Home செய்திகள் அழிந்து வரும் சிட்டுக் குருவிகளை இரண்டு வருடமாக காக்கும் இளைஞர்.!

அழிந்து வரும் சிட்டுக் குருவிகளை இரண்டு வருடமாக காக்கும் இளைஞர்.!

0
115
sparrow

தஞ்சாவூரிலுள்ள நெசவாளி ஒருவர் தற்போது சில ஆண்டுகளாகவே அழிந்து கொண்டே வரும் சிட்டுக்குருவி இனங்களை காத்துவரும் பணியில் தீவிரமாக ஆர்வம் கொண்டு வருகிறார். இதனால் குருவிகளின் எண்ணிக்கை பெருகி வருவதாக குறிப்பிடப்படுகின்றன. மேலும் மக்கள் அவரை சிட்டுக்குருவிகளின் காவலன், சிட்டுக்குருவிகளின் காதலன் என பல பெயர்களைக் கொண்டு பாராட்டி வருகிறார்கள். சிட்டுக்குருவிகள் பல வருடங்களாகவே அழிந்து கொண்டிருக்கின்றன என சில ஆய்வின் மூலம் தெரிய பட்டது. சிட்டுக்குருவிகள் கூட்டம் கூட்டமாக பறந்து கொண்டும், மரங்களில் உட்காரும் காட்சிகளும் பார்ப்பதற்கு தற்போது அரிதாக உள்ளது .

saprrow

தஞ்சாவூர் பட்டுக்கோட்டை பைபாஸ் சாலையில் சாவடி அருகே ரமேஷ் என்பவர் துணி கடை ஒன்றை நடத்தி வருகிறார்.மேலும் அந்த சலவைத் தொழிலாளி கடந்த இரண்டு வருடங்களாக சிட்டுக்குருவிகள் கூடுகள் அமைத்தும் அவற்றை பராமரித்தும் வருகிறார்.அதற்கு ஏற்றவாறு தீவனங்கள் வைத்தும் அதனை தன்னுடைய குழந்தைகள் போல காத்தும் வருகிறார். இதன் மூலம் குருவிகளின் எண்ணிக்கை சிறிது சிறிதாக பெருகிக்கொண்டும் வருகிறது என்று கூறப்படுகிறது.இதன் மூலம் அழிவின் விளிம்பில் உள்ள சிட்டுக்குருவி இனங்களை பாதுகாக்கும் வகையிலும், அதன் உடைய எண்ணிக்கையை பெருக்கும் முயற்சியிலும் தீவிரமாக செய்துகொண்டு வருகின்றார். இதனால் பார்வையாளர்கள் அவரை சிட்டுக்குருவியின் காதலன், காவலன் என்று பெருமிதமாகக் கூறுவார்கள்.

அவர் துணிக்கடை அமைந்துள்ள இடத்தில் வரிசையாக பத்துக்கும் மேலாக வீணாக உள்ள அட்டை பெட்டிகளை கொண்டு, குருவிகள் நுழையும் வரையில் அந்தப் பெட்டியை தயார் செய்து குருவிகள் காணக்கூடிய இடத்தில் கட்டி தொங்க விட்டார். இதனால் சிட்டுக்குருவிகள் அந்த பெட்டிக்குள் தானாக வந்து கூடு கட்டியும் , குஞ்சுகள் பொறித்தும் வாழ்ந்து வந்தன .இதனால் சில தினங்களிலேயே நூற்றுக்கும் மேலான சிட்டுக்குருவிகள் வரும் எண்ணிக்கை அதிகமாயிற்று. மேலும் 50க்கும் மேலான சிட்டுக்குருவிகள் அங்கேயே தங்கி வாழ்ந்து வருகின்றனர். இந்த குருவிகளுக்கு உணவுகள் வைப்பதும், குளிப்பதற்கு தண்ணீரையும், குடிப்பதற்கு தண்ணீரும் வைத்து அதை தன்னுடைய குழந்தைகள் போல கண்ணும் கருத்துமாக கவனித்து வந்தார். இங்கு வரும் வாடிக்கையாளர்களும், சுற்றியுள்ளவர்களும் சிட்டுக்குருவிகளை காப்பதற்கு அவருக்கு துணையாக நின்றார்கள்.

