தமிழகத்தை சேர்ந்த டீ கடைக்காரரின் மகள் நாசாவில் இணையப்போகிறார்.! செம கெத்து போங்க.!

0
257
nasa

அமெரிக்க நிறுவனம் இந்திய அளவில் அறிவியல் மற்றும் பொது அறிவு சம்பந்தமான போட்டி ஒன்று நடத்தி வந்தது. அதில் இந்திய அளவில் மாணவர்கள் கலந்துகொண்டனர்.இந்திய அளவில் நடைபெற்ற இந்த போட்டியில் 3 நபர்கள் நாசா செல்ல தேர்வு செய்யப்பட்டனர். அதில் தமிழகத்தைச் சேர்ந்த மாணவி தான்யா ஆவார்.போட்டியின் முடிவில் நாசா செல்ல மூன்று மாநிலத்தில் உள்ள மாணவி,மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டார்கள்.

அமெரிக்க நிறுவனம் நடத்திய போட்டியில் வென்று நாசா செல்லும் தமிழக மாணவி


தமிழகத்தை சேர்ந்த தான்யா,ஆந்திர மாநிலத்தை சேர்ந்த பூஜிதா மாணவி, மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த மாணவர் ஷர்மா ஆகியோர் இந்திய அளவில் நடைபெற்ற அறிவியல் மற்றும் பொது அறிவு போட்டியில் வெற்றி பெற்று நாசா செல்லும் வாய்ப்பை கைப்பற்றினர்.இவர்கள் மூவரும் அக்டோபர் மாதத்தில் நாசா செல்ல உள்ளதாக அமெரிக்க நிறுவனம் அறிவித்தது. மேலும் 2020 ஆம் ஆண்டு நடைபெறும் அறிவியல் போட்டியையும் குறித்து நாசாவின் முன்னாள் விஞ்ஞானி தாமஸ் சென்னையில் தொடங்கிவைத்தார். இது இந்தியாவையே பெருமைப்படுத்தும் வாய்ப்பாகும்.


தமிழகத்தைச் சேர்ந்த மதுரையை அடுத்த கள்ளந்திரியைச் சேர்ந்தவர் தான் ஜாபர் உசேன்,தாயார் சிக்கந்தர் ஜாபர்.இவர் அப்பகுதியில் டீக்கடை ஒன்றை நடத்தி வருகிறார்.இவர் மகள் தான் தான்யா தனுஷ்.தான்யா மதுரையில் உள்ள மகாத்மா மாண்டிசோரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வருகின்ற மாணவி. அவர் படிக்கும் பள்ளியில் தான் தன் தாயார் ஆசிரியையாக பணிபுரிகிறார்.இதன்முலம் தான்யாவிற்கு அறிவியல் பாடத்தில் அதிக ஆர்வம் கொண்டவர் என்று தெரியவந்தது . இவர் சமீப காலத்தில் அமெரிக்க நிறுவனம் நடத்திய அறிவியல் மற்றும் பொது அறிவு சம்பந்தமான போட்டியில் வெற்றி பெற்று நாசா விண்வெளி ஆய்வு மையத்திற்கு செல்ல தேர்வு செய்யப்பட்டார். இதனால் நாசா விண்வெளியில் உள்ள விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடும் ஒரு பெரிய வாய்ப்பு பெற்றார்.

Image result for tamil girl in nasa


கோ4குரு என்ற அமெரிக்க நிறுவனம் இந்தியாவில் அறிவியல் திறமை பொதுஅறிவு போட்டிகளை நடத்தி அதில் வெற்றி பெறும் மாணவர்களை அமெரிக்காவில் உள்ள நாசா விண்வெளி ஆய்வு கூடத்திற்கு தேர்வு செய்யப்படுவது ஒரு சிறந்த செயலாகும். இது ஆண்டு ஆண்டுதோறும் நடைபெறுகிறது இந்த ஆண்டிற்கான அறிவியல் போட்டியில் இந்தியாவை சேர்ந்த 3 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் ஒருவர் தான் தமிழகத்தை சேர்ந்த தான்யா தனுஷ். இவர் கோ4குரு நிறுவனம் என்ற இணையதளத்தில் பதிவு செய்து நடத்தப்பட்ட தேர்வில் வெற்றி பெற்றார். இந்த போட்டியில் தேர்வு செய்யப்பட்ட மூவரையும் அமெரிக்காவில் உள்ள நாசா விண்வெளியில் ஒரு வாரம் தங்கி இருந்து அந்த ஆய்வகத்தை சுற்றிப் பார்த்தும், அங்குள்ள விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடவும் உள்ளதாக தெரிவித்தனர்.


நாசா செல்வது குறித்து தான்யாவிடம் கேட்டபோது, எனக்கு ஐந்தாம் வகுப்பு படிக்கும்போதே விஞ்ஞானியாக ஆக வேண்டும் என்ற ஆசை இருந்தது. எனக்கு அமெரிக்காவில் உள்ள நாசா விண்வெளி ஆய்வு மையத்திற்கு செல்ல வேண்டும் என்ற பேராசை இருந்தது. எனது இந்த ஆசைக்கு காரணம் அப்துல் கலாம் உடைய விவேகம் தான். என்னுடைய ஹீரோ,ரோல் மாடல் எல்லாம் அப்துல் கலாம் தான். இதற்காக அவர் பெயரிலேயே நான் நிறைய கட்டுரைகள் எழுதி உள்ளேன். அப்துல் கலாம் போல் சிறந்த விஞ்ஞானியாக மாறி என் தமிழ்நாட்டிற்கும் நம் இந்தியாவிற்கும் சேவை செய்வேன். இதுவே என் வாழ்நாள் லட்சியம் என்று அந்தப் பேட்டியில் கூறினார்.


இது குறித்து கோ4குரு நிறுவன நிர்வாக அதிகாரி காயம்பு ராமலிங்கமிடம் செய்தியாளர்கள் கேட்டபோது அவர் கூறியது , இதுமட்டுமில்லாமல் அந்தப் போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு ஃப்ளோரிடா இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி 10 ஆயிரம் டாலர்கள் வழங்குவதாகவும் , அங்கேயே அவர்கள் பயில்வதற்கான ஸ்காலர்ஷிப்பும் வழங்க உள்ளார்கள் என்று கூறினார்.