கோயிலுக்கு சென்றால் நிம்மதி கிடைக்கும் என்று கூறுவதை நாம் கேட்டிருப்போம். இது ஒரு பொய் என்றும் இது மூடத்தனம் என்றும் நம்மில் பலர் கூறியிருப்போம். ஆனால் உண்மை என்னவென்றால் எதை நாம் பொய் என்றோமோ அது தான் உண்மையாக இருக்கிறது என்பதே. விளக்கமாக தெரிந்து கொள்ளலாமா!
இந்த உலக இயங்கியலே ஒரு விதமான அதிர்வை மூலமாக கொண்டுதான் இயங்குகிறது என்பது என்றைய அறிவியல் கண்டுபிடித்திருக்கும் கூற்று. அதாவது காந்த ஆற்றல் என்றும் வைத்துக்கொள்ளலாம். அந்த காந்த ஆற்றல் ஆனது தான் இந்த உலகை அண்டத்தை இயக்கம் மூல ஆற்றல் என்பதே இந்த அறிவியல் அறிக்கை.
இதை மையமாக கொண்டே இந்த கட்டுரையும் நகரவிருக்கிறது. நமது கோயில்களில் கருவறை ஏன் இருள் நிறைந்தும், சிறியதாகவும் உள்ளது என்றால் அதற்கும் இந்த காந்த ஆற்றலுக்கும் மிகப்பெரிய தொடர்புள்ளது என்றே கூறலாம்.
கருவறையை இருளோடு மூடி வைக்கும் போது அங்கு இறை ஆற்றல் எனப்படும் நல்ல காந்த ஆற்றல் அங்கே தேங்கி நிற்கும். அப்படி தேங்கி நிற்கும் ஆற்றலானது சூடம் கட்டப்படும்போது அந்த சூடத்தில் இருக்கும் தீ அந்த காந்த ஆற்றலை கவர்ந்துவிடும். அதையே நாம் தொட்டு முகத்தில் தடவும் போது அந்த ஆற்றல் நமக்குள் ஊடுருவி நமது சிந்தையில் உடலில் பரவி நமக்கு அமைதியையும் சிந்தை தெளிவையும் உண்டாக்கும்.
இதன் காரணமாகவே சித்தம் கலங்கியவர்களை கோயில் தூண்களில் கட்டிவைக்கும் பழக்கம் இருந்து வந்தது. அந்த காந்த ஆற்றல்கள் பாதிக்கப்பட்டவர்களின் உடலில் பரவி அவர்கள் விரைவில் குணமடைவர் என்று தான் அப்படி ஒரு பழக்கம் உண்டானது. மேலும் இதனால் தான் கோயிலில் தரப்படும் உணவுகளும் கருவறை சிலைகளை நீராட்டிய நீரும் கூட சுவைமிக்கதாக இருக்கிறது.
இவற்றை எல்லாம் விட ஒரு படி மேல், இன்றைய விஞ்ஞானம் அதை உறுதி செய்யும் வகையில் கோயில் கருவறையில் சுழலும் ஆற்றலானது இடது புறத்தில் இருந்து வலது புறமாக ஒரு சுற்றுப்பாதையில் சுற்றி வருவதாக கூறுகிறது. சற்றே சிந்தித்து பாருங்கள் நாம் கோயில் கருவறையை சுற்றி வரும் போது நம்மை இடமிருந்து வலது புறமாகவே சுற்றி வரக் கூறுவார்கள். நாமும் அந்த காந்த ஆற்றலில் ஊடே ஒருங்கே இனைந்து சென்றால் நமது உடல் குணமின்மையும் தீரும் என்று நம் முன்னோர்கள் அன்றே அறிந்து வைத்துள்ளனர்.