ரமேஷ்

இதுகுறித்து செய்தியாளர்கள் ரமேஷிடம் கேட்டபோது, அவர் நான் சில வருடங்களுக்கு முன்பு மூன்று நாட்கள் கடையை பூட்டிவிட்டு சொந்த வேலையாக வெளியூருக்கு போயிருந்தேன். மீண்டும் நான் ஊருக்கு திரும்பி வந்து கடையை திறக்கும்போது கதவின் மேல் பக்கத்தில் குருவிக்கூடு இருந்ததை நான் கவனிக்கவில்லை. கதவை திறக்கும்போது அந்த குருவிக்கூடு கீழே விழுந்துவிட்டது .கொஞ்ச நேரத்தில் அந்த கூட்டிற்கு வந்த சிட்டுக்குருவிகள் கீழே விழுந்திருந்த கூட்டைப் பார்த்து ஏக்கத்துடனும், கவலையுடனும் சத்தமிட்டு அங்கேயே சுற்றிக் கொண்டிருந்தன. இந்த நிகழ்வை கண்டவுடன் என் மனதை உலுக்கியது. யாருமே இல்லை என்று நினைத்து தானே குருவிகள் கூடுகட்டியது . ஆனால் தற்போது அந்த கூட்டை இடித்து விட்டார்களே என்று அந்தக் குருவிகள் அலறிக்கொண்டு கூறுவதுபோல என்னை உலுக்கியது.

saprrow

உடனே என் மனது தாங்காமல் அந்த குருவிகள் தங்கும்படி வகையிலான ஒரு அட்டைப் பெட்டி ஒன்றை கொண்டு அந்த பெட்டியில் ஓட்டையிட்டு மேலே தொங்கவிட்டு வைத்தேன்.குருவிகள் நான் செய்த செயலை புரிந்துகொண்டு எங்கும் செல்லாமல் நான் செய்து கொண்டிருந்த அட்டைப்பெட்டி கூட்டு பக்கத்திலேயே நின்று கொண்டிருந்தனர். கூட்டில் இருந்து கீழே விழுந்த நாற்றுகளை எடுத்து அட்டை பெட்டிக்குள் வைத்து புதிய கூண்டு ஒன்றைத்தயார் செய்து அவர்கள் வசிக்கும் வகையில் கொடுத்தேன். அந்த இரண்டு குருவிகளும் அந்த புதிய கூட்டிற்குள் வசிக்கத் தொடங்கினாலும் தங்களுடைய குஞ்சுகளையும் பொறிக்க தொடங்கி, அவை வளர்ந்து பெரிதாகி விட்டது.

அப்போது மீண்டும் நான் ஒரு யோசனை செய்து ஒரு பெட்டி மட்டும் அதுகளுக்கு பத்தாது என்று நிறைய பெட்டிகளை செய்ய தொடங்கினேன். பல பெட்டிகள் செய்து வைத்தேன் .அதை பார்ப்பதற்கு வீட்டில் உள்ள அறைகள் போல காட்சி தந்தனர். இதனால் சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை நாளடைவில் பெருகத் தொடங்கின. சிட்டுக்குருவிகள் சாப்பிடுவதற்கு நெல், அரிசி போன்ற தானிய வகைகளை வைப்பதோடு,அதுகள் குடிப்பதற்கு தண்ணீரும் வைப்பதுமட்டுமில்லாமல் ஆனந்தமாக குளித்து விளையாட ஒரு பாத்திரத்தில் தண்ணீரும் வைப்பேன்.அங்கு வரும் மக்கள் இதை அதிசயத்துடன் பார்த்து செல்வார்கள்.அதில் சில பேர் சிட்டுக்குருவிகளுக்கு தீவனங்களையும் வாங்கிக் கொண்டு வருவார்கள்

நான் சிறு வயதில் எங்கள் வீட்டில் சிட்டுக்குருவிகளை பார்க்கும் போது நாங்கள் சுறுசுறுப்பாக இருப்போம். தற்போது நிலைமை மாறி உள்ளது. சிட்டுக்குருவியை பெறுவதன் மூலம் நம் சோர்வையும் நீக்கலாம். மேலும் சிட்டுக்குருவிகளை பார்க்கவே இப்போது அரிதாக உள்ளது.முதலில் சாலைக்கு அருகில் அதாவது வாகனங்கள் அதிகமாக செல்லக்கூடிய இடத்தில்தான் சிட்டுக்குருவிகள் அதிகமாக வசிக்கின்றன, இனப்பெருக்கமும் செய்கின்றன. ஆனால் அது உகந்த இடம் அல்ல .நாம் சிட்டுக்குருவிகள் வாழ்வதற்கும் சரியான சூழலும் இடமும் செய்து தரும் சிறிய முயற்சியில் ஈடுபட்டால் சிட்டுக்குருவிகளின் அழிவிலிருந்து நாம் அவற்றை காக்கலாம். இதனால் நம் மனது சந்தோஷத்தில் நிரம்பி வழியும் இப்படி சாதாரணமாக செய்யத் தொடங்கிய செயல் இன்று அனைவரும் பாராட்டும் வகையில் வந்து நின்றது. இந்த குருவிகளை பார்ப்பதன் மூலம் என் மனதில் தினம் ஒரு உற்சாகமும், சந்தோஷமும் தோன்றுகிறது என்றார்.