தமிழ் நாடு மின்சார வாரியம் விதித்துள்ள புதிய கட்டணம்.! இனிமேல் வீட்டிற்கே இவ்வளவு செலுத்தணுமா.!

0
1
tneb

தமிழக அரசு, மின்சார துறையில் கட்டணங்களை உயர்த்த உள்ளதாக இருக்கிறது என்ற திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. தமிழகம் முழுவதும் புதியதாக மின் இணைப்பு பெருபவர்களுக்கு கட்டணம் உயர்த்தப்படும் என்றும், இது சில நாட்களில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்தார்கள்.

This image has an empty alt attribute; its file name is 082425_p1.jpg

சில வாரங்களுக்கு முன்னால் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் சென்னையில் ஆலோசனை கூட்டம் ஒன்று நடத்தியது.இந்த கூட்டத்தில் மின் இணைப்பு கட்டணம் உயர்வு குறித்து பல முடிவுகள் எடுக்கப்பட்டன.முதலில் வீட்டு உபயோகத்தில் உள்ள சிங்கிள் பேஸ் இணைப்பு உள்ள ஒரு கிலோவாட்டுக்கு 200 ரூபாயிலிருந்து 1,000 ரூபாய் வரை கட்டணம் உயர்வு இருக்கும். அதுமட்டுமில்லாமல் 3 பேஸ் இணைப்பு உள்ளவர்களுக்கு ஒரு கிலோ வாட்டுக்கு 600 லிருந்து 1800 ரூபாய் வரை கட்டண உயர்வு இருக்கும் ஆலோசனை கூட்டத்தில் அதிகாரிகள் முடிவெடுத்தனர்.

மேலும் புதிதாக மின் இணைப்பு பெறுபவர்கள் விண்ணப்பிக்கும் கட்டணம் 50 ரூபாயிலிருந்து 400 ரூபாயாக உயரும் என்றும், அதுமட்டுமில்லாமல் வணிகரீதியான, தொழில் சம்பந்தமாக புதிய மின் இணைப்பு வாங்குவோருக்கு ஒரு கிலோவாட்க்கு 500 ரூபாயிலிருந்து 2,000 ரூபாய் வரை கட்டணம் உயர்வு இருக்க வாய்ப்பு உள்ளது. அதிக மின் இணைப்புகள் வேண்டுமென்று விண்ணப்பிப்பவர்களுக்கு ஒரு கிலோவாட்டிற்கு 3,500 ரூபாயாக இருக்கும். ஆனால் தற்போதுஅது 800 ரூபாயாக உள்ளது.

Image result for தமிழ்நாடு மின்சார வாரியம்

தற்போது வரை மின்சாரம் குறித்து எந்த பிரச்சினை ஏற்பட்டாலும் மின் ஊழியர்கள் ஆய்வு செய்வதற்கு கட்டணம் ஏதும் பெற கூடாது. ஆனால் இனிவரும் நாட்களில் மின்சார கோளாறுகள் ஏற்பட்டால் வீட்டுக்கு வந்து ஆய்வு செய்பவர்களுக்கு 580 லிருந்து 1920 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கும் வாய்ப்பு உள்ளது.மேலும் 3 பேஸ் இணைப்பு உள்ளவர்களுக்கு 3810 ரூபாய் வரை வசூலிக்கலாம் என்று பரிந்துரைக்கப்பட்டது.

இதுகுறித்து மின்சார துறையிடம் கேட்டபோது அவர்கள் கூறியது, பொதுமக்களிடம் கட்டண உயர்வு குறித்த தகவலை கூறி அவர்களின் கருத்து கேட்ட பிறகுதான் இந்த அறிக்கைகள் வெளியிடப்படும். மேலும் இந்த மின்சார வாரியம் 2004ஆம் ஆண்டுதான் கட்டண உயர்வு மாற்றியதாகவும், அதற்கு பிறகு எந்த ஒரு கட்டண உயர்வையும் தெரிவிக்கவில்லை என்றும் கூறியிருந்தார்கள் .அதுமட்டுமில்லாமல் 2018-ல் இருந்து 2019ம் ஆண்டுகளில் இதுவரை 29 லட்சம் புதிய மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்கள். மின்சார கட்டணம் உயருமா? குறையுமா? என்ற குழப்பத்தில் மக்கள் உள்ளனர்.