நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பால் காலமானார்.

0
3
sriidevi

பிரபல திரையுலக நடிகையான ஸ்ரீதேவி இன்று அதிகாலை துபாயில் மாரடைப்பால் உயிரிழந்தார்.

sridevii

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டத்திலுள்ள சிவகாசி யை சொந்த ஊராக கொண்டவர். தனது குழந்தை பருவத்திலேயே திரைத்துறையில் நடிக்க வந்தவர். சிறுவயதிலேயே முருகன் வேடமிட்டு நடித்து பலர் மனதை கொள்ளை கொண்டவர்.

பின்னர் தமிழில் முதன்முறையாக கே. பாலசந்தர் மூலம் நாயகியாக அடியெடுத்து வைத்தார்.மூன்று முடிச்சு என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.பல்வேறு மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்ததில் இதுவரையிலும் மொத்தம் 6 பிலிம் பேர் விருதுகள், மூன்றாம் பிறை படத்திற்காக தமிழக அரசின் விருது என பல விருதுகளை அள்ளி குவித்தார்.

sridevi

ஸ்ரீதேவி இந்தி திரையுலகில் பிரபலமான மோனி கபூரை திருமணம் செய்துகொண்டார்.இவருக்கு ஒரு பொண்ணும் இருக்கின்றார்.

இவ்வளவு பிரபலமான நடிகையொருவர் இன்று திடீர் மாரடைப்பால் உயிரிழந்தது இந்திய திரைத்துறையை அதிர்ச்சியடைய செய்துள்ளது.