Home ஆன்மீகம் சீதைக்கு உலகில் உள்ள ஒரே ஒரு கோயில் பற்றி தெரியுமா!!!

சீதைக்கு உலகில் உள்ள ஒரே ஒரு கோயில் பற்றி தெரியுமா!!!

- Advertisement -

இராமாயண காலத்தில் அசோகவனத்தில் சீதை சிறைப்பட்டிருந்தமை தொடர்பில் அமைக்கப்பட்ட ஆலயம். உலகில் சீதைக்கென உள்ள ஒரே ஆலயம் இதுவாகும். ஆலயத்தை ஒட்டி சலசலத்தோடும் சீதா அருவி என இயற்கையின் எழில் கொஞ்சுகிறது இந்த கோயில். இந்த கோயிலை பற்றி விரிவாக பார்ப்போம்.

இராமாயண கதையின் நாயகி,  சீதையை இராவணன் கவர்ந்து சிறை வைத்திருந்த இடம் அசோக வனம் என்று குறிப்பிடபட்டுள்ளது. அந்த அசோக வனம் இலங்கையில் உள்ள  நுவரேலியா நகரிலிருந்து பண்டாரவளை செல்லும் வீதியில் சீத்தா எலிய பிரதேசத்தில் அமைந்துள்ளது. இந்த கோயில் நுவரேலியா சீதா எலிய சீதையம்மன் ஆலயம் என்று பெயர் பெற்றுள்ளது.

- Advertisement -

seethai temple

சீதை தனக்கு எற்பட்ட நிலை வேறுயாருக்கும்  நடக்குக் கூடாது என்று அருள் பாலிக்கும் ஆலயம் தான் சீதா எலிய ஆலயம் என கூறப்படுகிறது. இக்கோயில் அழகில் அனைவரையும் மயக்க வைக்கும் இயற்கை அம்சங்களுடன் அமைந்துள்ளது. வானுயர்ந்த நீண்ட நெடும் மரங்கள் நிறைந்த மலையைப் பின்னணியாகக் கொண்டு இக்கோயில் அமைந்துள்ளது.

seetha river

முன்வாசலைத் தொட்டதுமே கோயிலின் பின்புறமுள்ள மலையின் இயற்கை வனப்பு, அருவியின் சலசலக்கும் சத்தம், குளிர், காற்று, ராமர் சீதா, இலட்சுமணன் கருவறை  தரிசனம் என யாவும் சேர்ந்து மனம்  குளிர வைக்கிறது. வழக்கமாக  மலை மேலிருக்கும் கோயில்களை நோக்கி படிகளால் ஏறிச் சென்று தரிசனம் கண்டிருப்போம். ஆனால் இது புதுமையாக இருந்தது. கோவிலைத் தரிசிப்பதற்கு பிரதான பாதையிலிருந்து கீழே இறங்கிச் செல்லவைக்கிறது. கோயிலை தொடர்ந்து மேலும் இறங்கினால் பாய்ந்தோடும் அருவி வரும். இந்த அருவி தான் இராவணனால் அசோக வனத்தில் சிறைப்பிடித்து வைக்கப்பட்டிருந்த சீதை தினமும் நீராடி சென்ற இடமாம்.

இராமன் சீதா கல்யாணம் காடேறல், பொன்மானைப் பிடித்துத் தரும்படி வேண்டுதல், பரதன் பாதரட்சை பெறுதல், புஸ்பவாகனத்தில் இராவணன் சீதையைக் கவர்ந்து வருதல் மற்றும் அசோகவனத்தில் சீதை அனுமார் கணையாளியுடன் சீதையைக் காணுதல் எனத் தல வரலாறு வர்ண ஓவியங்களாகத் தீட்டப்பட்டுள்ளன.

oviyangal

இடது புறமாகச் சென்றால் படிகளின் ஊடே இறங்கி அவர் பாதம் பதித்திருக்கும் இடத்தை அடைந்து வணங்க முடியும். வணங்கிவிட்டு நீரோடை தவழ்ந்து ஓடும் அழகையும் மலையினின்று தழுவி வரும் குளிர் காற்றையும் உட்சுவாசித்துக் கொண்டே உடலும் உள்ளமும் சிலிர்க்க மேலே ஏறவேண்டும்.

rivers foot print

அந்த அருவி நீரில் நாம் மனதில் ஒரு காரியத்தை நினைத்து பூ எறியும் போது அந்த பூவானது கிழ் உள்ள ஆற்றுடன் போய் சேர்ந்தால் நினைத்த காரியம் நிறைவேறுமாம். ஆற்றுடன் சென்று சாராமல் அருவியின் இடையில் சிக்கிக் கொள்ளுமானால் நினைத்த காரியம் நிறைவேறாதாம்.

 

 

 

- Advertisement -
96,044FansLike