லைசென்ஸ் தொலைந்துவிட்டதா? கவலை வேண்டாம். இனி இணையத்திலே விண்ணப்பிக்கலாம்

0
786
License

ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட், வாகன பதிவு போன்ற முக்கிய ஆவணங்கள் காணாமல் போனால், காவல் நிலையத்திற்கு சென்று காணாமல் போனது குறித்து தகவல் தெரிவித்து அதற்குரிய சான்று பெற்று பின் அதை உரிய அலுவலகத்தில் கொண்டுபோய் கொடுத்து விண்ணப்பித்தால் தான் புதிய ஆவணம் கிடைக்கும்.

police

இதுவே இதுநாள் வரை நடைமுறையில் இருந்ததது. தற்போது, காணாமல் போன ஆவணங்களை மீண்டும் பெறுவதறகான கால அவகாசங்களை குறைக்க, காவல் துறை புதிய ஒரு நடைமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது.

அதன் படி இனிமேல் இணையதளம் மூலமே விண்ணப்பித்து சான்றுகளை பெற முடியும். காவல்துறை இணையதளமான eservices.tnPolice.gov என்ற இணையதளத்திற்கு சென்று தகுந்த விவரங்களை பூர்த்திசெய்து சான்றினை பெறலாம். இது மக்களிடம் நல்ல வரவேற்பை பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறேனது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here