Home செய்திகள் தமிழ்நாடு இனி எச்சில் துப்பினால் கூட பாக்கெட்ல காஸ் வெச்சிட்டு துப்புங்க.! இந்தா போட்டாங்க அபராதம்.!

இனி எச்சில் துப்பினால் கூட பாக்கெட்ல காஸ் வெச்சிட்டு துப்புங்க.! இந்தா போட்டாங்க அபராதம்.!

0
829
spit

நீலகிரி மாவட்டத்தில் பொது இடங்களில் எச்சில் துப்பினால் ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என்று திடீரென சட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளார் மாவட்ட ஆட்சியர் திவ்யா.ஒரு சில வெளிநாடுகளில் பொது இடங்களை அசுத்தம் செய்தால் கடுமையான தண்டனை அளித்துள்ளார்கள்.இதன் மூலம் நாட்டை தூய்மையாக வைத்து கொள்ளலாம். நீலகிரி மாவட்டத்தில் நிறைய சுற்றுலா தளங்கள் இருப்பதால் இயற்கை அழகையும், சுற்றுசுழலலை மேம்படுத்தவும்,சுகாதாரத்தை பாதுகாக்கவும் பல அதிரடி திட்டங்களை மாவட்ட ஆட்சியர் திவ்யா கொண்டுவந்துள்ளார்.பொது இடங்களை சுத்தமாக வைத்துக்கொள்வது நம் கடமை என்றும் அவர் கூறியுள்ளார்.

Image result for பொது இடங்களில் எச்சில் துப்புவது

நீலகிரி மாவட்டத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டு வருகிறது .அந்த நடவடிக்கையில் ஒரு பகுதியாக தான் பொது இடங்களிலோ, சுற்றுலா தளங்களிலோ எச்சில்களை துப்பினால் உடனடியாக ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.இதனால் இயற்கை வளங்களை பாதுகாக்கலாம் .மேலும் அவர் அந்த அறிக்கையை அனைத்து அரசு துறைகளிலும், செய்தி தாளிலும் வெளியிட்டார். இந்த புதிய திட்டத்தில் பொது மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு தரவேண்டும் என்றும் திவ்யா அவர்கள் கேட்டுக்கொண்டார்.

நீலகிரி மாவட்டத்தின் இயற்கை அழகையும் ,சுற்றுச் சூழல் சுகாதாரத்தை பாதுகாக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. பிளாஸ்டிக் பைகளுக்கு உபயோகிக்க தடை, மாநில, தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள கடைகளில் பிளாஸ்டிக் மூலம் தயாரிக்கப்படும் குடிநீர் பாட்டில்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் “உதகை” என்ற திட்டம் மூலம் குப்பைகளை சேகரித்து முறையான வகையில் அகற்றப்பட்டு வருகின்றன.பொது இடங்களில் புகையிலை, பான்மசாலா, குட்கா, வெற்றிலை பாக்கு ஆகியவற்றை மென்று துப்பக்கூடாது என்றும் மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.அப்படி மீறி செய்தால் ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்தார்.

நீலகிரி மாவட்டத்தின் சுற்றுச்சூழலைலை மேம்படுத்தவும் , சுகாதாரத்தை பாதுகாக்கவும் பல்வேறு தூய்மை திட்டங்களை மாவட்ட ஆட்சியர் கொண்டுவந்துள்ளார். அதில் 21 வகையான பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்யும் திட்டமாகும்.இதனை செப்டம்பர் 1 முதல் அமல்படுத்தப்பட்டது .மேலும் பிளாஸ்டிக் மூலம் தயாரிக்கப்படும் தண்ணீர் பாட்டில்கள், குளிர்பான பாட்டில்களும் தடை விதிக்கப்பட்டது. பொது இடங்களில் எச்சில் துப்ப தடை செய்யப்பட்டது என்று இன்னசென்ட் திவ்யா கூறினார்.

இது குறித்து அவரிடம் கேட்டபோது மாவட்ட ஆட்சியர் திவ்யா கூறியது, வெளிநாடுகளில் பொது இடங்களில் அசுத்தம் செய்பவருக்கு தண்டனையும் , அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அதுபோலவே நம் நாட்டிலும் இந்த திட்டத்தை கொண்டு வருவதன் மூலம் இந்தியாவை சுத்தமானதாகவும், தூய்மையானதாகவும் மாற்றலாம். மேலும் இந்த திட்டத்தை கண்காணிக்க உள்ளாட்சி அமைப்புகளை அமைத்தும் ,அபாரதத்தை வசூலிக்கவும் நியமிக்கப்பட்டு உள்ளது.மேலும் இந்த சட்டத்தினை சுற்றுலாவுக்கு வரும் பயணிகளும் ஒத்துழைப்பு அளித்து சுற்றுலா தலங்களை பாதுகாக்க வேண்டும் உத்தரவிட்டுள்ளார்.