Home ஆன்மீகம் மழையின் அளவை முன்பே கூறும் அமானுஷ்ய கோவில். விழி பிதுங்கும் விஞ்ஞானிகள்

மழையின் அளவை முன்பே கூறும் அமானுஷ்ய கோவில். விழி பிதுங்கும் விஞ்ஞானிகள்

- Advertisement -

மழை வருமா வராதா என்பதை பொதுவாக எல்லோரும் வானத்தை பார்த்து அறிவது தான் வழக்கம். அனால் ஒரே ஒரு ஊரில் உள்ள மக்கள் மட்டும் வானத்தை பார்க்கமாட்டார்கள். மாறாக அங்குள்ள கோயிலிற்கு சென்று அறிவார்கள். ஆம் மழை வருமா இல்லையா என்பதை முன்கூட்டியே தெரிவிக்கும் ஒரு அதிசய கோவில் உள்ளது. வாருங்கள் அதை பற்றி விரிவாக பார்ப்போம்.

images1

- Advertisement -

தொழில் நகரமான கான்பூருக்கு அருகே உள்ளது ஜகன்னாத் கோவில். சுமார் 1000 வருடங்கள் பழமையான இந்த கோவிலின் மேற்கூரையில் இருந்து வருடா வருடம் திடீரென நீர் சொட்டுகிறது.

சொட்டும் நீரின் அளவை பொறுத்து அந்த வருடம் எவ்வளவு மழை பொழியும் என்பதை அந்த ஊர் மக்கள் அறிந்துகொள்கின்றனர்.

திடீரென மேற்கூரையில் இருந்து எப்படி நீர் சொட்டுகிறது என்று அந்த கோவிலின் பூசாரி பல ஆண்டுகளுக்கு முன்பு ஆய்வு செய்திருக்கிறார் அனால் அவரால் அதை கண்டுபிடிக்கமுடியவில்லை.

அதன் பிறகு இது குறித்து பல ஆய்வாளர்கள் இங்கு வந்து ஆய்வு செய்திருக்கிறார்கள் அனால் அவர்களாலும் எதையும் கண்டுபிடிக்கமுடியவில்லை. இன்று வரை அங்கு நீர் எப்படி சொட்டுகிறது என்பது மர்மமாகவே உள்ளது.

இந்த கோவிலை சுற்றியுள்ள கிராம மக்கள், இங்கு சொட்டும் நீரின் அளவை பொறுத்தே அந்த வருடத்தில் என்ன பயிரிடலாம் என்பதை முடிவு செய்கின்றனர். அதோடு இந்த கோவிலில் உள்ள கடவுளுக்கு வருடாவருடம் சிறப்பு பூஜை செய்தும், அதிக அளவில் நீர் சொட்ட வேண்டும் என்றும் பிராதிக்கின்றனர்.

- Advertisement -
96,044FansLike