய் 23 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.ஹரியானா மாநிலத்தில் உள்ள குர்கானில் தினேஷ் மதன் என்பவர் வாகன சோதனை மூலம் போலீசாரிடம் சிக்கியதால் அவருக்கு மோட்டார் வாகன சட்டத்தின்படி போக்குவரத்து போலீசார் 23 ஆயிரம் அபராதம் விதித்தது.இவர் லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டியதற்காக ரூபாய் 5 ஆயிரம், வாகன பதிவு சான்றிதழ் இல்லாததால் ஐந்தாயிரம், டிரைவிங் லைசென்ஸ் இல்லாததால் அதற்காக 2 ஆயிரமும், காற்று மாசுபாடு ஏற்படுத்தியதற்காக 10 ஆயிரமும், ஹெல்மெட் அணியாமல் வந்த காரணத்திற்காக ஆயிரமும் ஆக மொத்தம் 23 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தது அரசாங்கம் . அதற்கான குறிப்பிட்ட சான்றிதழ்களும் வழங்கியது போலீசார்.

இதனால் அவரின் ஸ்கூட்டியையும் பறிமுதல் செய்யப்பட்டார்கள். இது குறித்து தினேஷ் குமாரிடம் கேட்டபோது அவர் கூறியது, என்னோட ஸ்கூட்டியோட மொத்த மதிப்பே பதினைந்தாம் ஆயிரம் (15000) தான் ஆனால் இந்த புதிய வாகன சட்டத்தின்படி எனக்கு இன்று 23 ஆயிரம் அபராதம் விதித்தார்கள். எனக்கு விதிக்கப்பட்ட இந்த அபராதம் அரசாங்கம் குறைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

இனி பயணத்தின்போது எல்லா ஆவணங்களையும் கொண்டுதான் செல்வேன் என்றும் , எந்த தவறும் நடக்காத வகையில் நான் கவனமாக இருப்பேன் என்று அவர் கூறினார். மேலும் இந்த புதிய மோட்டார் வாகன சட்டத்தின் மூலம் நிறைய சாலை விபத்துகள், பல உயிர் இழப்புகளையும் தடுக்கும் நோக்கத்தில் தான் அரசாங்கம் கொண்டு வந்தது. இந்த சம்பவத்தின் மூலம் அனைத்து வாகன ஓட்டிகளும் இனிமேலயாவது தங்களுடைய ஆவணங்களை சரியாக கொண்டு செல்லுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.