Home அருமையான தகவல்கள் நவபாஷாண சிலைகளை பற்றிய வியப்பூட்டும் உண்மைகள்!!!!

நவபாஷாண சிலைகளை பற்றிய வியப்பூட்டும் உண்மைகள்!!!!

- Advertisement -

தமிழகத்தின் வரலாற்றுப் பெருமைகள் அனைத்திற்கும் மிகமுக்கிய காரணியாக நமது மூதாதைகளான சித்தர்கள் உள்ளனர். அவர்கள் கலை, இலக்கியம், பண்பாடு, மருத்துவம், விஞ்ஞானம், அரசியல், கட்டடவியல், புவியியல் என்று தொடாத, புலமைப் பெறாத துறைகளே இல்லை எனலாம். அப்பேறு பெற்ற சித்தர்கள் இன்றும் நம்மால் நினைதும்கூட பார்க்கமுடியாத பல அற்புதங்களை செய்துள்ளனர். அப்படியான அற்புதங்களில் ஒன்று தான் நவபாஷான சிலைகள்.

Image result for palani murugan original photos

- Advertisement -

போகர் என்னும் சித்தரால் உருவாக்கப்பட்ட பழனிமலை முருகன் சிலையை பற்றி நாம் எல்லோரும் அறிந்திருப்போம். ஆனால் அந்த சிலை உருவாக்கத்தின் நோக்கம் மற்றும் முறைகளை பற்றி நிச்சயம் நாம் அறிந்திருக்கமாட்டோம். அதை பற்றி தெரிந்துகொள்வோமா?

நவம் என்றால் ஒன்பது ஆகும். பாஷாணம் என்றால் நஞ்சு என்று பொருள். நவ பாஷாணம் என்பது ஒன்பது வகையான நஞ்சுக்களை சித்த்ர்கள் அருளிய முறைப்படி கட்டுவதாகும்.

Image result for palani murugan original photos

பாஷாணங்களில் மொத்தம் 64 வகைகள் உள்ளன.இதில் நீலி என்றொரு வகையும் உண்டு.நீலி மற்ற 63 பாஷாணங்களை செயலிழக்க வைக்க கூடியதாகும்.

ஒன்பது வகையான பாஷாணங்களுக்கும் தனித்தனியாக வேதியல்,இயற்பியல் பண்புண்டு. அதை சித்தரியல் முறைப்படி அணுக்களை பிரித்து மீண்டும் சேர்ப்பதையே நவபாஷாணம் கட்டுதல் என்பார்கள். அந்த ஒன்பது பஷாணங்கள் என்னவென்றால்,

1.சாதிலிங்கம்

2.மனோசிலை

3.காந்தம்

4.காரம்

5.கந்தகம்

6.பூரம்

7.வெள்ளை பாஷாணம்

8.கௌரி பாஷாணம்

9.தொட்டி பாஷாணம்

இந்த நவபாஷாணத்தின் தன்மையில் நவகிரகங்களின் குணங்கள் ஒத்துள்ளன. நவபாஷாண கட்டு என்பது சித்தர்களுக்கு மட்டுமே வெளிச்சப்பட்ட செயலாகும். நவபாஷாணத்தால் உருவாக்கப்படும் சிலைகள், நவக்கிரகங்களின் சக்தியை பெற்றுவிடுகிறது என்பது நம்பிக்கையாகும்.

AAA

தமிழ் நாட்டில் மூன்று இடங்களில் நவபாஷாண சிலைகள் உள்ளன. ஒன்று பழனி மலைக்கோவிலிலும், மற்றொன்று கொடைகானல் அருகே உள்ள பூம்பாறை  குழந்தை வேலப்பர் கோயிலிலும், மற்றொன்று தேவிப்பட்டினத்தில் அமைந்துள்ளது. இதில் இரண்டு போகர் உருவாக்கியவை. தேவிப்பட்டிணத்தில் உள்ள சிலை யாரால் உருவாக்கப்பட்டது என்பது தெரியவில்லை.

Related image

நவபாஷாணங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கிரகத்தின் சுபாவத்தை உடையது; நவபாஷாணங்களால் உருவான சிலையை வழிபடுபவர்களுக்கு நவக்கிரகங்களால் ஏற்படும் சிரமங்கள் நீங்கும். பழனிமலை தண்டாயுதபாணியை வழிபடுபவர்கள் நவக்கிரகங்களை ஒருங்கே வழிபடுவதாக அர்த்தம். இதை உணர்ந்தே போகர் பழனி மலையில் நவபாஷாணமுருகர் சிலையை உருவாக்கினார். இந்த சிலைக்கு அபிஷேகம் செய்து அந்த அபிஷேக தீர்த்தத்தை அருந்தினால் / சாப்பிட்டால் தீராத நோய் எதுவாக இருந்தாலும் தீர்ந்துவிடும்.

 

- Advertisement -
110,223FansLike