குரங்கணியில் மாணவிகள் செயலால், முகம் சுளித்த கிராம பொதுமக்கள் – புகைப்படம் உள்ளே

0
5

தேனிமாவட்டத்தில் போடியை அடுத்து குரங்கணி மலை உள்ளது. இந்த மலையில் கடந்த 11-03-2018ம் தேதியன்று சென்னை,கோயமுத்தூர் மற்றும் ஈரோட்டை சேர்ந்த சுமார் 39 பேர் ட்ரக்கிங் சென்றனர்.

theni2

கடந்த ஒருவார காலமாக தேனியை ஒட்டியுள்ள காட்டுப்பகுதிகளில் ஏற்பட்ட தீ படிப்படியாக அதிகரித்து 11-03-2018 மதியம் குரங்கணி மலையில் ட்ரக்கிங் சென்றவர்களின் பகுதியை சூழ்கின்றது. திடீரென்று காட்டுத்தீ காற்றின் வேகத்தில் அதிகரித்ததால் காட்டுத்தீயின் பிடியிலிருந்து தப்பிக்கமுடியாமல் பலரும் தீயில் சிக்கி படுகாயமடைந்தனர்.

தீயிலிருந்து தங்களை தற்காத்துக்கொள்ள முயன்று பாறைகளை நோக்கி கீழே விழுந்தவர்களில் 10 பேர் இதுவரையிலும் தீக்கிரையாகி உயிரிழந்துள்ளனர்.இந்நிலையில் குரங்கணி காட்டுத்தீயில் சிக்கியவர்களை மீட்க மத்திய அரசின் உதவியுடன் ஹெலிகாப்டர்கள் வரவழைக்கப்பட்டு போடியிலுள்ள ஸ்பைசஸ் பள்ளியின் வளாகத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது.

theni

ஹெலிகாப்டரை கண்டதும் அங்கே வந்திருந்த ஆசிரியர் பயிற்சி பெரும் மாணவிகள் அருகே சென்று விதவிதமாக செல்பி எடுத்துக்கொண்டனர்.பொதுமக்கள் முதலில் இந்த ஆசிரியர் பயிற்சி பெரும் மாணவிகள் தீயில் சிக்கியவர்களை மீட்க வந்தவர்கள் என்று எண்ணியுள்ளனர். பின்னர் இவர்கள் ஹெலிகாப்டரின் அருகில் சென்று செல்பி எடுக்கத்தான் வந்தார்கள் என்று தெரிந்ததும் அங்கிருந்த பொதுமக்கள் பலரும் எரிச்சலடைந்தனர்.

பலஉயிர்கள் தீயில் கருகி உயிருக்கு போராடி கொண்டிருக்கும்போது ஆசிரியர் பயிற்சி பெரும் மாணவர்களே இதுபோன்ற செயல்களில் ஈடுபடலாமா என்று தலையில் அடித்துக்கொண்டனர்.