Home ஆன்மீகம் நோயின்றி வாழ்வது எப்படி? சித்தர்கள் கூறிய அற்புத வழிகள்

நோயின்றி வாழ்வது எப்படி? சித்தர்கள் கூறிய அற்புத வழிகள்

- Advertisement -

இன்றைய காலகட்டத்தில் எது சரியான உணவு எது சரியில்லாது உணவு என்பதை கண்டறிவதிலேயே பாதி வாழ்க்கை போய்விடுகிறது. அனால் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஒரு மனிதன் தனது வாழ்க்கை முறையை எப்படி அமைத்துக்கொண்டால் நோயின்றி வாழலாம் என்பதை சித்திகர்கள் ஆராய்ந்து அதனை பல பாடல்கள் மூலமாக கூறியுள்ளனர். அதில் இருந்து சில குறிப்புகளை பார்ப்போம் வாருங்கள்.

arunagiri1

- Advertisement -

ஒரு உணவு ருசியாக இருக்கிறது என்பதற்காக அதை அதிக அளவில் உண்ணக்கூடாது. தேவைக்கு அதிகமாக உணவை உட்கொண்டால் அதுவே நோய் வருவதற்கு ஒரு முக்கிய காரணமாக அமையும்.

வாதம், பித்தம், சிலேத்துமம் என்று சித்த மருத்துவத்தில் வரையறுத்துள்ள இம்மூன்றில் எது ஒன்றின் அளவு கூடினாலும் குறைந்தாலும் நிச்சயம் நோய் உண்டாகும்.

ஒருவருடைய உடலையும், உள்ளத்தையும் ஏன் ஆன்மாவையும் கூட தூய்மை படுத்தும் வல்லமை கடுக்காய்க்கு உண்டு என்று குறிப்பிடுகிறார் திருமூலர். இத்தகைய சிறப்பு வாய்ந்த கடுக்காயில் உள்ள பருப்பை நீக்கிவிட்டு அதை காயவைத்து நன்கு அரைத்து தூளாக்கி, இரவு உணவிற்கு பின்பு அதை ஒரு
ஸ்பூன் அளவு சாப்பிட்டு வந்தால் எந்த நோயும் அண்டாது.

  • பசித்தபின்பு உணவருந்த வேண்டும். அதே போல் நாளொன்றுக்கு 2 முறை உணவு உட்கொள்வதே சிறந்தது.
  • பகலில் உறங்குவதை தவிர்த்து இரவில் மட்டுமே உறங்க வேண்டும்.
  • மாதம் ஒரு முறை புணர்ச்சி கொள்ளவும். பகலில் புணர்ச்சி கூடாது.
  • புளித்த தயிரை உண்பதே சிறந்தது.
  • எண்ணெய் வைத்து தலை முழுகும்போது வெந்நீரில் குளிக்கவேண்டும்.
  • இரவில் வாசனைப் பொருட்களையும் பூக்களையும் முகருதல் கூடாது.
  • இரவில் விளக்கு, மரம், மனிதர் இவைகளின் நிழல்களில் தங்கக் கூடாது.

இவை அனைத்தையும் ஒரு மனிதன் கடைபிடித்தால் நிச்சயம் நோயின்றி நீண்ட காலம் வாழலாம் என்பது சித்தர்களின் வாக்கு.

- Advertisement -
96,044FansLike