திருமணம் முடிந்த அடுத்த நாளே நந்தினி செய்த செயல்.! ஷாக்கில் உறைந்த காவல் துறையினர்.!

0
1295

தமிழகத்தில் முழு மது ஒழிப்பை கோரி போராட்டங்களை நடத்தி மக்களின் கவனத்தை ஈர்த்தவர் நந்தினி. மதுரையைச் சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவியான இவர், தனது தந்தையின் உதவியோடு டாஸ்மாக் கடைகளுக்கு முன்பாக போராட்டங்களை நடத்தி பல்வேறு இன்னல்களை சந்தித்துள்ளார் கடந்த 2014ஆம் ஆண்டு டாஸ்மாக் கடைக்கு எதிராக போராட்டத்தை நடத்தினார் இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

நந்தினி திருமணம்

இந்த நிலையில் நந்தினிக்கும் கடந்த ஜூலை 5 ஆம் தேதி திருமணம் நடைபெறுவதாக இருந்தது. ஆனால், நந்தினியின் திருமண நேரத்தில் நந்தினி மற்றும் அவரது தந்தை மீது தொடரப்பட்ட வழக்கின் விசாரணை, கடந்த 27-ம் தேதி திருப்பத்தூர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த விசாரணையின் போது நந்தினி, டாஸ்மாக் மூலம் போதைப்பொருள் விற்பது குற்றமில்லையா என நீதிபதியிடம் வாதாடினார்.

இதனால் நீதிமன்றத்தை அவமதித்ததாகக் கைதுசெய்யப்பட்ட வழக்கறிஞர் நந்தினி மற்றும் அவரது தந்தை ஆனந்தன் ஆகியோர், மீண்டும் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் நீதிமன்றம், ஜாமீன் வழங்கியது. இதையடுத்து, நேற்று மாலை சிறையில் இருந்து நந்தினியும் அவரது தந்தையும் வெளியே வந்தனர்.

நீதித்துறை

இதனால் நீதிமன்றத்தை அவமதித்ததாகக் கைதுசெய்யப்பட்ட வழக்கறிஞர் நந்தினி மற்றும் அவரது தந்தை ஆனந்தன் ஆகியோர், மீண்டும் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் நீதிமன்றம், ஜாமீன் வழங்கியது. இதையடுத்து, நேற்று மாலை சிறையில் இருந்து நந்தினியும் அவரது தந்தையும் வெளியே வந்தனர்.

இந்த நிலையில் மதுரை மாவட்டம் தென்னம்மநல்லூர் கிராமத்தில் உள்ள அவர்களின் குலதெய்வம் கோயிலில் நந்தினிக்கும், குணா ஜோதிபாஸுக்கும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் திருமணம் எளிமையான முறையில் நடைபெற்றது.  இந்த திருமணத்தில் நந்தினியின் நெருங்கிய நண்பர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே பங்குபெற்றனர்.

திருமணம் முடிந்த கையோட மற்ற பெண்களை போல மாப்பிள்ளை வீட்டிற்கு செல்லாமல் மீண்டும் டாஸ்க் மார்க் கடைகளை எதிரித்து போராட போவதாக நந்தினி கூறியுள்ளது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ஆம், வருகிற ஆகஸ்ட் 5 ஆம் தேதி வேலூர் தொகுதியில் மக்களை வீடு வீடாக தனித்தனியாக சந்திச்சு, டாஸ்மாக் கடைகளுக்கு எதிரான தீவிரமான பிரச்சாரத்தை முன்னெடுக்க போகிறாராம் நந்தினி. இத்தனை இன்னல்களுக்கும் பிறகும் போராட்டத்தை கைவிடாத நந்தினியை போராளி மங்கை என்று சொல்வது கூட கொஞ்சம் குறைவாகவே தோன்றுகிறது. மேலும், இத்தனை முறை வழக்கு பதிவு செய்தும் மீண்டும் மீண்டும் போராடும் நந்தினியை பார்த்து காவல் துறையினரே திகைத்து போய்யுள்ளனர்.